Vi இன் முதல் 5G சேவை "இந்த" நகரத்திற்குத் தான் வருகிறதா? 5ஜி யூஸ் பண்ண புது சிம் கார்டு தேவையா?
இந்தியாவில் தற்போதைய டாப் ஸ்டோரி என்றால், அது 5ஜி நெட்வொர்க்கின் அறிமுகத்தைப் பற்றியதாக தான் இருக்கிறது. எங்கு பார்த்தாலும், 5G எப்போது அறிமுகம்? எங்கே முதலில் இந்த 5ஜி சேவை அறிமுகம் செய்யப்படுகிறது? 5G பயன்படுத்த புது சிம் கார்டு வாங்க வேண்டுமா? என்னுடைய 4ஜி போனில் 5ஜி சேவையை அட்ஜஸ்ட் செய்து பயன்படுத்த முடியுமா என்ற மக்கள் மத்தியில் பல கேள்விகள் எழுந்துள்ளது.

இந்தியாவில் 5ஜி சேவையை விரைவாக கொண்டு வர முடிவா?
இந்த கேள்விகளுக்கான பதிகள்கள் எல்லாம் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக வெளிவரத் துவங்கியுள்ளது. குறிப்பாக, டெலிகாம் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மிகவும் வேகமாக இந்தியாவில் 5ஜி சேவையை பயன்பாட்டிற்குக் கொண்டு வர முழுவீச்சில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இதில் மிகவும் தீவிரமாக வேலை செய்து வருவது ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தான் என்றாலும் கூட, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகிய நிறுவனங்களும் சளைத்ததல்ல என்று நிரூபித்துள்ளன.

Vi ஒன்றும் சளைத்ததல்ல.! அதிரடியாக வெளிவந்த புதிய அறிவிப்பு
ஆம், சமீபத்தில் ஏர்டெல் நிறுவனம் கூட அதன் 5ஜி நெட்வொர்க் சேவையை இந்த ஆகஸ்ட் மாத இறுதிக்குள் இந்தியாவில் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளதாக அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பு வெளியான சில நாட்களில் இப்போது Vi நிறுவனம் கூட 5ஜி நெட்வொர்க் சேவை தொடர்பான புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் படி, டெல்லியில் உள்ள பயனர்களுக்கு வோடபோன் ஐடியா அதன் 5ஜி சேவையை கிடைக்கச் செய்யுமென்று அதிரடியாக அறிவித்துள்ளது.

Vi 5ஜி சேவை தொடர்பாக என்ன அறிவிப்பை வெளியிட்டது?
இந்த அறிவிப்பு இன்று காலை வெளியிடப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. "குட் நியூஸ்! Vi நெட்வொர்க் 5G சேவைக்கு மேம்படுத்தப்படுகிறது! உங்கள் நெட்வொர்க் அனுபவம் இப்போது சிறப்பானதாக இருக்கும், விரைவில் எங்கள் Vi நெட்வொர்க் மூலம் டெல்லி-NCR இல் சிறந்த கவரேஜ் மற்றும் அதிவேக இணையச் சேவையை அனுபவிப்பீர்கள்" என்ற ஒரு அறிவிப்பு Vi பயனர்களுக்கு அனுப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது.

5ஜி சேவைக்காக Vi நீண்ட காலமாக என்ன செய்து வருகிறது தெரியுமா?
உண்மையைச் சொல்லப் போனால், ஜியோ போல Vi நிறுவனமும் 5ஜி சேவையைச் சரியான நேரத்தில் அறிமுகப்படுத்தத் தேவையான அனைத்து விஷயங்களையும் நீண்ட காலமாகச் செய்து வருகிறது. குறிப்பாக, சில காலத்திற்கு முன்பே, தொலைத்தொடர்பு நிறுவனம் அதன் 5G வெளியீட்டிற்கு தேவையான உபகரணங்களுக்காக நோக்கியா மற்றும் எரிக்சன் போன்ற நிறுவனங்களுடன் கூட்டுச் சேர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. Vi நிறுவனம் பல்வேறு இடங்களில் பல சோதனைகளை நடத்தியது.

5ஜி சோதனையில் Vi எவ்வளவு வேகத்தை எட்டியது தெரியுமா?
எரிக்சனின் சமீபத்திய சாப்ட்வேர்களை பயன்படுத்தி புனேவில் 5.92Gbps வேகத்துடன் நிறுவனம் சோதனையை வெற்றிகரமாக முடித்துள்ளது என்பது கவனிக்கத்தக்கது. இந்தியாவில் 5G ஏலம் முடிந்ததும், 5ஜி நெட்வொர்க் சேவைகள் இந்த மாதம் இறுதிக்குள் தொடங்கப்படும் என்று கூறப்பட்டது. அரசு அறிவிப்பின் படி 5ஜி சேவை அக்டோபர் மாதத்திற்குள் பயன்பாட்டுக்கு வரும் என்றும் கூறப்பட்டது.

டில்லியில் 5ஜி சேவையை எப்போது எதிர்பார்க்கலாம்?
அதேபோல், சுதந்திர தினத்தன்று வெளியான தகவல் படி, வரும் செப்டம்பர் 29 ஆம் தேதி நடைபெறும் இந்தியன் மொபைல் காங்கிரஸ் 2022 இல் பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவில் 5G சேவைகளை அறிமுகம் செய்வார் என்று கூறப்பட்டுள்ளது. டில்லியில் 5ஜி சேவையை எப்போது எதிர்பார்க்கலாம் என்ற துல்லியமான தேதியை Vi அறிவிக்கவில்லை. ஆனால், இது விரைவில் அக்டோபர் இறுதிக்குள் தொடங்கப்படும் என்பது மட்டும் இப்போது உறுதியாகியுள்ளது.

இந்த 12 நகரங்களிலும் 5ஜி சேவை விரைவில் அறிமுகம்
நம்முடைய கணிப்பின் படி, அக்டோபர் மாத இறுதிக்குள் இது வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. டெல்லியைத் தவிர, பெங்களூரு, சண்டிகர், காந்திநகர், அகமதாபாத், குருகிராம், மும்பை, புனே ஹைதராபாத், சென்னை, ஜாம்நகர், கொல்கத்தா மற்றும் லக்னோ போன்ற 12 நகரங்களிலும் 5ஜி சேவை விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 5ஜி சேவையைப் பயன்படுத்த புதிய சிம் கார்டு அவசியமா?

5ஜி பயன்படுத்த புது சிம் கார்டு தேவையா?
டெலிகாம் நிறுவனங்கள் அதன் 5ஜி சேவையை, NSA 5G தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தித் தான் அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தொழில்நுட்பத்தில் 5ஜி சேவை செயல்படும் வரை, 5ஜி சேவையின் வேகத்தை அனுபவிக்க உங்களுக்கு ஒரு பிரத்தியேகமான 5G சிம் கார்டு தேவைப்படாது என்பதே உண்மை. இருப்பினும், இந்த புதிய 5வது தலைமுறை நெட்வொர்க்கை முழுமையான வேகத்தில் பயன்படுத்த உங்களுக்கு 5G இணக்கமான சாதனம் தேவைப்படும் என்பதை மறக்காதீர்கள்.


Click it and Unblock the Notifications