ஒரே ஒரு கிளிக்: வீடு தேடிவரும் காய்கறிகள், பழங்கள்- எப்படி தெரியுமா?

|

தமிழக தலைநகரான சென்னையில் வீடு தேடி வந்து ஆன்லைன் மூலம் புக் செய்து டெலிவரி செய்யும் வகையில் சென்னை மாநகராட்சி புதிய ஏற்பாடு செய்துள்ளது.

கோவிட் 19 என பெயர்

கோவிட் 19 என பெயர்

சீனா வுகான் மாகாணத்தில் கடந்தாண்டு டிசம்பர் மாதம் விலங்குகளிடம் இருந்து பரவியதாக தெரிவிக்கப்படும் வைரஸ்-க்கு கோவிட் 19 என பெயரிடப்பட்டது. இந்த வைரஸ் ஆனது சீனாவில் அதிவேகமாக பரவிய நிலையில் உலக நாடுகள் எச்சரிக்கை விடுக்கத் தொடங்கியது.

4,421 பேர் கொரோனா வைரஸ் பாதிப்புகள்

4,421 பேர் கொரோனா வைரஸ் பாதிப்புகள்

இந்தியாவில் 4,421 பேர் கொரோனா வைரஸ் பாதிப்புகள் மற்றும் 115 இறப்புகளைப் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு உலக அளவில் வயதானவர்களுக்கு தான் அதிகமாக இருக்கிறது. ஆனால் இந்தியாவில் தலைகீழாக மாறி இருக்கிறது. இது இந்தியாவில் கொரோனா தாக்குதலில் 83 சதவீதத்திற்கு குறைவானோர் 60 வயதுக்கு உட்படுத்தப்பட்டோர் என்பது குறிப்பிடத்தக்கது

ஏப்ரல் 14 ஆம் தேதி வரை 21 நாட்களுக்கு ஊரடங்கு

ஏப்ரல் 14 ஆம் தேதி வரை 21 நாட்களுக்கு ஊரடங்கு

இதையடுத்து ஏப்ரல் 14 ஆம் தேதி வரை 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் மக்கள் வீட்டிலேயே தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதோடு மக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்க முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.

தமிழகத்தின் தலைநகரான சென்னை

தமிழகத்தின் தலைநகரான சென்னை

அதேபோல் தமிழகத்தின் தலைநகரான சென்னையில் கோயம்பேடு சந்தையில் காய்கறிகள் வாங்க வரும் மக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்கும் வகையில் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் கோயம்பேடு அங்காடி நிர்வாகக்குழு சார்பாக புதிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மனிதர்களின் நடமாட்டம் குறைந்ததால் பூமியில் ஏற்பட்ட மிகப்பெரிய மாற்றம்!மனிதர்களின் நடமாட்டம் குறைந்ததால் பூமியில் ஏற்பட்ட மிகப்பெரிய மாற்றம்!

நடமாடும் வாகனங்கள் மூலம் விற்பனை

நடமாடும் வாகனங்கள் மூலம் விற்பனை

நடமாடும் வாகனங்கள் மூலமாக மூலமாக அந்தந்த குடியிருப்பு பகுதிகளுக்கு சென்று தினசரி தேவைகளுக்கு ஏற்றார் போல் 18 வகையான காய்கறிகள் மற்றும் 8 வகையான பழ வகைகளை விநியோகம் செய்யும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் இணையதளம் (www.cmdachennai.gov.in) மூலமாகவும் ஆர்டர் செய்து இந்த சேவையை பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

25 குடும்பங்களுக்கு தேவையான காய்கறிகள் மற்றும் பழங்கள்

25 குடும்பங்களுக்கு தேவையான காய்கறிகள் மற்றும் பழங்கள்

அதன்படி ஒவ்வொரு நடமாடும் காய்கனி விற்பனை வாகனத்தின் மூலம் 25 குடும்பங்களுக்கு தேவையான காய்கறிகள் மற்றும் பழங்களை கோயம்பேடு சந்தையின் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

தொலைபேசி எண்கள்

தொலைபேசி எண்கள்

இதை வாங்குவதற்கென தொலைபேசி எண்கள்: 7305050541/ 7305050542 / 7305050543 / 7305050544 / 9025653376 / 24791133 ஆக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த எண்களுக்கு தொடர்பு கொண்டு தங்களுக்கு தேவையான காய்கறி மற்றும் பொருட்களை ஆர்டர் செய்து கொள்ளலாம்.

காம்போ பாக்கெட் மூலம் விற்பனை

காம்போ பாக்கெட் மூலம் விற்பனை

இதில் பலவகை பொருட்களை ஒரே முறையில் ஆர்டர் செய்யும் விதமாக காம்போ பாக்கெட் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. காய்கறிகள் மற்றும் பழங்கள் கொண்ட தொகுப்பினை Swiggy, Zomato, Dunzo போன்ற டெலிவரி நிறுவனங்கள் மூலமாகவும், அங்காடி நிர்வாக குழு நிர்ணயித்த விலையிலேயே பெற்றுக் கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அனைத்து தரப்பு மக்களுக்கும் டெலிவரி

அனைத்து தரப்பு மக்களுக்கும் டெலிவரி

இந்த சேவையானது அனைத்து தரப்பினரிடமும், குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதிகளில் என அனைத்து பகுதிகளிலும் வாகனங்கள் மூலம் நேரடியாக விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினத்தில் தேவையான காய்கறி மற்றும் பழங்களை மதியம் 1 மணிக்கு முன்னதாக மேல் வழங்கப்பட்டுள்ள முறையின் கீழ் ஆர்டர் செய்யலாம்.

அடுத்த 3 மாதத்திற்கு இதான் விலை: ரீசார்ஜ் விலை குறித்து தொலைத் தொடர்பு நிறுவனங்கள் அதிரடி அறிவிப்பு!அடுத்த 3 மாதத்திற்கு இதான் விலை: ரீசார்ஜ் விலை குறித்து தொலைத் தொடர்பு நிறுவனங்கள் அதிரடி அறிவிப்பு!

மதியம் 1.00 மணிக்கு முன்னதாக ஆர்டர் செய்ய வேண்டும்

மதியம் 1.00 மணிக்கு முன்னதாக ஆர்டர் செய்ய வேண்டும்

இந்த சேவையில் அன்றைய தினமே காய் கனிகளை பெறுவதற்கு மதியம் 1.00 மணிக்கு முன்னதாக பொதுமக்கள் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் இணையதளம் மூலமாகவோ, அல்லது கீழ்கண்ட அலைபேசி எண்கள் மூலமாகவோ ஆர்டர் செய்ய வேண்டப்படுகிறார்கள்.

source: indiatimes.com

Best Mobiles in India

English summary
vegetables and fruits door delivery system started in chennai by Chennai corporation

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X