89 நாட்கள் செல்லுபடியாகும் Vi ஆட் ஆன் திட்டங்கள்- விலை விவரங்கள்!
விஐ 8 புதிய ப்ரீபெய்ட் ஆட் ஆன் திட்டடங்களை அறிமுகம் செய்வதாக அறிவித்துள்ளது. இந்த திட்டத்தில் கிடைக்கும் நன்மைகள் மற்றும் சலுகைகள் குறித்து பார்க்கலாம்.

புதிய ப்ரீபெய்ட் ஆட்-ஆன் திட்டங்கள்
விஐ இந்தியாவில் எட்டு புதிய ப்ரீபெய்ட் ஆட்-ஆன் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டங்கள் கேம்ஸ், ஸ்போர்ட்ஸ் ஆகிய நன்மைகளை வழங்குகிறது. இந்த திட்டங்கள் விஐ பட்டியலில் காண்பிக்கப்படுகின்றன. விஐ அறிவித்துள்ள இந்த திட்டங்கள் 89 நாட்கள் வரை செல்லுபடியாகும், அதேபோல் இது 23 வட்டங்களில் கிடைக்கிறது.

89 நாட்கள் வேலியிட்டி
ஒன்லிடெக் தளத்தில் வெளியிடப்பட்ட பட்டியலின்படி இந்த விஐ திட்டங்கள் 89 நாட்கள் வேலியிட்டியோடு வருகிறது. இந்த திட்டங்கள் ரூ.32 முதல் ரூ.103 வரை இருக்கிறது. இதில் மலிவானது விஐ கேம்ஸ் பேக் திட்டமாகும். இந்த திட்டங்களில் 200-க்கும் மேற்பட்ட கேம்ஸ்களை விளம்பரம் இல்லாமல் விளையாட முடியும்.

எஸ்எம்எஸ் ஸ்கோர் அப்டேட்
அதோடு விளம்பரம் இல்லாமல் கேம்ஸ், கிரிக்கெட் போட்டிகளுக்கு வரம்பற்ற எஸ்எம்எஸ் ஸ்கோர் அப்டேட் தருகிறது. இதன்மூலம் உடனடியாக ஸ்கோர்களை அறிந்துக் கொள்ளலாம். மேலும் சிறந்த சலுகையாக ஸ்டார் டாக் அம்சம் இருக்கிறது. இது பிரபலங்களுடன் பேசுவதற்கான வாய்ப்பை அளிக்கிறது.

ஸ்டார் டாக் மூலம் பிரபலங்களுடன் பேச வாய்ப்பு
ஸ்டார் டாக் மூலம் பிரபலங்களுடன் பேச வாய்ப்பு, எஸ்எம்எஸ் மூலம் ஸ்போர்ட் அப்டேட் அதுமட்டுமின்றி கான்டெஸ்ட் அதாவது போட்டி எனப்படும் நன்மையும் இதில் இருக்கிறது. இதில் பங்கேற்று பரிசுகள், ரீசார்ஜ் வசதிகள் மற்றும் வவுச்சர்களை வெல்வதற்கான வாய்ப்பு உள்ளது.

ரூ.32 முதல் ரூ.103 வரை
இந்த புதிய திட்டங்கள் ரூ.32, ரூ.42, ரூ.43, ரூ.52, ரூ.62, ரூ.72, ரூ.73, ரூ.103 விலையில் கிடைக்கிறது. ரூ.32 திட்டம் கேம்ஸ் நன்மைகளுடன் 28 நாட்கள் வேலிடிட்டியோடு வருகிறது. மேலும் இதில் வரம்பற்ற அழைப்புகளையும் வழங்குகிறது. ரூ.43 திட்டம் ஸ்போட்ஸ் நன்மை(எஸ்எம்எஸ் ஸ்கோர்), அழைப்பு நன்மைகளை 28 நாட்களுக்கு வழங்குகிறது.

28 நாட்கள் செல்லுபடியாகும்
ரூ.52 திட்டத்தில் ஸ்டார் டாக் நன்மை கிடைக்கிறது. இந்த திட்டமும் 28 நாட்கள் செல்லுபடியாகும். அதேபோல் அடுத்து வரும் ரூ.62, ரூ.72, ரூ.73, ரூ.103 திட்டங்கள் அனைத்தும் 89 நாட்கள் செல்லுபடியாகும். இந்த திட்டங்கள் செல்லுபடியாகும் காலம் முழுவதும் வரம்பற்ற அழைப்புகளை வழங்குகின்றன.

ஆட் ஆன் திட்டங்கள்
மேலும் ரூ.62 கேம்ஸ் பயன்பாடு, ரூ.73 ரூ.103 திட்டங்கள் எஸ்எம்எஸ் மூலம் ஸ்போர்ட்ஸ் அப்டேட் வழங்குகின்றன. விஐ அறிமுகம் செய்யும் புதிய ப்ரீபெய்ட் ஆட் ஆன் திட்டங்கள் வாடிக்கையாளர்களை வெகுவாக கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications