வெளி மாநிலம், மாவட்டம் செல்வதற்கு பாஸ்: தமிழக அரசு அறிவிப்பு., எப்படி பெறுவது தெரியுமா?

|

வெளி மாநிலம் மாவட்டம் செல்வதற்கான பாஸ் தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதை எப்படி பெறுவது என்பது குறித்து பார்க்கலாம்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை

இந்தியா முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 43 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. இதனால் ஏற்பட்ட உயிரிழப்பு 1389 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் குணமடைந்தோர் எண்ணிக்கை 11 ஆயிரத்து 762 ஆக அதிகரித்துள்ளது சற்று ஆறுதல் தரும் தகவலாக உள்ளது.

மகாராஷ்டிராவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை

மகாராஷ்டிராவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை

இந்தியாவில் மகாராஷ்டிராவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13 ஆயிரத்தை எட்டியுள்ளது. நாட்டின் இரண்டாவது மோசமான பாதிப்புக்குள்ளான மாநிலமாக குஜராத் உள்ளது. குஜராத்தில் பாதிப்பு 5,500ஐ நெருங்கியுள்ளது. டெல்லியில் பாதிப்பு 4 ஆயிரத்து 500ஐ கடந்துள்ளது. தமிழகத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மூவாயிரத்து 500ஐ கடந்துள்ளது. மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் பாதிப்பு மூவாயிரத்தை நெருங்கியுள்ளது.

புதிய நோய் தொற்றுகள்

புதிய நோய் தொற்றுகள்

அதேபோல் சமீபத்தில் புதிய நோய் தொற்றுகள் குறித்து பார்க்கையில் டெல்லி (427), குஜராத் (374), பஞ்சாப் (330), தமிழ் நாடு (266), அரியானா (66), ஜம்மு காஷ்மீர் (35) ஆகிய மாநிலங்கள் ஒரே நாளில் அதிக அளவிலான பாதிப்புகளை பதிவு செய்துள்ளன.
தொற்றுநோய்களின் அதிகரிப்பு பஞ்சாபில் எதிர்பாராத விதமாக அதிகரித்துள்ளது. அங்கு கொரோனா நோய்தொற்று, கடந்த இரண்டு நாட்களில், கிட்டத்தட்ட 200 சதவீதம் அதிகரித்துள்ளது.

3-வது கட்டமாக ஊரடங்கு

3-வது கட்டமாக ஊரடங்கு

கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த 3-வது கட்டமாக ஊரடங்கு வருகிற 17-ந் தேதி இரவு வரை தொடர இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஊரடங்கு கட்டுப்பாடுகளை தமிழக அரசு ஓரளவு தளர்த்தி இருக்கிறது. இந்த தளர்வுகள் அனைத்தும் 40 நாட்களுக்கு பிறகு நடைமுறைக்கு வந்துள்ளது.

அதிகம் உள்ள பகுதிகள் சிவப்பு மண்டலம்

அதிகம் உள்ள பகுதிகள் சிவப்பு மண்டலம்

கொரோனா நோய் தாக்குதல் அதிகம் உள்ள பகுதிகள் சிவப்பு மண்டலம் என்றும், நோய் தொற்று குறைவான பகுதிகள் ஆரஞ்சு மண்டலம் என்றும், நோய் தொற்று அறவே இல்லாத பகுதிகள் பச்சை மண்டலம் என்றும் 3 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. அதன்படி தளர்வுகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

கொரோனா தமிழகத்திலும் கோரத்தாண்டவம்

கொரோனா தமிழகத்திலும் கோரத்தாண்டவம்

அதேபோல் கொரோனா தமிழகத்திலும் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இதை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது.

 2,526 கொரோனா வைரஸ் வழக்கு

2,526 கொரோனா வைரஸ் வழக்கு

தமிழகம் 2,526 கொரோனா வைரஸ் வழக்குகளையும் 28 இறப்புகளையும் சந்தித்துள்ளது. அதேபோல் ஒரே நாளில் 527 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து 3 ஆயிரத்து 550 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அரசு மேற்கொண்ட நடவடிக்கை

அரசு மேற்கொண்ட நடவடிக்கை

இதைகட்டுப்படுத்த அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளில் பிரதான ஒன்று ஊரடங்கு உத்தரவு. இந்த உத்தரவினால் பொதுமக்கள் வீட்டிலேயே தங்கி இருந்து வருகின்றனர். அதேபோல் வேலைக்கு சென்றவர்கள், மாற்று இடத்துக்கு சென்றவர்கள் அதே இடத்திலேயே தங்கியுள்ளனர்.

தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம்

தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் ஞாயிற்றுக்கிழமை மாநில மாவட்டங்களில் வாகன இயக்கத்திற்கு மக்கள் இ-பாஸ்களுக்கு விண்ணப்பிக்கக்கூடிய இணைப்பைப் பகிர்ந்துள்ளனர். தற்போது நாடு மே 17 வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

பயணிக்க வாகன பாஸ்

தமிழ்நாடு மாவட்டங்களுக்குள் பயணிக்க வாகன பாஸ் - இணைப்பைப் பின்தொடரவும்

பயண வரம்பின் அடிப்படையில் கட்டுப்பாடுகள்

உங்கள் பயண வரம்பின் அடிப்படையில், கட்டுப்பாடுகள் இருக்கும். நீங்கள் தமிழ்நாடுக்கு வெளியே பயணம் செய்கிறீர்கள் என்றால், வாகன பாஸ் 4 நாட்களுக்கு அனுமதிக்கப்படுகிறது.

தொழில்துறை பாஸைப் பயன்படுத்துங்கள்

இந்த இணைப்பு வழியாக உங்கள் தொழில்துறை பாஸைப் பயன்படுத்துங்கள் - https://tnepass.tnega.org/ மற்றும் தொழில்களைத் தேர்வுசெய்க.

சரியான காரணத்தையும் ஆவணங்களையும் வழங்கவும்

மாவட்டத்திற்கு வெளியே பயணிக்க இரண்டு நாட்கள் பாஸ் செல்லுபடியாகும்.

ஒப்புதல் பெற சரியான காரணத்தையும் ஆவணங்களையும் தயவுசெய்து வழங்கவும்.

jio காட்டுல மழை: குவியும் முதலீடுகள்., சில்வர் லேக் கொடுத்த பெரிய தொகை!jio காட்டுல மழை: குவியும் முதலீடுகள்., சில்வர் லேக் கொடுத்த பெரிய தொகை!

உங்கள் பாஸ் கிடைக்கும்

அதன்பின் சிறிது நேரம் காத்திருக்கவும். உங்கள் விண்ணப்பம் அரசு சார்பில் ஆராய்ந்து காரணம் குறித்து பரிந்துரைக்கப்படும். அதன்பின் அரசு சார்பில் விரைவில் தொடர்புகொள்ளப்படும். அதேபோல் பல முறை விண்ணப்பிக்க தேவையில்லை. சரியான காரணத்திற்காக பயணம் செய்கிறீர்கள் என்றால், உங்கள் பாஸ் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
How to get Vehicle pass to travel from Tamil Nadu to other districts and states!

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X