செல்போன் தொலைஞ்சா இதைமட்டும் செய்யுங்க.. எஸ்பி கொடுத்த அருமையான தகவல்.!
இப்போது செல்போன் தேவை மிகவும் அதிகமாக உள்ளது. குறிப்பாக நமது தினசரி வேலைகளை எளிமையாக்குகிறது இந்த செல்போன். இந்நிலையில் காணால் போன மற்றும் தவறவிட்ட சுமார் 9 லட்சம் மதிப்பிலான 60 செல்போன்களை மீட்டு உரியர்களிடம் ஒப்படைத்துள்ளனர் வேலூர் மாவட்ட காவல்துறையினர். மேலும் இதுசார்ந்த தகவலை சற்று விரிவாகப் பார்ப்போம்.

அதாவது வேலூர் மாவட்டத்தில் காணாமல்போன மற்றும் தவறவிட்ட செல்போன்கள் குறித்து வரப்பெற்ற புகார்கள் மீது நடவடிக்கை எடுத்து அவற்றை மீட்பதற்கான பணியில் வேலூர் மாவட்ட சைபர் செல் போலீசார் ஈடுபட்டு வந்துள்ளனர்.

அதன்படி கடந்த 3 மாதங்களில் வேலூர் மாவட்டத்தில் பொதுமக்கள் தவறவிட்ட மற்றும் திருட்டுப்போன சுமார் 9 லட்சம் மதிப்பிலான 60 செல்போன்கள் மீட்கப்பட்டுள்ளது. மேலும் இந்த செல்போன்கள் அனைத்தையும் உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழச்சி, வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

குறிப்பாக இந்த நகழ்ச்சியில் மாவட்ட எஸ்பி ராஜேஷ் கண்ணன் கலந்து கொண்டு மீட்டகப்பட்ட செல்போன்களை உரிய ஆவணங்கள் சரிபார்க்கப்பட்ட பின்னர் சம்பந்தப்பட்டவர்களிடம் வழங்கினார். அதேபோல் செல்போன் கண்டுபிடித்து தரக்கோரி கிடைக்கப்பெற்ற புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், பின்பு தொடர் மீட்பு பணியில் சைபர் செல் ஈடுபட்டுள்ளனர் படிப்படியாக செல்போன்கள் மீட்கப்பட்டு வருவதாகவும் எஸ்.பி
ராஜேஷ் கண்ணா தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இதுகுறித்து எஸ்.பி ராஜேஷ் கண்ணன் பேசுகையில், செல்போன் திருடுபவர்கள் குறிப்பிட்ட நேரத்தில் அதை மாற்றி விடுகிறார்கள். அப்படி மாற்றப்படும் அந்த செல்போனை வேறு யாரேனும் பயன்படுத்த துவங்கிவிட்டால் அதை விரைவாக மீட்க முடியும். ஆனால் இதற்கு செல்போன்தவறவிட்டார்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று தான்.

அதாவது தங்களுக்கு அருகில் இருக்கும் காவல் நிலையத்தில் தங்களது செல்போனின் ஐஎம்இஐ (imei) நம்பரை வைத்தோ அல்லது காணமல் போன செல்போனில் இருந்த தொலைபேசி எண்ணை வைத்தோ புகார் அளிக்க வேண்டும். அதுவும் நேரில் தான் புகார் அளிக்க வேண்டும் என்பது இல்லை. இணையதளம் மூலமாகவும் புகார் கொடுக்கலாம்.

இப்படி புகார் கொடுத்தால், உடனடியாக எங்கள் சைபர் செல் காவல் துறையினர் மீட்கும் நடவடிக்கையை தொடங்கிவிடுவார். குறிப்பாக இதற்கு நேரம் காலம் எதுவும் கிடையாது. காணாமல் போன செல்போன் ஆன் செய்யப்பட்டிருக்கும் பட்சத்தில், அது எப்படிப்பட்ட மொபைல் ஆக இருந்தாலும் உடனே எங்களால் கண்டுபிடிக்க முடியும் என்று கூறினார். எனவே மக்கள் செய்ய வேண்டியது செல்போன் காணாமல் போன உடனே ஐஎம்இஐ வைத்து உடனே புகார் கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார் எஸ்பி ராஜேஷ் கண்ணன்.


Click it and Unblock the Notifications