வேலூர் மக்கள் பீதி: வானத்திலிருந்து விழுந்த மர்ம பொருள் ஏலியனா அல்லது வெடிகுண்டா?

|

வேலூர் மாவட்டத்தில் உள்ள கே.வி குப்பம் பகுதியில் வானத்திலிருந்து மர்மப் பொருள் ஒன்று திடீரென தரையில் விழுந்துள்ளது. வனத்திலிருந்து இரவில் விழுந்த மர்மப் பொருளைக் கண்டு மக்கள் பீதிக்கு உள்ளாகினர். அதற்கான காரணம் என்ன என்பதைப் பார்க்கலாம்.

வானத்திலிருந்து விழுந்த மர்மமான பொருள்

வானத்திலிருந்து விழுந்த மர்மமான பொருள்

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த உள்ள கவசம்பட்டு என்ற பகுதியில் தான் இந்த சம்பவம் நடந்தேறியுள்ளது. வானத்திலிருந்து எதிர்பாராத நேரத்தில் தீடிரென மர்மமான பொருள் தரையில் விழுந்துள்ளது. தரையில் விழுந்த பொருளைக் கண்டு மக்கள் பீதியுற்றதற்கு காரணம் அது பளிச்சிடும் எல்.இ,டி விளக்குகளுடன் கீழே விழுந்தது தான்.

பளிச்சிடும் விளக்குகளுடன் விழுந்த மர்மப் பொருள்

பளிச்சிடும் விளக்குகளுடன் விழுந்த மர்மப் பொருள்

வெள்ளை பெட்டியுடன் பளிச்சிடும் விளக்குகளுடன் தரையில் விழுந்த அந்த மர்மப் பொருளைப், பொதுமக்களில் சிலர் சிறிய வகை ஏலியன் விண்கலம் என்றும், இன்னும் சிலர் இதை வெடிகுண்டு என்றும் பீதியைக் கிளம்பிவிட்டனர். பதட்டத்திலிருந்த அக்கம்பக்கத்தினர் காவல்துறையினருக்கு விஷயத்தைத் தெரிவித்துள்ளனர்.

புதிய 3 ஆப்பிள் ஐபோன் 11, ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 5 & 7ம்-ஜென் ஐபாட் அறிமுகம்! விலை என்ன தெரியுமா?புதிய 3 ஆப்பிள் ஐபோன் 11, ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 5 & 7ம்-ஜென் ஐபாட் அறிமுகம்! விலை என்ன தெரியுமா?

வெடிகுண்டு பார்ஸலா?

வெடிகுண்டு பார்ஸலா?

சம்பவ இடத்திற்கு தடயவியல் வல்லுநர்களுடன் விரைந்து வந்த காவல்துறையினர், மர்மப் பொருளைக் கைப்பற்றி சோதனை செய்துள்ளனர். முதலில் வெடிகுண்டா என்ற நோக்கத்தில் சோதனை செய்யப்பட்டுள்ளது. வெடிகுண்டு இல்லை என்று உறுதியான பின்னர் காவல்துறையினர் அருகில் சென்று சோதனையைத் தொடர்ந்துள்ளனர்.

வானிலை ஆராய்ச்சி சாதனம்

வானிலை ஆராய்ச்சி சாதனம்

வானத்தில் இருந்து விழுந்த மர்மப் பொருள், ஒரு வானிலை ஆராய்ச்சி சம்பந்தப்பட்ட சாதனம் என்பது தெரியவந்துள்ளது. இந்த சாதனம் குறிப்பாக மழை,வெயில், மேகமூட்டம் உள்ளிட்ட வானிலை சம்பந்தமான மாற்றங்களைக் கண்டறியப் பயன்படுத்தப்படுவதாகும்.

வெறும் ரூ.99-க்கு ஆப்பிள் டிவி+ சந்தா: கடுப்பில் மற்ற நிறுவனங்கள்.!வெறும் ரூ.99-க்கு ஆப்பிள் டிவி+ சந்தா: கடுப்பில் மற்ற நிறுவனங்கள்.!

ஜெர்மனி நிறுவனம்

ஜெர்மனி நிறுவனம்

இந்த வானிலை சாதனம் ஒரு சிறிய வகை ரேடியோஸோன்ட்ஸ்(radiosondes) என்பது குறிப்பிடத்தக்கது. இது ஜெர்மனியில் உள்ள கிராவ் ரேடியோஸோன்ட்ஸ்(Graw Radiosondes) என்ற நிறுவனத்தினரால் உருவாக்கப்படுகிறது. பலூனில் இந்த சாதனம் கட்டிவிடப்பட்டு வானிலை மாற்றங்களை ஆராயும். வனத்தில் சென்று கொண்டிருக்கும் பொழுது பலூன் வெடித்து இந்த சாதனம் வேலூரில் விழுந்து பீதியை ஏற்படுத்தியுள்ளது.

சரியான விளக்கத்திற்கு பின் கிடைத்த நிம்மதி

சரியான விளக்கத்திற்கு பின் கிடைத்த நிம்மதி

நள்ளிரவு வரை மக்கள் தூக்கமில்லாமல் பரபரப்பாக ஏலியன் வந்துள்ளது என்றும், வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்றும் பீதியில் நிம்மதி இல்லாமல் சுற்றி திரிந்துள்ளனர். காவல்துறையினரின் சோதனைக்குப் பின் அளிக்கப்பட்ட விளக்கத்தைக் கேட்ட பின்னரே அனைவரும் நிம்மதி ஆனார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

Read more about:
English summary
Vellore Panic: The Object That Fell From The Sky Is Whether Alien Or Bomb : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X