Vi காட்டில் மழை.. 180 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் 4G, 5G டேட்டா.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்!
ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel) நிறுவனங்களின் ப்ரீபெய்ட் கஸ்டமர்களுக்கு அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகை கிடைக்கிறது. ஆனால், 4ஜி டேட்டாவில் லிமிட் இருக்கிறது. இதில், விஐ (Vi) நிறுவனமானது, பல்வேறு திட்டங்களில் 4ஜி டேட்டாவையும் (4G Data) அன்லிமிடெட் சலுகையில் கொடுக்கிறது.
அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை பெறுவதற்கு 5ஜி ஸ்மார்ட்போன் இருந்தால் போதும், ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்களின் ப்ரீபெய்ட் கஸ்டமர்களுக்கு அந்த சலுகை கிடைக்கும். ஆனால், 4ஜி டேட்டாவுக்கு தினசரிக்கு லிமிட் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த லிமிட்டை விஐ நிறுவனம் மாற்றிவிட்டது.
4ஜி கஸ்டமர்களாக இருந்தாலும், 5ஜி கஸ்டமர்களாக இருந்தாலும் அன்லிமிடெட் டேட்டா சலுகை கிடைக்கும். ஆனால், 28 நாட்களுக்கு அதிகபட்சமாக 300 ஜிபி டேட்டாவை மட்டுமே பயன்படுத்தி கொள்ள முடியும். இந்த சலுகையுடன் 180 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

விஐ ரூ.2180 திட்டம் (Vi Rs 2180 Plan): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் 180 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. ஆகவே, இந்த நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் 4ஜி டேட்டா (Unlimited 4G Data) கிடைக்கிறது. அதுவே 5ஜி நெட்வொர்க் கிடைக்கும் பகுதியில் இருக்கும் கஸ்டமர்களுக்கு அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) கிடைக்கும்.
எப்படி பார்த்தாலும், தினசரி லிமிட் இல்லாமல், இந்த திட்டத்தில் டேட்டா கிடைக்கும். ஆகவே, இதில் போஸ்ட் டேட்டாவுக்கு (Post Data) இடமில்லை. இருப்பினும், மாதத்துக்கு 300 ஜிபிக்கும் மேல் பயன்படுத்த முடியாது என்ற கேப் (cap) இருக்கிறது. ஆகவே, அதற்கு பிறகு போஸ்ட் டேட்டா ஆக்டிவேட் ஆகலாம்.
நாள் முழுவதும் அன்லிமிடெட் டேட்டா கிடைப்பதால், அன்லிமிடெட் நைட் டேட்டா (Unlimited Night Data), வீக்கெண்ட் டேட்டா ரோலோவர் (Weekend Data Rollover) மற்றும் டேட்டா டிலைட்ஸ் (Data Delights) போன்ற சலுகைகளை இந்த திட்டம் கொடுக்கவில்லை. இருப்பினும் மற்ற சலுகைகள் கிடைக்கிறது.
ஆகவே, 180 நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) கொடுக்கப்பட்டு இருக்கிறது. நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களை கஸ்டமர்கள் அனுப்பி கொள்ளவும் முடியும். இந்த சலுகைகளை ரூ.2180 விலைக்கு விஐ நிறுவனம் கொடுக்கிறது.
இதேபோல வருடம் முழுவதும் அன்லிமிடெட் டேட்டா சலுகை வேண்டுமானால், விஐ ரூ.3900 திட்டத்துக்கு கஸ்டமர்கள் செல்லலாம். இதில் 365 நாட்களுக்கு வேலிடிட்டி கிடைக்கும். இந்த நாட்களில் வாய்ஸ் கால்கள், டேட்டா, எஸ்எம்எஸ் சலுகைகள் கிடைக்கும். ஓடிடி சலுகைகளை இந்த திட்டம் கொடுக்காது.
விஐ ரூ.3900 திட்டம் (Vi Rs 3900 Plan): இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு 365 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த நாட்களில் அன்லிமிடெட் 4ஜி டேட்டா மற்றும் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம். வருடம் முழுவதும் எந்த லிமிட்டும் இந்த திட்டத்துக்கு பொருந்தாது.
மேலும், அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் கிடைக்கும். நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள் கிடைக்கும். 6 மாதங்கள் அல்லது 12 மாதங்கள் வேலிடிட்டியில் கஸ்டமர்களுக்கு தேவையான திட்டத்தை இதில் இருந்து ஆப்ஷனில் எடுக்கலாம். டேட்டாவுக்கு குறை இருக்காது.


Click it and Unblock the Notifications