2.1 எம்பி செல்பீ கேமரா, ஆனால் விலை ரூ.6 லட்சம்.!!
வெர்ச்சூ சிக்னேச்சர் டச் ஸ்ம்ராட்போனின் சிறப்பம்சங்களை பொருத்த வரை 5.2 இன்ச் ஃபுல்-எச்டி டிஸ்ப்ளே, சப்பையர் க்ரிஸ்டல் ஸ்கிரீன் வழங்கப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு லாலிபாப் 5.1 இயங்குதளம், ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 810 பிராசஸர், 4ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ள இந்த கருவியில் 21 எம்பி ப்ரைமரி கேமரா, டூயல் டோன் எல்ஈடி ப்ளாஷ் மற்றும் 2.1 எம்பி முன்பக்க கேமராவும் வழங்கப்பட்டுள்ளது. மெமரியை பொருத்த வரை 64 ஜிபி இன்டர்னல் மெமரியும் கூடுதலாக 2000 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் கொண்டிருக்கின்றது.

இத்தனை சிறப்பம்சங்களுக்கும் சக்தியூட்ட 3160 எம்ஏஎச் பேட்டரி வழங்கப்பட்டுள்ளதோடு வயர்லெஸ் சார்ஜிங் அம்சமும் வழங்கப்பட்டுள்ளது. விசேஷமான லெதர் மற்றும் பிரத்யேக வடிவமைப்புகளோடு இந்த கருவியில் பென்ட்லீயின் முப்பறிமான லோகோவும் பொருத்தப்பட்டுள்ளது.

மற்ற நிறுவனங்கள் வழங்கும் அதே சிறப்பம்சங்கள் இருக்கும் இந்த கருவியில் விலை உயர்ந்த லெதர் பயன்பாடு மற்றும் பிரான்டு மதிப்பு போன்றவைகளை காரணம் காட்டி விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த கருவியில் 4கே சப்போர்ட் வழங்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த கருவியானது அமெரிக்காவில் $9,000 ( ரூ.6 லட்சம் ) விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றது.


Click it and Unblock the Notifications