Home
News

Mobile-ல் ரயில் டிக்கெட் காண்பிக்குறீங்களா? எச்சரிக்கும் தெற்கு ரயில்வே.. மீறினால் அபராதம் உறுதி.. கவனியுங்க?

அடிக்கடி ரயிலில் பயணிக்கும் நபரா நீங்கள்? ரயில் பயணத்திற்கான டிக்கெட்டை யுடிஎஸ் (UTS) ஆப்ஸ் மூலமாக வாங்கும் சாமர்த்தியமான பயணியா நீங்கள்? அப்படியானால், இந்த பதிவு உங்களுக்கானது தான். 'ரயில் பயணிகளின் கனிவான கவனத்திற்கு' என்ற அன்பான துவக்க வார்த்தைகளுடன் ரயில் பயணிகளுக்கு ஒரு புதிய எச்சரிக்கை செய்தியை தெற்கு ரயில்வே தற்போது வெளியிட்டுள்ளது. UTS ஆப்ஸ் பயன்படுத்தி டிக்கெட் பெரும் பயணிகள், UTS விதிமுறைகளை (UTS app rules) சரியாக கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுரைக்கப்பட்டுள்ளது. மீறினால் அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இது பற்றிய கூடுதல் விபரம் இதோ.

ரயில் சேவையின் (train service) மூலம் தினசரி கோடி கணக்கான மக்கள் இந்தியாவில் உள்ள பல இடங்களுக்கு பயணித்து வருகிறார்கள். குறிப்பாக, தினசரி ரயில் சேவையை நம்பி பயணிப்போரின் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கிறது. இவர்கள் அனைவரும் தினசரி நீண்ட வரிசையில் காத்திருந்து, பிறகு முன்பதிவில்லாத டிக்கெட்களை (unreserved train tickets) வாங்கிய பிறகு தான் ரயிலில் பயணிக்கும் சூழ்நிலை இருந்து வந்தது. இது பல பயணிகளுக்கு கைகொடுக்கவில்லை.

Mobile-ல் ரயில் டிக்கெட் காண்பிக்குறீங்களா? எச்சரிக்கும் ரயில்வே..

Mobile-ல் ரயில் டிக்கெட் காண்பிக்குறீங்களா? எச்சரிக்கும் தெற்கு ரயில்வே:

இதனால், தெற்கு ரயில்வே யுடிஎஸ் என்ற மொபைல் செயலியை (UTS mobile apps) கடந்த 2015 அறிமுகம் செய்தது. இது தினசரி ரயில் சேவையை பயன்டுத்தும் மக்களுக்காக அறிமுகம் செய்யப்பட்ட ஒரு பிரத்தியேக சேவையாகும். ரயில்களில் முன்பதிவில்லாமல் பயணிப்போர், தங்கள் மொபைல் மூலம் UTS ஆப்ஸை பயன்படுத்தி டிக்கெட் (UTS app train ticket) எடுத்துக்கொள்ளும் வசதியை தெற்கு ரயில்வே (Southern railway) அறிமுகம் செய்தது. இது பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நேரத்தை முழுமையாக குறைத்தது.

இந்த செயலியை ரயில் பயணிகள் இப்போது நாடு முழுவதும் பயன்படுத்தி வருகிறார்கள். இந்த யுடிஎஸ் ஆப்ஸ் மூலம் பொதுமக்கள் இப்போது முன்பதிவில்லாத டிக்கெட் (unreserved ticket), பிலாட்ஃபார்ம் டிக்கெட் (platform ticket) மற்றும் சீஸன் டிக்கெட் (season ticket) போன்றவற்றை எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம். என்ன தான் இந்த செயலியை பயன்படுத்தி நீங்கள் டிக்கெட் பெற்றாலும், UTS ஆப்ஸ் விதிமுறையாகள் பயணிகள் சரியாக பின்பற்ற வேண்டும் என்று தெற்கு ரயில்வே தற்போது எச்சரித்துள்ளது.

எந்த வகையான டிக்கெட்டை மொபைலில் காண்பிக்கலாம்? எது செல்லுபடியாகும்?

பல பயணிகள், UTS விதிமுறைகளை சரியாக புரிந்துகொணடு பின்பற்றவில்லை என்று தெற்கு ரயில்வே கூறியுள்ளது. காரணம், UTS ஆப்ஸ் மூலம் இரண்டு வகையான முன்பதிவில்லாத டிக்கெட்களை வாங்கி பயணிகள் பயணிக்க அனுமதிக்கப்படுகின்றனர். இதில் முதல் முறைப்படி, காகிதம் இல்லாமல் டிஜிட்டல் டிக்கெட்களை (paperless digital train tickets) எடுத்து பயணிகள் ரயிலில் பயணிக்கலாம். டிக்கெட் சோதனையின் போது, உங்கள் போனில் இருக்கும் டிக்கெட்டை காண்பித்தால் போதும், அது செல்லுபடியாகும்.

மற்றொரு முறைப்படி, காகித வடிவில் இருக்கும் டிக்கெட் (physical paper train tickets) எடுத்து பயணிகள் பயணிக்க அனுமதிக்கப்படுகின்றனர். இந்த இரண்டு வகையான டிக்கெட்களும் UTS ஆப்ஸ் மூலம் வாங்க கிடைக்கிறது. இருப்பினும், பல மக்கள் காகித வடிவ டிக்கெட் விருப்பதை தேர்வு செய்துவிட்டு, நேரடியாக ரயிலில் பயணிக்க துவங்கிவிடுகின்றனர். சோதனையின் போது, மொபைலில் டிக்கெட்டை (mobile train ticket) காண்பிக்கின்றனர். இது தவறானது என்று தெற்கு ரயில்வே எச்சரித்துள்ளது.

கவனியுங்க மக்களே.. இந்த வகை டிக்கெட் மொபைலில் காண்பித்தால் செல்லாது.. அபராதம் உறுதி:

காகித வடிவ டிக்கெட் விருப்பத்தை தேர்வு செய்து, டிக்கெட் பெரும் பயணிகள் கட்டாயம் காகித வடிவ டிக்கெட்டை ரயில் நிலையங்களில் இருந்து பெற்ற பிறகே ரயிலில் பயணிக்க வேண்டுமென்று தெற்கு ரயில்வே தெளிவாக தெரிவித்துள்ளது. காகித வடிவ டிக்கெட்டை எடுத்துவிட்டு, அதை மொபைல் போனில் காண்பித்தால், அது செல்லாது என்றும், விதிமீறல் மற்றும் உரிய டிக்கெட் இல்லாமல் பயணித்த குற்றங்களுக்காக அபராதம் (fine amount) விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்த விதிமுறைகள் குறித்த விபரங்கள் UTS மொபைல் ஆப்ஸில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. கவனக்குறைவினால், சிலர் ரயில் நிலையங்களில் உரிய டிக்கெட் இல்லாமல் மாட்டிக்கொண்டு அபராதம் செலுத்தி வருகின்றனர். இதை பொதுமக்கள் உடனே கவனிக்க வேண்டுமென்று தெற்கு ரயில்வே அறிவுரை வழங்கியுள்ளது. UTS ஆப்ஸ் விதிமுறைகளை பின்பற்றவில்லை என்றால் அபராதம் நிச்சயம் என்றும் தெற்கு ரயில்வே கூறியுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
UTS App Mobile Ticket and Paper Ticket Option Users Received Warning From Southern Railway
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X