வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்.. யுஎஸ்பி சார்ஜிங்.. கேமரா.. அடடே இதுல இவ்வளவு வசதிகள் இருக்குதா? எப்போது வரும்?
இந்திய ரயில்வே அமைப்பு தொடர்ந்து புதிய முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் நாட்டில் முதல் முறையாகப் படுக்கை வசதி மற்றும் பல தொழில்நுட்ப அம்சங்களை கொண்ட வந்தே பாரத் ரயில் (Vande Bharat Sleeper Train)விரைவில் சோதனை ஓட்டம் நடத்தப்படும் என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் தெரிவித்துள்ளார். இது குறித்து விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.
சமீபத்தில் மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் தெரிவித்தது என்னவென்றால், சோதனை ஓட்டங்கள் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டதும், படுக்கை வசதி கொண்ட வந்த பாரத் ரயில் சேவை தொடங்கும் தேதி அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

மேம்பட்ட புதிய தொழில்நுட்ப வசதிகள் மற்றும் படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்களை குறைந்து தொலைவு கொண்ட விரைவு ரயில் சேவைகளில் இணைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அதுவும் தற்போது பயன்பாட்டில் இருக்கும் இருக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயிலை விட படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில் கூடுதல் பாதுகாப்புடன் தயாரிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக பெங்களூரில் இருக்கும் பிஎம்எல் நிறுவனத்தில் இந்த ரயில் தயாரிக்கப்பட்ட நிலையில், அண்மையில் ஐசிஎஃப் ஆலைக்கு மாற்றப்பட்டது. இந்த ஆலையில் வடிவமைப்பில் ஒரு சில பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன்பின்பு லக்னௌவில் இருக்கும் ரயில்வே தரம் மற்றும் வடிவமைப்பு நிறுவனத்துக்குச் சோதனைக்காக அனுப்பப்பட்டு, அங்கு ரயிலில் இயக்கம், பிரேக்கிங், கட்டுப்பாடு, பாதுகாப்பு அம்சம் என பலகட்ட சோதனைகள் முடிந்த பிறகு தான் ரயில் சோதனை ஓட்டத்துக்கு அனுமதிக்கப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அனைத்து சோதனைகளும் முடிக்கப்பட்டு வரும் ஜனவரி 15-ம் தேதி ரயில்வே வாரியத்திடம் ஒப்படைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்பின்னர் தான் இந்த அதிநவீன ரயிலை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு இயக்குவது குறித்து ரயில்வே வாரியம் முடிவெடுக்கும் என இந்திய ரயில்வே தரப்பில் கூறப்பட்டிருந்தது. மேலும் முதல்கட்டமாக 16 ஏசி பெட்டிகள் கொண்டு 10 வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், ஒரு ரயில் தயாரிக்க 120 கோ செலவாகிறது என்று தகவல் வெளியாகி உள்ளது.
அதுவும் படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயிலில் 823 பேர் பயணிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் வந்தே பாரத் ரயில்கள் அனைத்தும் கவாச் பாதுகாப்பு அம்சத்துடன் உருவாக்கப்படுகிறது. சரி இப்போது படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயிலின் சிறப்பு அம்சங்கள் என்னென்ன என்பதை சுருக்கமாகப் பார்க்கலாம்.

1.படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில் முழுவதும் சிசிடிவி கேமராக்கள் உள்ளன.
2.ரயிலின் அனைத்து பெட்டிகளில் தானியங்கி கதவுகள் உள்ளன.
3.ஏசி முதல் வகுப்பில் குளியலறை வசதி உள்ளன.
4.வந்தே பாரத் ரயிலில் பயணிகளுக்கு ஏதேனும் அவசரம் எனில் ஓட்டுநரை தொடர்பு கொள்ளும் வசதி உள்ளது.
5.ரயிலில் ஏதேனும் பேரிடர் என்றால் பயணிகளுக்கு எச்சரிக்கை விளக்கு மூலம் தெரியப்படுத்தப்படும்.
6.ரயிலில் மொபைல் போன்களுக்கான யுஎஸ்பி சார்ஜிங் செய்யும் அமைப்பு உள்ளன.
7.மேல் பெர்த்திற்கு எளிதாக ஏறும் வகையில் சிறந்த படிக்கட்டு அமைக்கப்பட்டு உள்ளன.
குறிப்பாக நாடு முழுவதும் படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் ரயில்வேயின் அனைத்து சேவைகளும் ஒரே செயலியில் பெறும் வகையில் சூப்பர் ஆப் ஒன்றை இன்னும் சில மாதங்களில் பயன்பாட்டுக்குக் கொண்டுவர உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேபோல் படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில் நாடு முழுவதும் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.
photo credit: urbanacres.in, indian railways


Click it and Unblock the Notifications








