Home
News

சபாஷ்..திருடுபோன செல்போன்களை கண்டுபிடிக்க புது திட்டம்.. வேலூர் காவல்துறை அதிரடி.!

இப்போது உள்ள புதிய புதிய தொழில்நுட்பங்கள் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது. அதுவும் இப்போது அறிமுகமாகும் அதிநவீன செல்போன்கள் மூலம் நமது தினசரி வேலைகள் கூட எளிமையாக்குகிறது என்றே கூறலாம். குறிப்பாக இந்தியாவில் சீன நிறுவனத்தின் செல்போன்களுக்கு தான் அதிக வரவேற்பு உள்ளது.

இந்நிலையில் தொலைந்து போன அல்லது திருடுபோன செல்போன்களை கண்டுபிடிக்க வேலூர் மாவட்ட போலீசார் அசத்தலான திட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளனர். இப்போது இந்த தகவலைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

சபாஷ்..திருடுபோன செல்போன்களை கண்டுபிடிக்க புது திட்டம்..

அதாவது தற்போது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை செல்போன்களை பயன்படுத்தத் துவங்கிவிட்டனர் என்றுதான் கூறவேண்டும். அதிலும் ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன்களை மக்கள் போட்டிப்போட்டு வாங்குகின்றனர் என்றே கூறலாம். முன்பு வீட்டுக்கு ஒரு போன் இருப்பதே ஆச்சரியம் தான். ஆனால் தற்போது ஆளுக்கு ஒரு செல்போன்களை வைத்திருப்பதைக் காண முடிகிறது.

அதேபோல் மக்கள் விலை உயர்ந்த செல்போன்களை பயன்படுத்த தொடங்கிவிட்டதால், இந்த விலை உயர்ந்த செல்போன்களை குறிவைத்து திருட்டு சம்பவங்களும் நடக்கின்றன. இப்போது அறிமுகமாகும் போன்கள் வெறும் பேசுவதற்கு மட்டுமின்றி வங்கி பரிவர்த்தனை, யுபிஐ வசதி, தினசரி வேலைகள் என அனைத்திற்கும் பயன்படுகிறது.

எனவே அனைத்து தேவைகளுக்கும் பயன்படும் இந்த செல்போன்கள் தொலைந்தாலோ அல்லது பறிகொடுத்தாலோ மக்கள் பெரும் பதற்றம் அடைந்து காவல் நிலையத்திற்குச் சென்று புகார் கொடுக்கின்றனர். குறிப்பாக போன் திருடுபோனால் மக்கள் காவல் நிலையங்களுக்குச் சென்று அலைய வேண்டிய நிலைமையும் உள்ளது. பின்பு இதனால் மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாவதோடு நேர விரயமும் கூட ஏற்படுகிறது.

இந்நிலையில் தொலைந்த அல்லது திருடுபோன செல்போன்களை கண்டுபிடிக்க வேலூர் மாவட்ட போலீசார் அசத்தலான திட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளனர். குறிப்பாக தற்போது கொண்டுவந்துள்ள புதிய திடம் மூலம் மக்கள் செல்போன்களை தொலைத்து விட்டாலோ அல்லது திருடுபோய் விட்டாலோ அதனைக் கண்டுபிடிக்க போலீஸ் நிலையம் செல்ல வேண்டிய நிலைமை இருக்காது.

அதாவது செல்போன் தொலைந்து விட்டாலோ அல்லது திருடு போய்விட்டாலோ அது குறித்து புகார் அளிக்க செல் டிராக்கர் (Cell Tracker) எனும் செயலியை அறிமுகம் செய்துள்ளனர். இந்த செயலியில் தொலைந்துபோன பற்றிய விவரங்களைப் பதிவு செய்து புகார் அளித்தால் கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வேலூர் போலீசார் தெரிவித்துள்ளனர்.

சபாஷ்..திருடுபோன செல்போன்களை கண்டுபிடிக்க புது திட்டம்..

இந்த செயலியை தவிர வாட்ஸ்அப் மூலம் கூட புகார் அளிக்கலாம். அதாவது 9486214166 என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கு உரிமையாளரின் விவரத்துடன் ஐஎம்இஐ எணணை அனுப்பி புகார் தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வேலூர் மாவட்டத்தில் தொலைந்த செல்போன் குறித்து வாட்ஸ்அப் அல்லது செயலி மூலம் புகார் கொடுத்தால் போதும் செல்போன் கண்டுபிடித்துத் தரப்படும் என்றும் காவல் நிலையம் செல்லத் தேவை இருக்காது என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
vellore Police has come up with new scheme to trace stolen cell phones : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X