18 வயதுக்கு மேற்பட்டவரா நீங்கள்- ஏப்.,28முதல் கோவிட்-19 தடுப்பூசி முன்பதிவு: எதில், எப்படி முன்பதிவு செய்வது?

|

இந்தியாவில் கிடைக்கும் தடுப்பூசி விவரங்கள் குறித்து பார்க்கையில் இதுவரை இரண்டு தடுப்பூசிகள் மட்டுமே கிடைக்கிறது. சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியாவின் கோவிஷீல்ட் மற்றும் பாரத் பயோடெக் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட கோவாக்சின் தடுப்பூசிகள் ஆகும். இந்தியாவில் ஒப்புதல் அளிக்கப்பட்ட ரஷ்யாவின் ஸ்பூட்னிக், மே மாத தொடக்கம் முதல் கிடைக்கும் என எதிபார்க்கப்படுகிறது. ஒரு டோஸ் விலை இந்திய மதிப்புப்படி ரூ.750 என கூறப்படுகிறது.

கோவிட்-19 தடுப்பூசிகள்

கோவிட்-19 தடுப்பூசிகள்

கோவிட்-19 தடுப்பூசிகள் விலை குறித்து பார்க்கையில், கோவிட் தடுப்பூசி நாடு முழுவதும் இருக்கும் மத்திய அரசு மருத்துவமனைகளில் அனைவருக்கும் இலவசமாக கிடைக்கும். இருப்பினும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மக்கள் ஒரு டோஸ் கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் செலுத்த வேண்டும் என்றால் விலை நிர்ணயத்தில் கிடைக்கின்றன. கோவிஷீட் தடுப்பூசி மாநிலங்களுக்கு ரூ.400 எனவும் தனியார் மருத்துவமனைகளில் ரூ.600 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதேபோல் கோவாக்சின் விலை இன்னும் தெரியவில்லை.

18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி

18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி

நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஏப்ரல் 28 ஆம் முதல் முன்பதிவு செய்யப்படும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் குறிப்பிட்டார். மே 1 முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்தது. முதல்கட்டமாக மருத்துவ பணியாளர்கள் சுகாதாரப் பணியாளர்களுக்கும், இரண்டாவது கட்டமாக 60 வயது மேற்பட்டவர்களுக்கும் அடுத்தாக 45 வயது மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Co-WIN செயலி மற்றும் போர்டல்

Co-WIN செயலி மற்றும் போர்டல்

தடுப்பூசி முன்பதிவு செய்வதற்கான வழிமுறைகள் குறித்து பார்க்கையில், ஏப்ரல் 28 முதல் கோவிட்-19 தடுப்பூசி Co-WIN செயலி மற்றும் போர்டல் மூலமாக பதிவு செய்யப்பட உள்ளது. இதை எப்படி பதிவு செய்வது மற்றும் அதற்கு எந்தந்த விவரங்கள் அளிக்க வேண்டும் என்பது குறித்து பார்க்கலாம். மூன்றாம் கட்டத்திற்கான கோவிட்-19 தடுப்பூசி பதிவு புதன்கிழமை தொடங்கப்பட உள்ளது. பயனர்கள் இந்த டோஸ்-க்கான பதிவை Co-WIN செயலி மற்றும் போர்டல் மூலமாக மேற்கொள்ளலாம்.

ஏப்ரல் 28முதல் முன்பதிவு

ஏப்ரல் 28முதல் முன்பதிவு

18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கோவிட் தடுப்பூசி பதிவு இந்தியாவில் ஏப்ரல் 28 புதன்கிழமை முதல் தொடங்கப்பட இருக்கிறது. பயனர்கள் Co-WIN செயலி மற்றும் போர்டல் மூலமாக தடுப்பூசி அளவை பதிவு செய்யலாம். அதுமட்டுமின்றி ஏப்ரல் 28 ஆம் தேதிமுதல் ஆரோக்ய சேது பயன்பாட்டின் மூலமாகவும் பதிவு தொடங்குகிறது. இது முன்பதிவு மட்டுமே, கோவிட்-19 தடுப்பூசியின் மூன்றாம் கட்டம் மே 1 முதல் திட்டமிடப்பட்டிருக்கிறது. மேலும் தற்போதுவரை தகுதியுள்ள அனைவருக்கும் மையம் தொடர்ந்து தடுப்பூசி போடும் என்பது குறிப்பிடத்தக்கது.

கோவின் 2.0 தடுப்பூசி பதிவு

கோவின் 2.0 தடுப்பூசி பதிவு

இதில் முன்கள தொழிலாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் மாநிலங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் மூலம் நேரடியாக தடுப்பூசியை உற்பத்தியாளர்களிடம் இருந்து பெறலாம். Co-WIN தடுப்பூசி மூன்றாம் கட்டம் குறித்தும் கோவின் 2.0 தடுப்பூசி பதிவு செய்வது எப்படி என்பது குறித்தும் பார்க்கலாம்.

எச்சரிக்கை: சற்றும் யோசிக்காம உடனே டெலிட் பண்ணுங்க- எச்சரிக்கை: சற்றும் யோசிக்காம உடனே டெலிட் பண்ணுங்க- "இந்த 8 செயலி ரொம்ப மோசம்" பயனர்களின் தகவல், பணம் மோசடி!

ஆண்ட்ராய்டு சாதன பயனர்கள்

ஆண்ட்ராய்டு சாதன பயனர்கள்

கோவிட் தடுப்பூசி பதிவு செய்யும் வழிமுறைகள், முதலில் Co-WIN போர்டலை ஓபன் செய்யவும், https://www.cowin.gov.in/home. என்ற வலைதளத்தை அணுகலாம். பயனர்கள் தங்களது ஆண்ட்ராய்டு சாதனத்தில் கூகுள் ப்ளே ஸ்டோர் மூலமாக Co-WIN 2.0 செயலியை பதிவிறக்கம் செய்யலாம். ஐபோன் பயனர்களுக்கான இந்த தகவல் தற்போதுவரை கிடைக்கவில்லை.

முன்பதிவு செய்வதற்கான வழிமுறைகள்

முன்பதிவு செய்வதற்கான வழிமுறைகள்

  • கோவின் 2.0 போர்ட்டலுக்கு சென்றவுடன் முகப்பு பக்கத்தில் உங்கள் அருகில் உள்ள தடுப்பூசி மையத்தை கண்டுபிடி என்ற தேர்வை கிளிக் செய்ய வேண்டும்.
  • அதன்பின் தாங்கள் வசிக்கும் இடம் மற்றும் முகவரியை முறையாக உள்ளிடவும் அல்லது தடுப்பூசி மைய விவரங்களை நேரடியாக பெறுவதற்கு தற்போதைய இடம் என்ற விருப்பதை தேர்ந்தெடுக்கவும்.
  • அதன்பின் தங்களை பதிவு செய்க என்ற தேர்வை தேர்ந்தெடுத்து உங்கள் தொலைபேசி எண்ணை உள்ளிடவும். தொலைபேசி எண்ணை உள்ளிட்டவுடன் ஓடிபி எண் கிடைக்கும்.
  • இந்த விவரங்கள் அனைத்தும் பூர்த்தி செய்தவுடன் அடையாள ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். அதன்பின் அரசு மற்றும் தனியார் அம்சம் மூலம் முன்பதிவுக்கான விருப்பத்தை பெறுவீர்கள்.
  • ஆரோக்கிய சேது பயன்பாடு

    ஆரோக்கிய சேது பயன்பாடு

    ஒருவேலை கோவின் 2.0 மூலமாக கோவிட்-19 தடுப்பூசி பெற முடியாவிட்டால் ஆரோக்கிய சேது என்ற பயன்பாட்டு பயன்படுத்தலாம். இந்த செயலி தற்போது பலரின் சாதனங்களில் இருக்கும். அதை பயன்படுத்தியும் இருப்போம். இல்லாதவர்கள் இதை பதிவிறக்கம் செய்து மொபைல் எண்ணை பதிவிட்டு ஓடிபியை பதிவு செய்து உள்ளே நுழைய வேண்டும்.

    18 முதல் 44 வயதுக்கு உட்பட்டவர்கள் தடுப்பூசி

    18 முதல் 44 வயதுக்கு உட்பட்டவர்கள் தடுப்பூசி

    அதன்பின் இதை பதிவு செய்வதற்கு மேல் மெனு ஆப்ஷனை கிளிக் செய்து கோவிட் புதுப்பிப்பு தேர்வுக்கு அடுத்து இருக்கும் கோவின் என்ற விருப்பத்தை கிளிக் செய்யவும். பட்டியலில் இரண்டாவதாக இருக்கும் தடுப்பூசி பயன்பாட்டை கிளிக் செய்யவும், தற்போது பதிவு செய்க என்ற விருப்பம் காண்பிக்கப்படும் இதை தேர்ந்தெடுக்கவும். முன்னதாகவே பதிவு செய்திருக்கும்பட்சத்தில் உள்நுழைவு என்ற விருப்பத்தை தேர்ந்தெடுக்க வேண்டும். பின் மொபைல் எண்ணை பதிவிடவும் இதன்பின் சரிபார்க்க தொடரவும் என்ற விருப்பத்தை தேர்ந்தெடுக்க வேண்டும். பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஓடிபி எண் அனுப்பப்படும். குறிப்பு ஆன்-சைட் பதிவு 18 முதல் 44 வயதுக்கு உட்பட்டவர்கள் தடுப்பூசி பதிவு செய்ய அனுமதிக்காது. இவர்கள் அனைத்து சந்திப்புகளை கோவின் வலைதளம் மற்றும் ஆரோக்கிய சேது மூலமாக முன்கூட்டிய பதிவு செய்ய வேண்டும் என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

    தேவைப்படும் ஆவணங்கள் குறித்த விவரம்

    தேவைப்படும் ஆவணங்கள் குறித்த விவரம்

    கோவிட்-19 மூன்றாம் கட்ட தடுப்பூசி பெறுவதற்கான ஆவணங்கள் குறித்து பார்க்கையில், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் ஓட்டுநர் உரிமம், ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட அரசு ஆவணங்கள் தேவை. கோவிடன் தடுப்பூசி போடப்படும் இடம் குறித்து பார்க்கையில், இது ஆயுஷ்மான் பாரத் பிஎம்ஜே-யின் கீழ் பதிவு செய்யப்பட்ட சுமார் 10,000 தனியார் மருத்துவமனைகளிலும், சிஜிஎச்எஸ் கீழ் 600+ மருத்துவமனைகள் மாநிலங்களின் கீழ் பதிவு செய்யப்பட்ட பிற தனியார் மருத்துவமனைகளில் மூன்றாம் கட்ட கோவிட்-19 தடுப்பூசி கிடைக்கும்.

Source: 91mobiles.com

Best Mobiles in India

English summary
Vaccination For Above 18 Years Registration Starting From April 28: How to Register?

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X