Home
News

லேட்டா அடிச்சாலும் நச்சுனு லேட்டஸ்ட்டா அடிச்சுட்டான்யா! VAIO அறிமுகம் செய்த புது டேப்லெட்! விலை என்ன தெரியுமா?

ஏறக்குறைய ஒரு தசாப்தத்திற்கு முன்பு சோனியிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட பிராண்டான வயோ (VAIO), பிசி சந்தையில் இன்னும் முன்னிலையில் உள்ளது. லேப்டாப் சந்தையில் சில விண்டோஸ் லேப்டாப்களை வைத்திருக்கும் இந்நிறுவனம், தற்போது டேப்லெட் சந்தையில் சைலெண்டாக நுழைந்துள்ளது.

சில பல காலமாக இந்த பெயர் எங்குமே அடிபடாமல் இருந்து வந்தது. இப்படி ஒரு பிராண்ட் இருந்தது என்பதே சிலருக்கு மறந்தும் போனது. லேப்டாப் சந்தையில் தனக்கென்று ஒரு தனி ராஜ்ஜியத்தையே உருவாக்கி வைத்திருந்த Sony VAIO இப்போது மீண்டும் தலைப்பு செய்திகளில் எட்டிப்பார்க்க துவங்கியுள்ளது. ஆம், நீண்ட இடைவெளிக்கு பிறகு வயோ நிறுவனம் புதிய சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது.

லேட்டா அடிச்சாலும் நச்சுனு லேட்டஸ்ட்டா அடிச்சுட்டான்யா! VAIO டேப்லெட்!

அதுவும், யாரும் எதிர்பார்த்திடாத வகையில் புதுமையான கேட்டகிரியில் அதன் புதிய சாதனத்தை அறிமுகம் செய்து, உலக மக்களின் கவனத்தை இப்போது VAIO தன்பக்கம் திருப்பியுள்ளது. VAIO நிறுவனம் இப்போது அதன் போர்ட்போலியோவில் VAIO TL10 என்ற புதிய டேப்லெட் சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. இது ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் இயங்கும் டேப்லெட் சாதனமாகும். உண்மையை சொல்ல போனால், இது நிறுவனத்தின் முதல் டேப்லெட் சாதனமாகும்.

இந்த புதிய VAIO TL10 Tablet சாதனத்தை 2-இன்-1 கணினியாகப் பயன்படுத்தவும் முடியுமாம். இந்த டேப்லெட் சந்தானத்துடன் போர்ட்டபிள் கீபோர்டு கருவியையும் நிறுவனம் சேர்த்து வழங்குகிறது. இதனை டேப்லெட் உடன் இணைத்து, நீங்கள் இதை ஒரு சிறிய கம்ப்யூட்டர் சாதனம் போல பயன்படுத்திக்கொள்ளலாம் என்று வயோ தெரிவித்துள்ளது. வயோ TL10 டேப்லெட் ஆனது 2000 x 1200 பிக்சல் தெளிவுத்திறனுடன் இயங்கும் 10.4' இன்ச் IPS LCD டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது.

இது மிக துல்லியமான வீடியோ அனுபவத்தை வழங்குகிறது. இந்த புதிய வயோ TL10 டேப்லெட் சாதனம் அதன் ஹூட்டின் கீழ், UNISOC Huben T616 சிப்செட்டை கொண்டுள்ளது. இது Mali-G57MP1 GPU உடன் இணைக்கப்பட்டு இயக்கப்படுகிறது. ஸ்டோரேஜ் அம்சத்தை பற்றி பேசுகையில், இந்த வயோ TL10 டேப்லெட் சாதனம் 8 ஜிபி LPDDR4x ரேம் மற்றும் 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் வருகிறது.

லேட்டா அடிச்சாலும் நச்சுனு லேட்டஸ்ட்டா அடிச்சுட்டான்யா! VAIO டேப்லெட்!

இந்த டேப்லெட் டிவைஸ் இன் கேமரா அம்சத்தை பற்றி பேசுகையில், இது 8MP ரியர் கேமரா மற்றும் 5MP முன்பக்க ஸ்னாப்பருடன் வருகிறது. இந்த VAIO TL10 டேப்லெட் சாதனம் டூயல் சிம் உடன் 4G LTE இணக்கமானது. இது Wi-Fi 5 மற்றும் புளூடூத் 5.0 அம்சத்தை ஆதரிக்கிறது. இது ஆண்ட்ராய்டு 13 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்குகிறது. இந்த VAIO TL10 டேப்லெட் சாதனத்தில் 3.5 மிமீ ஹெட்ஃபோன் ஜாக் உடன் ஸ்டீரியோ டூயல் ஸ்பீக்கர்கள் வழங்கப்பட்டுள்ளது.

இது 18W சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 7,000mAh பேட்டரியை பேக் செய்கிறது. இந்த VAIO TL10 ஆண்ட்ராய்டு டேப்லெட் பிரேசிலில் 1,799 பிரேசிலியன் ரியல்களின் விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது சுமார் $363 ஆகும். இந்திய மதிப்பின் படி, இது தோராயமாக ரூ. 29,739 என்ற விலையை நெருங்குகிறது. வயோ நிறுவனம் முதற்கட்டமாக பிரேசில் சந்தையில் இந்த சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. மற்ற சந்தைகளுக்கும் இந்த சாதனம் விரைவில் கொண்டுவரப்படும் என்று கூறப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
VAIO TL10 Android tablet launched with portable keyboard to use the device as a 2-in-1 computer
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X