இந்திய ஏவுகணை வாங்க பல நாடுகள் கடும் போட்டி- பாக்.டாட்டா காட்டிய அரபு நாடுகள்.!
இந்தியாவின் பிரம்மோஸ், ஆக்காஸ், அக்னி உள்ளிட்டவை கண்டம் விட்டு கண்டம் தாக்கும் வகையிலான ஏவுகணைகள் இருக்கின்றன. ஆனால் பாகிஸ்தான்-சீனா கூட்டாக உருவாக்கிய ஏவுகணைகள் குறுகிய வட்டத்தில் மட்டும் செலுத்தக் க
இந்தியாவின் ஏவுகணை தொழில்நுட்பம் மற்றும் ஏவுகணைகளை வாங்க பல்வேறு நாடுகள் முனைப்பு காட்டி வருகின்றன. மேலும், அரபு நாடுகளும் இந்தியாவில் உள்ள தொழில்நுட்பத்தை பார்த்து ஏவுகணைகளை தங்கள் நாட்டிற்கு வாங்க ஆர்வத்தோடு முன்வந்துள்ளன.

இந்தியாவின் பிரம்மோஸ், ஆக்காஸ், அக்னி உள்ளிட்டவை கண்டம் விட்டு கண்டம் தாக்கும் வகையிலான ஏவுகணைகள் இருக்கின்றன. ஆனால் பாகிஸ்தான்-சீனா கூட்டாக உருவாக்கிய ஏவுகணைகள் குறுகிய வட்டத்தில் மட்டும் செலுத்தக் கூடியது. ஆனால் மற்ற நாடுகள் பாகிஸ்தான் ஏவுகணைகள் வாங்க விருப்பம் தெரிவிக்கவில்லை.
இந்நிலையில் இந்தியாவின் ஏவுகணைகளை வாங்க பல்வேறு நாடுகளும் கடும் போட்டி போட்டு முன் வந்துள்ளன. பாகிஸ்தான் ஏவுகணை வாங்க அரபு நாடுகளும் மறுப்பு தெரிவித்துவிட்டன.

இந்தியாவின் ஏவுகணைகள்:
இந்தியாவில் 5,000 கி.மீ. முதல் 9,000 கி.மீ. வரை பாயும் அக்னி -3 ரகங்கள், பிரமோஸ், ஆக்காஸ் உள்பட 9 வகையான ஏவுகணைகள் இருக்கின்றன.

இந்தியாவை நாடும் அமெரிக்கா நாடு :
இந்திய ரஷ்யா தயாரிப்பு ஏவுகணையான பிரம்மோஸ் ஏவுகணையை வாங்க ஆசியான் நாடுகள் முதல் தென் அமெரிக்கா நாடான சிலி உள்ளிட்டு பிரிக்ஸ்-ல் அங்கம் வகிக்கும் தென் ஆப்பிரிக்கா வரை இந்தியாவை நாடி வருகின்றன.

இந்திய சந்தையை கைப்பற்றும் சீனா:
இந்தியா ஏவுகணை ஏற்றுமதி செயல்பாட்டில் மிக மந்தமாக செயல்படுவதால் சீனா அந்த சந்தைகளை கைப்பற்றிவிடுகிறது.

போட்டி போடும் நாடுகள்:
ஆகாஸ் மற்றும் பிரம்மோஸ் ஏவுகணை அமைப்புகளை வாங்க ஆசிய நாடுகள் இந்தியாவை நாடி வருகின்றன.இவை தவிர பிலிப்பைன்ஸ்,அல்ஜீரியா,கிரீஸ்,மலேசியா,தாய்லாந்து,எகிப்து,சிங்கப்பூர் மற்றும் பல்கேரியா ஆகிய நாடுகள் வாங்க முயற்சிப்பதாக பினான்சியல் எக்ஸ்பிரஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

வளைகுடா நாடுகள் ஆர்வம்:
இந்தியா இதுவரை பெரிய ஆயுத அமைப்புகளை ஏற்றுமதி செய்ததில்லை. அதாவது armaments ordnance தவிர. கல்ப் நாடுகளும் ஆகாஸ் ஏவுகணை வாங்க ஆர்வம் தெரிவித்துள்ளன.

இந்தியாவுக்கு பச்சை கொடி காட்டிய ரஷ்யா:
பிரம்மோஸ் ஏவுகணைகளை நட்பார்ந்த நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதில் தங்களுக்கு எந்த ஆட்சேபமும் இல்லை என ரஷ்யா இந்த ஏரோ இந்தியாவில் கூறியிருந்தது.

இந்தோனேசியா இந்தியாவுக்கு ஆதரவு:
இந்தோனேசியா பிரம்மோஸ் ஏவுகணையின் வான் வகை வாங்க முயற்சித்து வருவதாகவும் தகவல்கூறுகிறது.

பல்வேறு நாடுகளும் இந்தியாவுக்கு ஆதரவு:
இப்படி சிறிய நாடுகள் முதல் பெரிய நாடுகள் வரை இந்தியாவின் ஏவுகணைகளை வாங்க முன்வந்து கொண்டிருக்கின்றன.

பலத்த அடி சீனாவுக்கு:
இந்தியா தயாரித்துள்ள ஏவுகணைகளை வாங்க மற்ற நாடுகள் போட்டி போட்டுக்கு கொண்டு வருகின்றன. இதானல் பாகிஸ்தானுக்கும் சீனாவுக்கும் மார்க்கெட்டில் பலத்த அடி விழுந்துள்ளது.

பாகிஸ்தான் தலையில் இடி இறங்கியது:
சீனா-பாகிஸ்தான் தயாரிப்பில் உருவாக்கப்பட்ட ஏவுகணைகளையும் வாங்க அரபு நாடுகளும் முன் வரவில்லை. இதனால் பாகிஸ்தான் தலையில் அடி இறங்கியதை போல இருக்கின்றது.


Click it and Unblock the Notifications