"Google Map பொய் சொல்லாது" செங்குத்து பாதையில் சிக்கிய வேன்: கடைசியில் நடந்த அதிர்ச்சி

|

கூகுள் மேப் காட்டிய பாதையில் சென்று சரிவு பாதையில் சிக்கியதோடு இரவு முழுவதும் அதே வழியில் வாகனத்தை எந்த புறமும் இயக்கமுடியாமல் சிக்கியுள்ளார்.

ஆட்டோ டிரைவர்களை தான் தேடுவோம்

ஆட்டோ டிரைவர்களை தான் தேடுவோம்

முன்பெல்லாம் ஒரு இடத்திற்கு வழி தெரியவில்லை என்றால் உடனடியாக அருகில் உள்ள ஆட்டோ டிரைவர்களை தான் தேடுவோம். இடத்தை சொன்னால் போதும் எந்த இடத்தில் டிராபிக் அதிகம், எந்த வழியாக செல்லலாம் என அனைத்தையும் துல்லியமாக தெளிவுப்படுத்தி விடுவார்கள்.

கோமாளி திரைப்படத்தின் காட்சி

கோமாளி திரைப்படத்தின் காட்சி

இதுபோன்ற வழிதேடும் காட்சி ஒன்று கோமாளி திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும். அதில் ஜெயம்ரவி, யோகிபாபு, காஜல் அகர்வால் உள்ளிட்டோர் பயணிப்பனர். அப்போது கூகுள் மேப் காட்டும் வழியை வைத்து செல்லுகையில் இறுதியாக மயானத்தில் வந்து முடியும் இந்த காட்சி சமூகவலைதளங்களில் பெரிய அளவில் வைரலானது. அதன்பின் ஆட்டோ டிரைவரிடம் கேட்டுதான் சரியான பாதையில் செல்வார்கள்.

வாஸ்கோட காமாவாக மாறும் நண்பர்

வாஸ்கோட காமாவாக மாறும் நண்பர்

தெரியாத ஒரு இடத்திற்கு செல்லும் போது வழி தெரிந்த நண்பர் ஒருவர் முன்னாள் சென்று வழிகாட்டுவது வழக்கம். அப்படி காட்டும் வழி சில சமயங்களில் தவறாகும் பட்சத்தில் இவரு பெரிய வாஸ்கோட காமா முன்னாடி சென்று வழிகாட்டுகிறார். அப்படி என்று கிண்டல் செய்வதை கேள்விபட்டிருப்போம்.

ரயில் டிக்கெட்: இப்படி கூட மோசடி நடக்குமா? சிக்கிய ஆன்லைன் ஏஜெண்டுகள்.!ரயில் டிக்கெட்: இப்படி கூட மோசடி நடக்குமா? சிக்கிய ஆன்லைன் ஏஜெண்டுகள்.!

கண்ண மூடிகிட்டு போகலாம்

கண்ண மூடிகிட்டு போகலாம்

இப்போதெல்லாம் வாஸ்கோட காமாவும் இல்ல, ஆட்டோ டிரைவரும் இல்ல, கண்ண மூடிகிட்டு போகலாம் என்ற மாதிரி ஆரம்ப இடம் முடியும் இடம் இரண்டையும் டைப் செய்து கூகுள் மேப் உதவியுடனே செல்கின்றனர்.

தேவைக்கு மட்டும் பயன்படுத்தினால் நல்லது

தேவைக்கு மட்டும் பயன்படுத்தினால் நல்லது

தொழில்நுட்பங்கள் வளர்ந்து வரும் காலத்தில் இதுபோன்று வளர்ச்சி தேவைதான் என்றாலும், தேவைக்கு மட்டும் பயன்படுத்தினால் நல்லது.இந்த நிலையில் கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து குரூப் வேன் ஒன்று வார விடுமுறையை கொண்டாடுவதற்காக ஊட்டிக்கு வந்தனர்.

ஓட்டுநர் உணவு அருந்தி வண்டியை எடுத்து சென்றுள்ளார்

ஓட்டுநர் உணவு அருந்தி வண்டியை எடுத்து சென்றுள்ளார்

இவர்கள் ஊட்டி படகு மூலம் அருகில் உள்ள ஒரு விடுதியில் தங்க முன்கூட்டியே புக் செய்துள்ளனர். இதையடுத்து சுற்றுலாப் பயணிகள் அனைவரையும் விடுதியில் இறக்கிவிட்டு வேன் ஓட்டுநர் உணவு அருந்தி வண்டியை பார்க் செய்வதற்கு விடுதிக்கு வந்துள்ளார்.

ஜிபிஎஸ் மூலம் கூகுள் மேப்

ஜிபிஎஸ் மூலம் கூகுள் மேப்

அப்போது மொபைல் போனை பயன்படுத்தி ஜிபிஎஸ் மூலம் கூகுள் மேப் பயன்படுத்தி வாகனத்தை இயக்கியுள்ளார். மேப் காண்பிக்கு வழியிலே சென்ற டிரைவர் குறுகிய பாதை ஒன்றில் சென்றுள்ளார். பாதை குறுகியதாக இருக்கிறதே என்று மனதில் ஒரு குழப்பம் இருந்தாலும் கூகுள் மேப் பொய் சொல்லாது என்று ஒரு நம்பிக்கை வாகனத்தை தொடர்ந்து இயக்கி உள்ளார்.

செங்குத்து பாதையில் சிக்கிய ஓட்டுனர்

செங்குத்து பாதையில் சிக்கிய ஓட்டுனர்

அந்த பாதை செங்குத்தாக கீழே இறங்கியுள்ளது வாகனத்தை மெதுவாக இயக்கி வந்த ஓட்டுநருக்கு திடீரென அதிர்ச்சி காத்திருந்துள்ளது. பாதையின் ஒரு கட்டத்தில் இரும்பு தூன்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதையடுத்து வாகனத்தை பின்னால் எடுக்க முயற்சித்துள்ளார். பாதை செங்குத்தாக இருந்ததால் வாகனம் பின்னால் எடுக்க முடியவில்லை.

வாகனத்தை நிறுத்திவிட்டு தூங்கிய ஓட்டுனர்

வாகனத்தை நிறுத்திவிட்டு தூங்கிய ஓட்டுனர்

இதையடுத்து வாகனத்தை அங்கேயே நிறுத்திவிட்டு தூங்கிவிட்டார். காலை எழுந்து பார்த்தபோது தான் தெரிந்துள்ளது. அடுத்த சில மீட்டர் தூரத்தில் ரயில்வே தண்டவாளம் இருந்துள்ளதாகவும் கூறப்படுகிறது, வாகனத்தை முன்புறமும் இயக்கமுடியாமல் பின்புறமும் இயக்கமுடியாமல் சிக்கியுள்ளது.

இழுத்து மூடுவது தான் ஒரே வழி:வோடபோன்., சிக்கலில் ஏர்டெல்: என்ன நடக்கும்?- நீதிமன்ற உத்தரவால் சர்ச்சைஇழுத்து மூடுவது தான் ஒரே வழி:வோடபோன்., சிக்கலில் ஏர்டெல்: என்ன நடக்கும்?- நீதிமன்ற உத்தரவால் சர்ச்சை

கிரேன் உதவியுடன் மீட்பு

கிரேன் உதவியுடன் மீட்பு

இதன்பிறகு காலை 11 மணியளவில் கிரேன் உதவியுடன் மீட்டுள்ளனர். இரவு முழுவதும் வாகன ஓட்டுநர் நடுவில் மாட்டுக் கொண்ட சம்பவம் பரிதாபமானது என்றும் இதுபோன்ற பாதைகள் இருக்கும் இடத்தில் பலகை வைக்க வேண்டும் என்ற பிற ஓட்டுநர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Best Mobiles in India

English summary
Van driver struggled in ooty after following google maps

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X