தம்பி செய்த வேலையை பாருங்கள்: ஆன்லைன் கேம்.! 10 லட்சம் திருட்டு.! சிக்கியது எப்படி?

|

போனில் கேம் விளையாடுவது என்றால் பெரியவர்கள் தொடங்கி சிறியவர்கள் வரை அனைவருமே குதூகலம் ஆகிவிடுவர்,அதுவும் இளைஞர்களை பற்றி சொல்லவே தேவையில்லை. அதுவும் இப்போது குறிப்பிட்ட ஆன்லைன் கேம் மிகவும் பிரபலமாக இருக்கிறது என்றுதான் கூறவேண்டும்.

தகவலை சற்று விரிவாகப் பார்ப்போம்.

இந்த ஆன்லைன் கேம் மோகத்தால் இளைஞர் ஒருவர் சிறைக்கு சென்ற சம்பவம் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, அதைப்பற்றிய தகவலை சற்று விரிவாகப் பார்ப்போம்.

உத்தர பிரதேச மாநிலம்

உத்தர பிரதேச மாநிலம்

வெளிவந்த தகவல் அடிப்படையில் உத்தர பிரதேச மாநிலம் பிலாரியாகஞ்ச் பகுதியை சேர்ந்த ஆசிரியர் ஒருவரின் வங்கிகணக்கில் இருந்து திடீரென 10லட்சம் ரூபாய் எடுக்கப்பட்டுள்ளது. அதிர்ச்சியடைந்த ஆசிரியர் உடனே காவல் நிலையத்தில்புகார் கொடுத்துள்ளார்.

கிம் ஜாங்-உன் இன் சட்டவிரோத வாழ்க்கை அம்பலம்! அடிமைகளின் கோட்டையாக இருக்கும் 'ஆபீஸ் 39'.!கிம் ஜாங்-உன் இன் சட்டவிரோத வாழ்க்கை அம்பலம்! அடிமைகளின் கோட்டையாக இருக்கும் 'ஆபீஸ் 39'.!

 போலீசார் தீவிர விசாரணை

பின்பு போலீசார் தீவிர விசாரணையை மேற்கொண்டனர்,அதில் ஆசியரின் வங்கி கணக்கை ஹேக் செய்ய பயன்படுத்தப்பட்ட செல்போன் எண் கண்டுபிடிக்கப்பட்டது. உடனே செல்போன் எண்ணுக்கு உரிமையாளர் ஆக்ரா பகுதியை சேர்ந்த சாகர் சிங்(20)என்ற இளைஞரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர், அப்போது தான் சில திடுக்கிடும் தகவல்கள்வெளியாகியுள்ளன.

கற்றுக் கொடுத்ததாக அந்த இளைஞர் தெரிவித்துள்ளார்

வெளிவந்த தகவல் என்னவென்றால்,இந்த ஊரடங்கால் வீட்டிலேயே இருந்ததால் சர்வதேச ஆன்லைன் டேர் கேம் (Online Dare Game) ஒன்றை சாகர் சிங் பதிவிறக்கம் செய்து விளையாடியுள்ளார். அந்த விளையாட்டில் கட்டளையிடப்படும் அனைத்தையும் விளையாடுபவர் செய்ய வேண்டும்.

BSNL வாடிக்கையாளர்களுக்கு ஒரு நற்செய்தி: 3ஜி திட்டங்களில் 4ஜி சேவை!BSNL வாடிக்கையாளர்களுக்கு ஒரு நற்செய்தி: 3ஜி திட்டங்களில் 4ஜி சேவை!

பின்னர் ஒரு வங்கிக் கணக்கை ஹேக் செய்து

எனவே அந்த விளையாட்டில் எப்படி ஹேக் செய்யவது? போன்ற இரகசியங்களை கற்றுக்கொடுத்துள்ளதாக தெரிகிறது. பின்னர்
ஒரு வங்கிக் கணக்கை ஹேக் செய்து பணத்தை எடுக்குமாறு அந்த இளைஞருக்கு கட்டளை கொடுக்கப்பட்டுள்ளது.

கணக்கை ஹேக் செய்து பணத்தை எடுத்ததாக போலீசார்

பின்பு அந்த இளைஞரும் வங்கிக் கணக்கை ஹேக் செய்து பணத்தை எடுத்ததாக போலீசார் மேற்கொண்ட விசாரணையில்ஒப்பு கொண்டார். அதாவது அவர் விளையாடிய கேம்-ல் ஹேக்கிங் திறமையை பயன்படுத்தி எப்படி பணம் சம்பாதிக்க முடியும்என கற்றுக் கொடுத்ததாக அந்த இளைஞர் தெரிவித்துள்ளார்.

உங்கள் போனை வைக்கவே கூடாத 10 இடங்கள்! அதனால் ஏற்படும் ஆபத்துகள் என்ன தெரியுமா?உங்கள் போனை வைக்கவே கூடாத 10 இடங்கள்! அதனால் ஏற்படும் ஆபத்துகள் என்ன தெரியுமா?

ர் மீது வழக்கு பதிவு செய்

மேலும் அந்த இளைஞர் மீது வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர், ஆன்லைன் கேமிங் என்றபெயரில் பல்வேறு மர்ம கும்பல் பல இளைஞர்களை குறிவைப்பதால், பாதுகாப்பாக இருக்குமாறு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Uttar Pradesh Youth Got Arrested For Hacking Into Man's Bank Account And Stealing Rs.10 Lakh: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X