Home
News

Jio, Airtel ஆடிப்போச்சு.. இனி Vi App மூலம் ரூ.50,000 பர்சனல் லோன்.. பிக்சட் டெபாசிட்.. கிரெடிட் கார்டு வருது!

ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) மற்றும் பார்தி ஏர்டெல் (Bharti Airtel) ஆகிய முன்னணி நிறுவனங்களை தூக்கி சாப்பிடும்படி வோடபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனமானது, அதனுடைய விஐ ஆப் (Vi App) மூலம் ரூ.50,000 முதல் பர்சனல் லோன் (Personal Loans) மட்டுமல்லாமல், பிக்சட் டெபாசிட் (Fixed Deposits), கிரெடிட் கார்டுகள் (Credit Cards) போன்ற சேவையை கொடுக்கிறது. இதுகுறித்த விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

ஜியோ நிறுவனத்துக்கு சொந்தமாக ஜியோ பைனான்ஸ் (JioFinance) மற்றும் ஏர்டெல் நிறுவனத்துக்கு சொந்தமாக ஏர்டெல் பைனான்ஸ் (Airtel Finance) ஆகிய ஆப்கள் இருக்கின்றன. இவை மூலமாக பர்சனல் லோன், பிக்சட் டெபாசிட், கிரெடிட் கார்டு போன்ற நிதி சேவைகள் கொடுக்கப்படுகின்றன. ஆனால், போட்டி நிறுவனமான வோடபோன் ஐடியா அதை செய்யாமல் இருந்தது.

Jio, Airtel ஆடிப்போச்சு.. இனி Vi App மூலம் ரூ.50,000 பர்சனல் லோன்!

இப்போது, விஐ பைனான்ஸ் (Vi Finance) என்றும் நிதி சேவை பிளாட்பார்மை களமிறக்கி அதை செய்துள்ளது. இதில் விஷயம் என்னவென்றால், அதை விஐ ஆப் மூலம் கொடுக்கிறது. இதனால், வோடபோன் ஐடியா கஸ்டமர்கள் குஷியில் இருக்கின்றனர். ஏனென்றால், இந்த விஐ பைனான்ஸ் மூலம் பிணையம் இல்லாத பர்சனல் லோன்கள் கொடுக்கப்படுகின்றன.

பர்சனல் லோன் (Personal Loans): மற்ற பைனான்ஸ் ஆப்களை போலவே இதிலும் முற்றிலும் பேப்பர்-லெஸ் ப்ராசஸ் இருக்கிறது. ஆகவே, மினிமல் டாகுமெண்ட்கள் மற்றும் ஈசியான கேஒய்சி வெரிபிகேஷன் இருக்கும். அவசரமாக பெறும் கடன்களுக்கு உடனடியாக கிரெடிட் கிடைக்கும். இதில் பிணையம் இல்லாத பர்சனல் லோன்கள் கிடைக்கின்றன.

ரூ.50,000 முதல் பர்சனல் லோன் பெற்று கொள்ளலாம். ஆண்டுக்கு 10.99 சதவீத வட்டியில் இருந்து லோன் கொடுக்கப்படுகிறது. இதற்காக விஐ பைனான்ஸ் நிறுவனமானது, ஆதித்யா பிர்லா கேபிட்டல் (Aditya Birla Capital) நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளது. ஆகவே, உங்களுக்கு ஆதித்யா பிர்லா கேபிட்டல் நிறுவனத்தின் விதிமுறைகளுக்கு ஏற்ப லோன்கள் கொடுக்கப்படும்.

பிக்சட் டெபாசிட்கள் (Fixed Deposits): இந்த நிதி சேவையை கொடுப்பதற்கு அப்ஸ்விங் ஃபைனான்சியல் டெக்னாலஜி (Upswing Financial Technologies) என்னும் பைன்டெக் ஸ்டார்ட்அப் நிறுவனத்துடன் விஐ பைனான்ஸ் கைகோர்த்துள்ளது. முன்னணி பேங்குகளில் இருந்து அதிக வட்டி விகிதத்தில் கிடைக்கும் பிக்சட் டெபாசிட் திட்டங்களை இது கொடுக்கும்.

இதில் நிதி சேவையை பெறும் கஸ்டமர்கள் ரூ.1,000 முதல் முதலீடு செய்து கொள்ளலாம். அவர்களுக்கு 8.4 சதவீதம் வரையில் வட்டி விகிதம் கிடைக்கும். இதுபோக வைப்புத்தொகை காப்பீடு மற்றும் கடன் உத்தரவாதக் கழகம் (Deposit Insurance and Credit Guarantee Corporation) அடிப்படையில் டெபாசிட்கள் இன்சூரன்ஸ் செய்யப்படுகின்றன.

கிரெடிட் கார்டுகள் (Credit Cards): இந்த கிரெடிட் கார்டு சேவையானது, கிரெடிலையோ (Credilio) நிறுவனம் மூலம் கொடுக்கப்படுகிறது. இதில் முன்னணி பேங்குகளான எஸ்பிஐ (SBI), ஆக்சிஸ் பேங்க் (Axis Bank), எச்டிஎப்சி (HDFC) போன்றவற்றில் இருந்து கிரெடிட் கார்டு சேவைகள் கொடுக்கப்படுகிறது. பேப்பர்லெஸ் ப்ராசஸ் இதிலும் கிடைக்கிறது.

மேற்கண்ட பர்சனல் லோன், பிக்சட் டெபாசிட் மற்றும் கிரெடிட் கார்டு சேவைகளை விஐ ஆப் மூலம் பெறுவதற்கு முதலில் அதை அப்டேட் செய்து கொள்ளுங்கள். இந்த ஆப் உங்களிடம் இல்லையென்றால், கூகுள் பிளே ஸ்டோருக்கு சென்று டவுன்லோட் செய்து கொள்ளுங்கள். ஜியோ, ஏர்டெல்லுக்கு நிகரான இப்போது வோடபோன் ஐடியாவும் நிதி சேவைகளை கொடுக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vi App To Offer Personal Loans Starting at Rs 50000 Fixed Deposits Credit Cards With Vi Finance
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X