Home
News

சாதா ஹெல்மெட் தூக்கி போடுவாங்க.. வந்தாச்சு ஏசி ஹெல்மெட்.. சில்லுனு காத்து.. இனி வெயிலை சமாளிக்க முடியும்..

சுட்டெரிக்கும் கோடைக் காலம் வந்துவிட்டது. கடந்த மார்ச் முதலே வெயில் அதிகமாக உள்ளது. அதுவும் தற்போது பகல் நேரத்தில் வெளியில் செல்ல முடியாத அளவுக்கு வெயில் வாட்டி வதைத்து வருகிறது என்பது தான் உண்மை.

அதேபோல் இந்த கோடைக் கால பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் உடல் வெப்பத்தினால் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் ஏசி ஹெல்மெட் (air conditioned helmets) ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஹெல்மெட் அணிவதன் மூலம் குளிர் காற்று வீசும். மேலும் இந்த ஹெல்மெட் எப்படிச் செயல்படுகிறது மற்றும் இது பொதுமக்களுக்கு கிடைக்குமா என்பது குறித்து விரிவாகப் பார்க்கலாம்.

சாதா ஹெல்மெட் தூக்கி போடுவாங்க.. வந்தாச்சு ஏசி ஹெல்மெட்..

நாம் வேலை நிமித்தமாக வெயிலில் பயணம் செய்தாலும் கூட குறிப்பிட்ட சில நிமிடங்கள் நம்மால் ஓய்வெடுத்துக் கொள்ள முடியும். ஆனால் போக்குவரத்து போலீசாரின் நிலைமை என்பது முற்றிலும் வேறுபட்டது. அதாவது இந்த சுட்டெரிக்கும் வெயிலில் கூட அவர்கள் போக்குவரத்தை சரிசெய்வதற்கான பணியைக் கண்டிப்பாக மேற்கொள்ள வேண்டும்.

குறிப்பாக இதனால் போக்குவரத்து போலீசார் வெயிலால் ஏற்படும் உடல்நல பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். எனவே இதைக் கருத்தில் கொண்டு கோடையைச் சமாளிக்க குஜராத் மாநிலம் வதோதரா போக்குவரத்து போலீசாருக்கு (Vadodara traffic police) ஏசி ஹெல்மெட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஏசி ஹெல்மெட் அணிவதன் மூலம் அவர்கள் அதிகப்படியான வெயிலில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்.

சாதா ஹெல்மெட் தூக்கி போடுவாங்க.. வந்தாச்சு ஏசி ஹெல்மெட்..

தற்போது வதோதராவில் பணியில் ஈடுபடும் சில போக்குவரத்து போலீசாருக்கு ஏசி ஹெல்மெட் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஹெல்மெட் அணிந்து தான் தற்போது அவர்கள் பணியாற்றி வருகின்றனர். குறிப்பாக இந்த போக்குவரத்து போலீசாருக்கு ஏசி ஹெல்மெட்டை உருவாக்கி கொடுத்தது அங்குள்ள ஐஐஎம் மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐஐஎம் மாணவர்கள் உருவாக்கிய இந்த AC ஹெல்மெட் ஆனது பேட்டரியில் இயங்கும் என்று கூறப்படுகிறது. அதாவது நாம் அணியும் ஹெல்மெட்டின் உள்ளே ஒரு சிறிய வகை பேன் பொருத்தப்பட்டுள்ளது. ஆனால் இந்த பேனால் தலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது.

குறிப்பாக இந்த ஹெல்மெட்டின் உள்ளே பேன் இருக்கும் நிலையில் அதற்கான பேட்டரியை தனியாக போலீசார் இடுப்பில் அணிந்து கொள்வார்கள். மேலும் பேட்டரிக்கும், ஹெல்மெட்டில் உள்ள பேனும் வயர் மூலம் இணைக்கப்பட்டு இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக வெயிலில் இந்த ஹெல்மெட்டை அணிந்து நாம் பணி செய்யும்போதும் பேட்டரியால் இயங்கும் பேன் மூலம் குளிர்காற்று நமக்கு கிடைக்கும்.

குறிப்பாக இந்த ஹெல்மெட் ஆனது தலையில் வியர்வை தேங்குவதைத் தடுக்கும். அதேபோல் உடல் உஷ்னமடைவதை தடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இந்த ஹெல்மெட்டின் பேட்டரியை ஒருமுறை ஃபுல் சார்ஜ் செய்தால் அது அடுத்த 8 மணிநேரம் வரை பயன்பாட்டில் இருக்கும். எனவே தினசரி வெயிலில் பணி செய்யும் போக்குவரத்து காவல்துறைக்கு இந்த ஹெல்மெட் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும்.

சாதா ஹெல்மெட் தூக்கி போடுவாங்க.. வந்தாச்சு ஏசி ஹெல்மெட்..

இந்த புதியவகை ஹெல்மெட் ஆனது தற்போது போலீசாருக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது இன்னும் மக்கள் பயன்பாட்டுக்கு வரவில்லை. ஒருவேளை மக்களுக்கும் இதுபோன்ற ஹெல்மெட் வழங்கப்பட்டால் பயனுள்ள வகையில் இருக்கும்.

அதேபோல் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வெப்ப அலை அதிகரிக்கும் பாதுகாப்பாக இருக்குமாறு இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதுவும் அறிக்கையில், ஏப்ரல், மே மற்றும் ஜூன் வரையிலான கோடை காலத்தில், இந்தாண்டு வழக்கத்திற்கு மாறாக அதிக வெப்ப அலை வீசும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vadodara traffic police were given special air-conditioned helmets: check details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X