Home
News

வந்தே பாரத் ரயிலில் அடிக்கடி போறீங்களா? உங்களுக்கு ஒரு குட் நியூஸ்.. வருகிறது புதிய வசதி..

இந்திய ரயில்வே அமைப்பு தொடர்ந்து பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் வந்தே பாரத் ரயிலுக்கான (Vande Bharat trains) பயணச்சீட்டு முன்பதிவு செய்யும் போது உணவைத் தேர்வு செய்யாவிட்டாலும் ரயிலில் ஏறிய பிறகும் உணவு பெறும் சேவை அறிமுகம் செய்துள்ளதாக ரயில்வே அமைப்பு தெரிவித்துள்ளது. இது குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.

அதாவது வந்தே பாரத் ரயிலில் பயணம் செய்யும் பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது உணவு விருப்பங்களைத் தேர்வு செய்யாவிட்டாலும் கூட ரயிலில் ஏறிய பிறகும் உணவு வாங்கிக் கொள்ளும் வகையில் புதிய சேவை அறிமுகம் செய்துள்ளதாக ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.

வந்தே பாரத் ரயிலில் அடிக்கடி போறீங்களா?  உங்களுக்கு ஒரு குட் நியூஸ்..

குறிப்பாக டிக்கெட் முன்பதிவின் போது உணவு வேண்டும் என்று தேர்வு செய்யாத பயணிகள், ரயிலில் பயணிக்கும்போது, பணம் செலுத்தி உணவு பெற விரும்பினாலும் கூட ஐஆர்சிடிசி (IRCTC) ஊழியர்கள் உணவு வழங்குவதில்லை என்று நிறையப் பயணிகள் புகார் கொடுத்து வந்துள்ளனர்.

எனவே தற்போது முன்பதிவின் போது, உணவு தேர்வு செய்யாத பயணிகளுக்கும், ரயிலில் உணவு வழங்குவதை ஐஆர்சிடிசி உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்க வேண்டும் என ரயில்வே வாரியம் (Indian Railway) தெரிவித்துள்ளது.

அதேபோல் சமீபத்தில் இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் (IRCTC), ரயில்வே தகவல் அமைப்புகள் மையம் (CRIS) உடன் இணைந்து ஸ்வாரெயில் (SwaRail) என்ற புதிய டிக்கெட் புக்கிங் மொபைல் ஆப்ஸை அறிமுகம் செய்தது. இந்த செயலியானது கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் பதிவிறக்கம் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

'SwaRail' SuperApp ஆனது முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட், முன்பதிவு செய்யப்படாத டிக்கெட், பிளாட்ஃபாரட் டிக்கெட் முன்பதிவு, பார்சல் மற்றும் சரக்கு விசாரணைகள், ரயில் மற்றும் PNR நிலை விசாரணைகள், ரயில்களில் உணவு ஆர்டர்கள், புகார் மேலாண்மைக்கான ரயில் மடாட் போன்ற பல்வேறு சேவைகளை ஒருங்கிணைக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இதில் தனிப்பட்ட ஒரு கடவுச் சொல்லை வைத்து உள்நுழைவதன் மூலம் அனைத்து சேவைகளையும் பெற முடியும் என்பது தான் சிறப்பு. தற்போதைய பயன்பாட்டில் உள்ள ஐஆர்சிடிசி IRCTC ரெயில்கனெக்ட், யுடிஎஸ் மொபைல் ஆப் போன்ற தனித்தனி செயலிகளில் உள்ள எல்லா பயன்பாடுகளும் இந்த ஒரே SwaRail செயலியில் கிடைக்கும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

வந்தே பாரத் ரயிலில் அடிக்கடி போறீங்களா?  உங்களுக்கு ஒரு குட் நியூஸ்..

குறிப்பாக m-PIN அல்லது பயோமெட்ரிக் முறையைப் பயன்படுத்தி எளிதாக SwaRail செயலியை பயன்படுத்தும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இதுவரை ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய IRCTC Rail Connect சிறந்த தேர்வாக இருக்கும். ஆனால் ரயில்வே தொடர்பான அனைத்து சேவைகளையும் ஒரு இடத்தில் கிடைக்கும் வகையில் உருவாக்கப்பட்ட SwaRail ஆப் இனி ஒரு சிறந்த செயலியாக இருக்கும் என்று கூறுகிறது ரயில்வே துறை.

இந்த SwaRail ஆப் ஆனது பீட்டா சோதனையில் இருப்பதால், பயனாளிகள் தமது அனுபவங்களையும் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்வதற்கும், அதனடிப்படையில் மேலும் செயலியை மேம்படுத்துவதற்கும் இன்னும் அதிக வாய்ப்பு உள்ளது. விரைவில் இந்த புதிய ஆப் ஆனது அனைத்து மக்களுக்கும் பயன்படுத்தக் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vande Bharat passengers can now buy food without reservation: check details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X