ஐபிஎல் வேற ஆரம்பமாக போகுது: விஐ புது ரீசார்ஜ் திட்டத்தில் 1 வருட டிஸ்னி+ ஹாட்ஸ்டார் அணுகல்!
விஐ ஒரு வருட டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் சந்தாக்களுடன் ஆன புதிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்கள் ரூ.501-ல் தொடங்கி ரூ.2,595 வரை கிடைக்கிறது. அதேபோல் இந்த ரீசார்ஜ் திட்டங்களுடன் பயனர்கள் டேட்டா, வரம்பற்ற குரல அழைப்பு, எஸ்எஸ்எஸ் போன்ற நன்மைகளை பெறுகிறார்கள். விஐ நிறுவனமும் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவுடன் வரும் பழைய ப்ரீபெய்ட் திட்டங்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி விஐ போஸ்ட்பெய்ட் திட்டமான ரூ.499 விலையிலேயே ஒரு வருட டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் சந்தா அணுகலை வழங்குகிறது.

டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் சந்தா சலுகை
டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் சந்தா சலுகை வழங்கும் விஐ ரீசார்ஜ் திட்டங்கள் குறித்து அதன் தளத்தில் தெரிவிக்கப்பட்ட விவரங்களை பார்க்கலாம், ரூ.501 விலையில் கிடைக்கும் ரீசார்ஜ் திட்டத்தில், தினசரி 3 ஜிபி டேட்டா மற்றும் கூடுதலாக 16 ஜிபி இணைய சேவை என மொத்தம் 100 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. மேலும் இந்த திட்டத்தில் வரம்பற்ற குரலழைப்பு, தினசரி 100 எஸ்எம்எஸ்கள் வழங்கப்படுகிறது. அதேபோல் இந்த திட்டத்தில் 1 வருடத்துக்கான டிஸ்னி ப்ளஸ் ஹார்ட்ஸ்டார் சந்தா சலுகைகள் வழங்கப்படுகின்றன. இந்த திட்டமானது 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது.

ரூ.701 விலையில் ரீசார்ஜ் திட்டம்
அதேபோல் விஐ ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டமானது ரூ.701 விலையில் கிடைக்கிறது. இந்த திட்டத்தில் தினசரி 3 ஜிபி டேட்டா மற்றும் கூடுதல் 32 ஜிபி டேட்டா என மொத்தம் 200 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. மேலும் இந்த திட்டத்தில் வரம்பற்ற குரலழைப்பு, தினசரி 100 எஸ்எம்எஸ்கள் வழங்கப்படுகிறது. அதேபோல் இந்த திட்டத்தில் 1 வருடத்துக்கான டிஸ்னி ப்ளஸ் ஹார்ட்ஸ்டார் சந்தா சலுகைகள் வழங்கப்படுகின்றன. இந்த திட்டமானது 56 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது.

ரூ.901 விலையில் ரீசார்ஜ் திட்டம்
விஐ ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டமானது ரூ.901 விலையில் கிடைக்கிறது. இந்த திட்டத்தில் தினசரி 3 ஜிபி டேட்டா மற்றும் கூடுதல் 48 ஜிபி டேட்டா என மொத்தம் 300 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. மேலும் இந்த திட்டத்தில் வரம்பற்ற குரலழைப்பு, தினசரி 100 எஸ்எம்எஸ்கள் வழங்கப்படுகிறது. அதேபோல் இந்த திட்டத்தில் 1 வருடத்துக்கான டிஸ்னி ப்ளஸ் ஹார்ட்ஸ்டார் சந்தா சலுகைகள் வழங்கப்படுகின்றன. இந்த திட்டமானது 84 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது.

தினசரி 1.5 ஜிபி டேட்டா
விஐ ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டமானது ரூ.2595 விலையில் கிடைக்கிறது. இந்த திட்டத்தில் தினசரி 1.5 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. மேலும் இந்த திட்டத்தில் வரம்பற்ற குரலழைப்பு, தினசரி 100 எஸ்எம்எஸ்கள் வழங்கப்படுகிறது. அதேபோல் இந்த திட்டத்தில் 1 வருடத்துக்கான டிஸ்னி ப்ளஸ் ஹார்ட்ஸ்டார் சந்தா சலுகைகள் வழங்கப்படுகின்றன. இந்த திட்டமானது 365 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. அதேபோல் ரூ.601 விலையில் டேட்டா ஆட் ஆன் திட்டம் வழங்கப்படுகிறது. இந்த திட்டமானது மொத்தம் 75 ஜிபி டேட்டா உடன் ஒரு வருட டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் சலுகையுடன் கிடைக்கிறது.

பல்வேறு அணுகல்கள்
மேலே இருக்கும் அனைத்து நான்கு விஐ ப்ரீபெய்ட் திட்டத்திலும் பிங்கே ஆல் நைட் சலுகையுடன் வருகிறது. இந்த திட்டத்தில் தொலைத் தொடர்பு நிறுவனம் வரம்பற்ற டேட்டா அணுகலை காலை 12 மணிமுதல் காலை 12 மணி வரை வழங்குகிறது. வார நாட்களில் பயன்படுத்தாத டேட்டாவை வார இறுதி நாட்களில் டேட்டாவை பயன்படுத்தலாம். அதேபோல் விஐ மூவிஸ், டிவி நிகழ்ச்சிகள், லைவ் டிவி மற்றும் செய்திகளுக்கான அணுகலை வழங்கலாம். புதிய விஐ ப்ரீபெய்ட் திட்டங்கள் மற்றும் டேட்டா ஆட் ஆன் திட்டமானது விஐ.காம் தளம், பேடிஎம் மற்றும் கூகுள் பே உள்ளிட்ட அனைத்து தளங்களிலும் கிடைக்கின்றன. விஐ நிறுவனம் போன்றே ஏர்டெல் மற்றும் ஜியோவும் தங்களது திட்டங்களில் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் அணுகலை தங்களது ரீசார்ஜ் திட்டங்களுடன் இணைத்து வழங்குகின்றன.


Click it and Unblock the Notifications