மொத்தம் 3 மாசம்.. பகலில் 3GB டேட்டா.. இரவில் அன்லிமிடெட் டேட்டா.. பட்டையை கிளப்பும் BSNL பிளான்!
4ஜி இல்லை, 5ஜி இல்லை, 3ஜி நெட்வொர்க் சரியாக இல்லை.. இப்படியாக பிஎஸ்என்எல் (BSNL) மீது எக்கச்சக்கமான விமர்சனங்கள் இருக்கும் போதிலும் கூட, பிஎஸ்என்எல் அளவிற்கு பரந்த அளவிலான ரீசார்ஜ் திட்டங்களின் தொகுப்பு, தனியார் டெலிகாம் நிறுவனங்களிடம் கூட இல்லை என்பதே நிதர்சனம்.
தன்னிடம் இருக்கும் எல்லா வாடிக்கையாளர்களுக்குமே ஒரே மாதிரியான தேவைகள் இருக்காது என்பதை நன்கு புரிந்து வைத்திருக்கும் பிஎஸ்என்எல், பல எண்ணிக்கையிலான ப்ரீபெய்ட் மொபைல் திட்டங்கள் மற்றும் பேக்குகளை (Prepaid Mobile Recharge and Packs) வழங்கி வருகிறது. அந்த பட்டியலில் - பகலில் 3ஜிபி டேட்டா மற்றும் "இரவில்" அன்லிமிடெட் டேட்டாவை வழங்குமொறு ரீசார்ஜை பற்றிய கட்டுரையே இது!

நாம் இங்கே பேசுவது நைட் அன்லிமிடெட் டேட்டாவுடன் (Night Unlimited Data) வரும் பிஎஸ்என்எல் ரூ.599 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை பற்றித்தான். இதெப்படி பகல் நேரத்தில் 3ஜிபி டேட்டாவையும், இரவு நேரத்தில் அன்லிமிடெட் டேட்டாவையும் வழங்குகிறது? இதன் கீழ் வேறு என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? இதோ விவரங்கள்:
பிஎஸ்என்எல் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டத்தின் நன்மைகள்: இந்த திட்டத்தின் மொத்த வேலிடிட்டி, கிட்டத்தட்ட 3 மாதங்கள் ஆகும்; இன்னும் சரியாக சொல்ல வேண்டுமென்றால் 84 நாட்களாகும். நன்மைகளை பொறுத்தவரை இது லோக்கல் (Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் (Roaming) உட்பட அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ்களையும் வழங்குகிறது.
முன்னரே குறிப்பிட்டபடி, இது ஒவ்வொரு நாளும் 3ஜிபி அளவிலான ஹைஸ்பீட் டேட்டாவை (High Speed Data) வழங்கும். மேலும் ஒவ்வொரு நாளும் நள்ளிரவு 12 மணி முதல் மறுநாள் அதிகாலை 5 மணி வரை 40கேபிபிஎஸ் (40Kbps) என்கிற இண்டர்நெட் ஸ்பீடின் கீழ் அன்லிமிடெட் டேட்டாவையும் வழங்கும்.
பிஎஸ்என்எல் நிறுவனம் இதை நைட் அன்லிமிட்ட் டேட்டா என்று அழைக்கிறது. மேலும் நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 5 மணி வரை என்கிற காலகட்டத்தில் நீங்கள் பயன்படுத்தப்படும் டேட்டாவானது, ஒவ்வொரு நாளும் உங்கள் அக்கவுண்ட்டில் சேர்க்கப்படும் டெய்லி 3ஜிபி டேட்டாவை கொஞ்சம் கூட பாதிக்காது.
எனவே நீங்கள் இரவில் தாமதமாக தூங்கும் பழக்கம் கொண்டவராக இருந்தால், அதே சமயம் உங்கள் பகுதியில் பிஎஸ்என்எல் நெட்வொர்க் மற்றும் இண்டர்நெட் ஸ்பீட் நன்றாக இருந்தால். ரூ.599 க்கு ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் பிஎஸ்என்எல்-ன் இந்த நைட் அன்லிமிடெட் டேட்டா பிளான், உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
டேட்டா, வாய்ஸ் கால், எஸ்எம்எஸ் போன்ற வழக்கமான நன்மைகளுடன் ரூ.599-ன் கீழ் சில கூடுதல் நன்மைகளும் கிடைக்கும். இது இலவச பிஎஸ்என்எல் ட்யூன்ஸ் (BSNL Tunes) , ஸிங் மியூசிக் (Zing Music), ஆஸ்ட்ரோடெல் (Astrotell) மற்றும் கேம்ஆன் (GameOn) போன்ற சேவைகளையு இலவசமாக வழங்குகிறது.
ரூ.599 ரீசார்ஜ் ஆனது பிஎஸ்என்எல்-ன் பெரும்பாலான தொலைத்தொடர்பு வட்டங்களில் ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது. இருப்பினும் இது உங்கள் வட்டத்தில் கிடைக்காமலும் போகலாம். அதை சரிபார்க்க பிஎஸ்என்எல் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ செயலியான பிஎஸ்என்எல் ஆப் (BSNL App) அல்லது பிஎஸ்என்எல் இணையதளத்தை அணுகவும்.


Click it and Unblock the Notifications








