அன்று உத்தரபிரதேம் இன்று உசிலம்பட்டி! வானத்தில் தோன்றிய மர்மமான பொருள்..

|

அடையாளம் காண முடியாத பொருள் வானத்தில் தென்பட்டால் அதை UFO என்று குறிப்பிடுவது வழக்கம். அதாவது Unidentified Flying Object (அடையாளம் தெரியாத பறக்கும் பொருள்) என்பது இதற்கு அர்த்தம். இதுபோன்ற பொருட்களை ஏலியன்கள் உடன் தொடர்புப்படுத்துவது வழக்கம். வானத்தில் அவ்வப்போது மர்மமான பொருள் தோன்றி மறைவது வழக்கம். இதற்கு விளக்கம் அளிக்கப்பட்டாலும் ஆதாரம் என்ற எதுவும் வழங்கப்படுவதில்லை. இதே மாதிரியான ஒரு பொருள் தான் தற்போது உசிலம்பட்டியில் வானத்தில் தோன்றி இருக்கிறது.

வானத்தில் தோன்றிய மர்மமான பொருள்

வானத்தில் தோன்றிய மர்மமான பொருள்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் சில இளைஞர்கள் நேற்று இரவு கூடி இருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது சுமார் 8 மணி அளவில் வானத்தில் மர்மான பொருள் தோன்றி இருக்கிறது. ஏறத்தாழ ரயில் போன்று வித்தியாசமான தோற்றத்துடன் இந்த பொருள் தோன்றி இருக்கிறது. இதை பார்த்த இளைஞர்கள் உடனடியாக தங்களது செல்போனில் படம் பிடித்து இருக்கின்றனர். அடுத்த சிறிது நேரத்தில் இந்த பொருள் வானில் இருந்து மறைந்து விட்டதாகக் கூறப்படுகிறது.

மர்ம பொருளுக்கும் எலான் மஸ்க்கிற்கும் தொடர்பு

மர்ம பொருளுக்கும் எலான் மஸ்க்கிற்கும் தொடர்பு

ரயில் போன்று தோன்றிய மர்ம பொருளை அந்த பகுதியில் உள்ள பலரும் பார்த்திருக்கின்றனர். சிறிது நேரத்தில் அந்த பொருள் அங்கிருந்து மறைந்துவிட்டது. இதுதொடர்பான வீடியோக்களும் புகைப்படங்களும் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வானத்தில் தோன்றிய மர்மமான பொருள் என்னவென்று பலரும் பலவிதமான கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், வானத்தில் தோன்றிய பொருளுக்கும் உலகப் பணக்காரர்களில் ஒருவருமான எலான் மஸ்க்கிற்கும் தொடர்பு உள்ளது என தகவல்கள் வெளியாகிறது.

மர்மப் பொருளுக்கும் எலான் மஸ்க்கிற்கும் என்ன தொடர்பு?

மர்மப் பொருளுக்கும் எலான் மஸ்க்கிற்கும் என்ன தொடர்பு?

வானத்தில் தோன்றிய மர்மப் பொருளுக்கும் எலான் மஸ்க்கிற்கும் என்ன தொடர்பு என நீங்கள் கேட்கலாம். எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் சாட்டிலைட் தொகுப்பாக இது இருக்கும் என கூறப்படுகிறது. இதற்கு நிறைய வாய்ப்பிருக்கிறது. இதேபோல் முன்னதாக உத்தரபிரதேச மாநிலத்தில் இதேபோன்ற காட்சி தோன்றியது.

ஸ்டார் லிங்க் சாட்டிலைட்

ஸ்டார் லிங்க் சாட்டிலைட்

இது ஸ்டார் லிங்க் சாட்டிலைட் ஆக இருக்கும்பட்சத்தில் அடிக்கடி இது வானில் தோன்ற வாய்ப்பிருக்கிறது. முதலில் ஸ்டார் லிங்க் சேவை என்னவென்று பார்த்துவிட்டு பின் உத்தரபிரதேச மாநிலத்தில் தோன்றிய காட்சி குறித்து பார்க்கலாம்.

ஸ்டார் லிங்க் சேவை என்றால் என்ன?

ஸ்டார் லிங்க் சேவை என்றால் என்ன?

பிராட்பேண்ட் சேவையில் ஒரு புரட்சி என்றே இந்த ஸ்டார்லிங்க் சேவையை கூறலாம். செயற்கைக்கோள் மூலம் கிராமப்புற, வனப்பகுதி, தொலைத்தூர பகுதிகளுக்கு அதிவேக இணைய சேவை வழங்கும் திட்டம் இதுவாகும். ஸ்டார்லிங்க் இணைய சேவை குறிப்பிட்டப் பகுதிகளில் உள்ள பயனர்களுக்கு தற்போதே கிடைக்கிறது. டிஜிட்டல் முறையில் பல கட்டம் முன்னோக்கி செல்லும் இந்தியாவில் இந்த சேவை விரைவில் முழுமையாக கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உத்தரபிரதேசத்தில் தோன்றிய மர்ம பொருள்..

உத்தரபிரதேசத்தில் தோன்றிய மர்ம பொருள்..

உத்தரபிரதேச மாநிலம் அவுரையா, கன்னௌஜில் உள்ள ஜலபாபாத், ஹர்டோயின் பாலி கிராமம் மற்றும் ஃப்ரூகாபாத் போன்ற பல்வேறு பகுதிகளில் இரவு நேர வானில் இந்த மர்மமான காட்சி தோன்றியது. இதை பார்த்த மக்கள் இது என்னவாக இருக்கும் குழப்பமடைந்துள்ளனர். பல்வேறு பகுதிகளில் இருந்து எடுக்கப்பட்ட இதுகுறித்த வீடியோக்கள் சமூகவலைதளங்களில் வைரலானது.

நெட்டிசன்கள் தெரிவித்த கருத்துக்கள்

நெட்டிசன்கள் தெரிவித்த கருத்துக்கள்

சமூகவலைதளங்களில் வைரலாகும் வீடியோக்களுக்கு நெட்டிசன்கள் பலவிதமான கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். சிலர் இது SpaceX இன் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களாக இருக்கலாம் என தெரிவித்தனர். இது அடையாளம் தெரியாத பறக்கும் பொருள் (UFO) ஆக இருக்கலாம் எனவும் ஏலியன்ஸ் அந்த பகுதிக்கு வந்துள்ளனர் எனவும் சிலர் பதிலளித்தனர்.

ரயில் அமைப்பில் தோன்றிய சாட்டிலைட்

ரயில் அமைப்பில் தோன்றிய சாட்டிலைட்

டிசம்பர் 2021 இல் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்கள் அமெரிக்காவின் துல்சா நகரப்பகுதியின் வானத்தில் காணப்பட்டது. இது உறுதியாக என்னவென்று தெரியவில்லை. இருப்பினும் இதன்மூலம் இது ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் ஆக இருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும் சிலர் செயற்கைக்கோள் ரயில் அமைப்பில் தோன்றியது ஆச்சரியமாக இருக்கிறது என பலரும் கருத்து தெரிவித்தனர்.

Best Mobiles in India

English summary
Uttar Pradesh to Usilampatti: Mysterious Flying object appeared in the sky at Usilampatti

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X