Home
News

ரூ.1.44 கோடிக்கு எலாம் போன ஸ்டீவ் ஜாப்ஸ் கைப்பட எழுதிய மடல்.. அப்படி என்ன எழுதினார்?

ஸ்டீவ் ஜாப்ஸை தெரியாத ஆளே இருக்க முடியாது. ஆப்பிள் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அத்திபாரியாக மட்டுமே சிலருக்கு இவரை அடையாளம் தெரியும். ஆனால், இவர் உண்மையில் எடுத்த அவதாரங்கள் ஏராளம். இவர் பற்றி எத்தனையோ சுவாரசியமான விஷயங்கள் இருக்கிறது.

ஆனால், சமீபத்தில் இவர் கைப்பட எழுதிய ஒரு லெட்டர் வெளிநாட்டில் ஏலம்விடப்பட்டது. இது எதிர்பார்த்ததை விட அதிகப்படியான விலைக்கு ஏலம் போய்யுள்ளது. இந்த ஏலம் இப்போது உலக நாடுகள் மற்றும் ஆப்பிள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஒரே ஒரே கடுதாசிக்கு இவ்வளவு பெரிய தொகையா? என்ற ஆச்சரியம் எழுந்துள்ளது.

ரூ.1.44 கோடிக்கு எலாம் போன ஸ்டீவ் ஜாப்ஸ் கைப்பட எழுதிய மடல்..

அப்படி அந்த ஒற்றை காகிதத்தில் என்ன எழுதப்பட்டிருக்கிறது என்று தெரிந்துகொள்ள வேண்டிய ஆர்வம் அதிகரித்துள்ளது. காகிதத்தில் எழுதப்பட்டிருக்கும் தகவலை பற்றி அறிந்துகொள்வதற்கு முன்பாக, ஸ்டீவ் ஜாப்ஸ் (Steve Jobs) யார் என்ற விபரத்தை கொஞ்சம் தெரிந்துகொள்ளலாம். ஸ்டீவன் பால் ஜாப்ஸ் என்ற ஸ்டீவ் ஜாப்ஸ் ஒரு அமெரிக்க வணிக அதிபர் ஆவார். இவர் ஒரு கண்டுபிடிப்பாளர் மற்றும் முதலீட்டாளர் ஆவார்.

இவர் ஆப்பிளின் (Apple) இணை நிறுவனர், தலைவர் மற்றும் CEO பொறுப்பில் இருந்தவர். பிக்ஸார் (Pixar) புரொடக்ஷன் இன் தலைவர் மற்றும் பெரும்பான்மை பங்குதாரர் ஆவார். பிக்சரை கையகப்படுத்தியதைத் தொடர்ந்து தி வால்ட் டிஸ்னி (Waltt disney) நிறுவனத்தின் இயக்குநர்கள் குழுவின் உறுப்பினர் ஆனார். நெக்ஸ்ட் (NeXT) இன் நிறுவனர், தலைவர் மற்றும் CEO என்று பல அவதாரங்களை அவரது வாழ்நாளில் எடுத்திருக்கிறார் ஸ்டீவ் ஜாப்ஸ்.

ஆப்பிள் நிறுவனத்தை உருவாக்கிய பிறகு, முதல் தலைமுறையை சேர்ந்த ஐபாட்கள் (iPod) மற்றும் ஐபோன்கள் (iPhone) இவர் உலகிற்கு அறிமுகம் செய்தார். இந்த முதற் தலைமுறை சாதனங்கள் இப்போது பழைய தயாரிப்புகளாகிவிட்டன. இருப்பினும், இதன் மதிப்பு அதிகமாகிக்கொண்டே செல்கிறது. இந்த தயாரிப்புகள் ஏலத்தில் விடப்படுகின்றன. இதற்கு முன்பு ஏலத்தில் அதிக விலைக்கு வாங்கப்பட்டுள்ள சம்பவங்கள் பல முறை நடந்துள்ளன.

இந்த முறை ஆப்பிள்-1 (Apple 1) தயாரிப்பிற்காக ஸ்டீவ் ஜாப்ஸ் கையால் எழுதிய விளம்பர இடுகை (Advertisement draft) ஒன்று பெருந்தொகைக்கு ஏலம் விடப்பட்டுள்ளது. இது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறது. ஸ்டீவ் ஜாப்சீன் கையால் எழுதப்பட்ட குறிப்பிட்ட விளம்பர டிராஃப்ட் ஒன்று RR ஏலத்தில் 1,75,759 அமெரிக்க டாலர் விலைக்கு ஏலம் விடப்பட்டுள்ளது.

ரூ.1.44 கோடிக்கு எலாம் போன ஸ்டீவ் ஜாப்ஸ் கைப்பட எழுதிய மடல்..

இந்திய மதிப்பில் தோராயமாக இது ரூ.1.44 கோடிக்கு மேல் செல்கிறது. கைப்பட எழுதிய ஒற்றை காகிதம் இவ்வளவு பெரிய தொகைக்கு ஏலத்தில் விற்கப்பட்டு இருக்கிறது. ஏலத்தில் (auction) பெருந்தொகைக்கு விற்பனையாகி இருக்கும் இந்த விளம்பரம் ஊடக அறிக்கைகளின்படி, ஆப்பிள் நிறுவனத்தின் ஆரம்ப வருடங்கள் மற்றும் ஒரு தொழில்நுட்ப புரட்சியை கொண்டு வர உதவிய ஸ்டீவ் ஜாப்ஸின் புத்திசாலித்தனம் பற்றிய தகவலை வழங்குகிறது.

இந்த குறிப்பிட்ட விளம்பரம் ஆப்பிள்-1 கம்ப்யூட்டரின் (Apple 1 computer) விவரங்கள் மற்றும் அம்சங்களை பற்றி வெளிப்படுத்துகிறது. இது தவிர ஸ்டீவ் ஜாப்ஸ் சேர்க்க விரும்பிய கூடுதல் தகவல்களையும் இது காட்டுகிறது. அந்த விளம்பரத்தில் "Board only + manual"-ன் விலை 75 அமெரிக்க டாலர் என குறிப்பிடப்பட்டுள்ளது. இது ஒரு ரியல் டீல் என்று விளம்பரத்தில் ஸ்டீவ் ஜாப்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

கூடுதலாக இந்த விளம்பரத்தின் டிராஃப்ட் பேப்பரில் ஸ்டீவ் ஜாப்ஸின் கையொப்பமும் உள்ளது. ஆப்பிள் பிறந்த இடமான அவரது பெற்றோரின் வீட்டு முகவரியும் சேர்க்கப்பட்டு உள்ளது. பிரபல வெப்சைட்டான MacRumors ஏலத்தில் கோடி ரூபாய்க்கும் மேல் விற்கப்பட்டுள்ள ஸ்டீவ் ஜாப்ஸ் எழுதிய பேப்பரானது, உண்மையில் கடந்த 1976 ஆம் ஆண்டு இன்டர்ஃபேஸ் இதழில் வெளிவந்த Apple-1 தயாரிப்பிற்கான விளம்பர டிராப்ட் என குறிப்பிட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Very Rare Steve Jobs Hand Written Letter About Apple 1 Advertisement Draft Sold For 1.44 Crore In RR Auction
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X