59 லட்சம் வாடிக்கையாளர்கள் இழந்த விஐ, ஏர்டெல்: எண்ணிக்கையை அதிகரித்த ஜியோ!

|

59 லட்சம் வாடிக்கையாளர்களை விஐ, ஏர்டெல் இழந்துள்ளதாகவும் 45 லட்சம் வாடிக்கையாளர்களை ஜியோ கூடுதலாக இணைத்துள்ளதாக டிராய் தெரிவித்துள்ளது.

ஏஜிஆர் நிலுவைத் தொகை

ஏஜிஆர் நிலுவைத் தொகை

தொலைத்தொடர்பு நிறுவனங்கள் சரிசெய்யப்பட்ட மொத்த வருவாயில் ஏஜிஆர் நிலுவைத் தொகையில் 10 சதவீதத்தையும் அடுத்த நிதியாண்டு தொடங்கி 10 தவணைகளாக மீதமுள்ள தொகையை செலுத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் இந்தியாவில் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் கடும் நெருக்கடியை சந்தித்தது என கூறப்படுகிறது.

குறுகிய நாளில் பெரும் வளர்ச்சி

குறுகிய நாளில் பெரும் வளர்ச்சி

உலக அளவில் இரண்டாவது மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் போட்டிப் போட்டுக் கொண்டு சேவைகளை வழங்கி வருகிறது. ஜியோ அறிமுகப்படுத்திய குறுகிய நாளில் பெரும் வளர்ச்சி அடைந்தது என்றே கூறலாம். பிற தொலைத் தொடர்பு நிறுவனங்கள் நிறுவனங்கள் கடும் சவாலை சந்தித்து வருகிறது.

வோடபோன் ஐடியா இணைப்பு

வோடபோன் ஐடியா இணைப்பு

வோடபோன் ஐடியா இணைக்கப்பட்ட நாளில் இருந்து நுகர்வோர் எண்ணிக்கையில் பெரும் சரிவை சந்தித்தது. இணைப்பின் போது சுமார் 408 மில்லியன் பயனர்களாக இருந்த நிலையில் ஜூன் 2020 இறுதிக் கணக்குப்படி சுமார் 208 மில்லியன் பயனர்களை மட்டுமே கொண்டிருந்தது. பெரும் இழப்பை சந்தித்து வரும் வோடபோன் சுமார் ரூ. 50,000 கோடி நிலுவைத் தொகை செலுத்த வேண்டியுள்ளது.

விஐ என்ற புதிய பிராண்ட்

விஐ என்ற புதிய பிராண்ட்

ஆகஸ்ட் 2018 ஆம் ஆண்டில் வோடபோன் இந்தியா மற்றும் ஐடியா செல்லுலார் நிறுவனங்கள் ஒன்றாக இணைந்தன. பிறகு இரு நிறுவனங்களும் இணைந்து வோடபோன் ஐடியா என மறுபெயரிடப்பட்டது. தற்போது தொலைத்தொடர்பு நிறுவனம் புதிய பிராண்ட் ஒன்றை அறிவித்தது. வாடிக்கையாளர்களை தக்க வைக்கவும் அதிகரிக்கவும் வோடபோன் ஐடியா நிறுவனங்கள் ஒன்றிணைந்து விஐ என்ற புதிய பிராண்டை அறிவித்தது. இதன் உச்சரிப்பு வீ ஆகும்.

ஆச்சரிய வீடியோ: ஸ்டைலா, கெத்தா சிகரெட் பிடிக்கும் நண்டு- புகையை உள்ளே இழுத்து விடும் அவலம்!ஆச்சரிய வீடியோ: ஸ்டைலா, கெத்தா சிகரெட் பிடிக்கும் நண்டு- புகையை உள்ளே இழுத்து விடும் அவலம்!

45 லட்சம் பயனர்கள் கூடுதல் இணைப்பு

45 லட்சம் பயனர்கள் கூடுதல் இணைப்பு

இந்த நிலையில் ஜூன் மாதத்தில் இருந்து 45 லட்சம் பயனர்களை கூடுதலாக ரிலையன்ஸ் ஜியோ சேர்த்துள்ளதாகவும் இதன்மூலம் ஜியோ தற்போது உள்நாட்டு வயர்லெஸ் தொலைத் தொடர்பு சந்தையில் சுமார் 35 சதவீதத்தைக் கட்டுப்பாட்டை கொண்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிராய் அறிவித்துள்ள தகவல்

டிராய் அறிவித்துள்ள தகவல்

இதுகுறித்து டிராய் அறிவித்துள்ள தகவலின்படி, விஐ, ஏர்டெல் நிறுவனங்கள் கடந்த ஜூன் மாதத்தில் இருந்து 59 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளது. இதில் கடந்த ஜூன் மாதத்தில் இருந்து விஐ 48.2 லட்சம் மற்றும் ஏர்டெல் 11.3 லட்சம் வாடிக்கையாளர்களையும் இழந்துள்ளதாக வாடிக்கையாளர்களை இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பிராட்பேண்ட் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

பிராட்பேண்ட் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

மேலும் பிற தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு சவால்விடும் வகையில் உச்சியில் அமர்ந்திருக்கும் ஜியோ கூடுதலாக 45 லட்சம் வாடிக்கையாளர்களை இணைத்துள்ளது. குறிப்பாக மே மாத இறுதிக் கணக்குப்படி 68.3 கோடியாக இருந்த பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை ஜூன் மாத இறுதி நிலவரப்படி 69.8 கோடியாக வளர்ச்சிக் கண்டுள்ளது என டிராய் தெரிவித்துள்ளது.

Best Mobiles in India

English summary
VI, Airtel Loss Over 59 Lakh Customers and Jio adds 44.9 Lakh: TRAI

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X