ரயில் பயணிகள் கவனத்திற்கு.. 15 நிமிடங்களுக்கு முன் டிக்கெட் புக்கிங்.. எந்தெந்த ரயில்களில் தெரியுமா?
இந்திய ரயில்வே (Indian Railways) அவ்வப்போது புதிய முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக ரயில்வே அமைப்பு கொண்டுவரும் ஒவ்வொரு வசதியும் பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது. அதேபோல் நாம் ரயிலில் திடீரென்று திட்டமிட்டு பயணம் செய்வதாக இருந்தால் ரயில் டிக்கெட் புக்கிங் செய்யும்போது டிக்கெட் கிடைக்காது. குறிப்பாக இவ்வாறு முன்பதிவு செய்யும்போது உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட் பெறுவது மிகவும் கடினம் என்றே கூறலாம்.
முன்பு ரயிலில் பயணிக்க உங்களுக்கு மிகக் குறைவான விருப்பங்கள் மட்டுமே இருக்கும். அதாவது நீங்கள் கிளம்ப நினைக்கும் நாளுக்கு ஒரு மாதத்துக்கு முன்னரே டிக்கெட் புக்கிங் செய்தால் தான் சீட் கிடைக்கும். ஆனால் தற்போது அப்படி இல்லை. ரயில்வேயின் புதிய விதிகளின்படி, ரயில் புறப்படும் 15 நிமிடங்களுக்கு முன்பு வரை உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்டைப் பெறுவதற்கான விருப்பம் உங்களுக்குக் கிடைக்கும்.

ஆனால் இந்த வசதி தற்போது வந்தே பாரத் ரயில்களில் (Vande Bharat trains) மட்டுமே கிடைக்கும். இந்திய ரயில்வேயின் மிகவும் பிரபலமான வந்தே பாரத் ரயில்களில் 8 ரயில்களில் மட்டும் 15 நிமிடங்களுக்கு முன்பு வரை உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் வசதியை நீங்கள் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயணிகளின் வசதிக்காக தெற்கு ரயில்வே டிக்கெட் முன்பதிவு முறையில் இந்த புதிய மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளது. அதுவும் இந்த புதிய முறையின் கீழ், வந்தே பாரத் ரயில்களின் பாதையில் உள்ள அனைத்து நிலையங்களிலும் பயணிகள் எந்த சிரமும் இல்லாமல் ரயில் டிக்கெட்டுகளை பெறலாம். குறிப்பாக 8 வந்தே பாரத் ரயில்களுக்கு இந்த வசதி தொடங்கப்பட்டுள்ளது. எனவே தெற்கு ரயில்வே சார்பில் 8 வழித்தடங்களில் இயக்கப்படும் வந்தே பாரத் ரயில்களில் புறப்படும் 15 நிமிடங்களுக்கு முன் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்.
குறிப்பாக இந்த வந்தே பாரத் ரயில்களில் சீட் காலியாக இருந்தால், ரயில் புறப்படுதவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பு அவற்றில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம் என ரயில்வே அமைப்பு தெரிவித்துள்ளது. முன்பு வந்தே பாரத் ரயில்கள் ஓரிடத்தில் இருந்து புறப்பட்டுவிட்டால், இருக்கைகள் காலியாக இருந்தாலும் கூட வழியில் உள்ள ரயில் நிலையங்களில் உள்ள பயணிகள் பயணச்சீட்டு முன்பதிவு செய்ய முடியாத நிலை இருந்தது.
ஆனால் தற்போது 8 வழித்தடங்களில் இயக்கப்பட்டு வரும் வந்தே பாரத் ரயில்களில் இருக்கைகள் காலியாக இருந்தால் வழியில் உள்ள ரயில் நிலையங்களிலும் பயணிகள் ரயில் வருகைக்கு 15 நிமிடங்களுக்கு முன்பு வரை டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும். மேலும் இந்த வசதி ஜூலை 17ஆம் தேதி முதல் கொண்டுவரப்பட்டுள்ளது. இப்போது அந்த 8 வந்தே பாரத் ரயில்களின் பட்டியலைப் பார்க்கலாம்.
8 வந்தே பாரத் ரயில்களின் பட்டியல்:
20627 சென்னை எழும்பூர்-நாகர்கோவில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்
20628 நாகர்கோவில்-சென்னை எழும்பூர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்
20631 மங்களூரு சென்ட்ரல் - திருவனந்தபுரம் சென்ட்ரல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்
20632 திருவனந்தபுரம் சென்ட்ரல் - மங்களூரு சென்ட்ரல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்
20642 கோயம்புத்தூர்-பெங்களூரு கன்டோன்மென்ட் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்
20646 மங்களூரு சென்ட்ரல்-மட்கான் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்
20671 மதுரை-பெங்களூரு கன்டோன்மென்ட் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்
20677 டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல்-விஜயவாடா வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்

டிக்கெட் முன்பதிவு செய்வது எப்படி?
டிக்கெட் முன்பதிவு செய்ய நீங்கள் ஐஆர்சிடிசி(IRCTC) வலைத்தளம் அல்லது செயலிக்கு செல்ல வேண்டும். இப்போது நீங்கள் டிக்கெட் முன்பதிவு செய்ய விரும்பும் இடத்தை தேர்வு செய்யவும். அடுத்து பயணம் தேதி, போன்ற முழு விவரங்களையும் நிரப்ப வேண்டும். ரயிலை தேர்ந்தெடுத்த பிறகு உங்களுக்கு விருப்பமான பெட்டியை தேர்ந்தெடுக்க வேண்டும்.
அதன்பின்பு CURR_AVBL டிக்கெட் உங்கள் முன் தோன்றும். இதில் சிறப்பு என்னவென்றால், தற்போது காலியாக உள்ள இருக்கைகளின் விபரங்கள் தெரியும். அடுத்து அந்த காளியாக உள்ள இருக்கைகளின் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்.


Click it and Unblock the Notifications








