வழக்கமா Laptop-க்கு பதிலா சோப்பு தானே வைப்பாங்க.. இந்த முறை புது ஐட்டம்-ஆ இருக்கே !

|

ஆன்லைனில் பொருட்களை வாங்க மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர் என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக அமேசான், பிளிப்கார்ட் மற்றும் பல முன்னணி ஆன்லைன் தளங்களில் நாம் வாங்கும் சில பொருட்களுக்கு கூடுதல் சலுகைகள் கிடைக்கின்றன.

ஆன்லைன்

ஆன்லைன்

எனவே தான் ஆன்லைனில் பொருட்கள் வாங்க மக்கள் அதிகம் ஆசைப்படுகின்றனர். குறிப்பாக நேரில் சென்று பொருட்கள் வாங்குவதை விட ஆன்லைனில் பொருட்கள் வாங்குவது தான் சிறந்தது என்ற முடிவுக்கு பெரும்பாலான வாடிக்கையாளர்கள் வந்து விட்டனர் என்பது தான் உண்மை.

அடுத்தடுத்து நடக்க போகும் 3 விபரீதங்கள்.. பூமியை விட்டு விலகும் நிலவு! மனச தேத்திக்கோங்க!அடுத்தடுத்து நடக்க போகும் 3 விபரீதங்கள்.. பூமியை விட்டு விலகும் நிலவு! மனச தேத்திக்கோங்க!

பிளிப்கார்ட்

பிளிப்கார்ட்

குறிப்பாக பண்டிகை காலத்தில் ஆன்லைன் தளங்களில் அதீத சலுகைகளை வழங்கப்படுகின்றன. இந்நிலையில் கர்நாடக மாநிலம் மங்களூருவில் உள்ள ஒருவர் பிளிப்கார்ட் தளத்தில் லேப்டாப் ஆர்டர் செய்துள்ளார். பின்பு டெலிவரி செய்யப்பட்ட பொருளை பார்த்து ஆடிப்போனார் என்றுதான் கூறவேண்டும்.

நாசா நிலவில் அமைக்கும் முதல் விண்வெளி நிலையம்.. நிலவுக்கு தண்ணீர் பூமியில் இருந்து தான் வந்ததா? உண்மை என்ன?நாசா நிலவில் அமைக்கும் முதல் விண்வெளி நிலையம்.. நிலவுக்கு தண்ணீர் பூமியில் இருந்து தான் வந்ததா? உண்மை என்ன?

சின்மய ரமனா

சின்மய ரமனா

அதாவது தீபாவளியை முன்னிட்டு கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த சின்மய ரமனா என்பவர் தனது நண்பருக்காக பிளிப்கார்ட் மூலம் லேப்டாப் ஒன்றை ஆர்டர் செய்திருந்தார்.

பூமியை விட 11 மடங்கு பெரிய கிரகம் இது தானா? அம்மாடியோவ் எவ்வளவு பெருசு! வீடியோ பார்த்து வியந்த மக்கள்.பூமியை விட 11 மடங்கு பெரிய கிரகம் இது தானா? அம்மாடியோவ் எவ்வளவு பெருசு! வீடியோ பார்த்து வியந்த மக்கள்.

 சிறிய கல்

சிறிய கல்

பின்பு அவர் ஆர்டர் செய்த லேப்டாப் சரியாக வந்துவிடும் என்று காத்திருந்தார். ஆனால் அப்படி நடக்கவில்லை. அதாவது அவருக்கு வந்த பார்சலில் லேப்டாப் சாதனத்திற்குப் பதிலாக சிறிய கல் துண்டுகளும், ஈ வேஸ்டுகளும் தான் இருந்துள்ளது.

Google இல் உங்க போன் நம்பர், முகவரி, புகைப்படம் வருகிறதா? இதை எப்படி நீக்குவது? கூகிளின் புதிய விதி இதான்..Google இல் உங்க போன் நம்பர், முகவரி, புகைப்படம் வருகிறதா? இதை எப்படி நீக்குவது? கூகிளின் புதிய விதி இதான்..

இ-மெயில் மூலம் தகவல்

மேலும் இதனால் அதிர்ச்சி அடைந்த சின்மய ரமணா, இது குறித்து புகைப்பட ஆதாரத்துடன் பிளிப்கார்ட் நிறுவனத்திற்கு இ-மெயில் மூலம் தகவல் தெரிவித்துள்ளார். அதன்பின்பு இது குறித்து ட்விட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

திருப்பி அளிக்கப்படும்

திருப்பி அளிக்கப்படும்

இதனைத் தொடர்ந்து அவரின் புகார் ஏற்றுக்கொள்ளப்பட்டு, லேப்டாப்பிற்காக செலுத்திய முழு தொகையும் திருப்பி அளிக்கப்படும் என பிளிப்கார்ட் நிறுவனம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதேபோல் இதுவரை ஆன்லைனில் ஆர்டர் செய்த சிலருக்கு சோப்பு கட்டிகள் அதிகம் வந்துள்ளது. ஆனால் இந்த முறை கல் துண்டுகளும், ஈ வேஸ்டுகளும் வந்தது தான் அதிசயம்.

உங்க போன் ரொம்ப ஹேங் ஆகிறதா? இல்ல மெதுவா இயங்குகிறதா? அப்போ உடனே 'இதை' செய்யணும்..உங்க போன் ரொம்ப ஹேங் ஆகிறதா? இல்ல மெதுவா இயங்குகிறதா? அப்போ உடனே 'இதை' செய்யணும்..

கோடிக்கணக்கான ஆர்டர்

குறிப்பாக ஆன்லைனில் பெறப்படும் கோடிக்கணக்கான ஆர்டர்களில் ஒரு சில பிழைகள் இயல்பு என்றாலும் அதற்கு நிறுவனம் தரப்பில் இருந்து கிடைக்கும் சரியான பதிலையும் தீர்வையும் தான் வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

18வயது சிறுவனின் அசத்தல் கண்டுபிடிப்பு: சைக்கிள் கவுன்டர் கருவி- பெட்ரோல் விலை உயர்ந்தா சைக்கிள் ஓட்டுவோம்!18வயது சிறுவனின் அசத்தல் கண்டுபிடிப்பு: சைக்கிள் கவுன்டர் கருவி- பெட்ரோல் விலை உயர்ந்தா சைக்கிள் ஓட்டுவோம்!

ஒபன் பாக்ஸ் டெலிவரி சிஸ்டம்

ஒபன் பாக்ஸ் டெலிவரி சிஸ்டம்

அதேபோல் பிளிப்கார்ட் நிறுவனத்தின் ஒபன் பாக்ஸ் டெலிவரி சிஸ்டம் என்பது பயனர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்கான அர்ப்பணிக்கப்பட்ட ஒரு முயற்சியாகும். அதாவது ஓபன் பாக்ஸ் டெலிவரி சிஸ்டத்தில் டெலிவரி பார்ட்னர்கள், வாடிக்கையாளர்களின் முன் ஆர்டர் பொருளை திறந்து காண்பிப்பார்கள். வாடிக்கையாளர்கள் தங்கள் ஆர்டர்கள் சரியாக இருக்கும்பட்சத்தில் டெலிவரியை ஏற்றுக்கொண்டு ஓடிபி-ஐ பகிருவார்கள்.

குறிப்பாக இதுபோன்ற வசதிகள் நம்பகத்தன்மையைக் கொடுக்கும். பின்பு ஒட்டுமொத்த வாடிக்கையாளர்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வசதி கண்டிப்பாக
உதவும் எனவும் பிளிப்கார்ட் தெரிவித்துள்ளது.

இரட்டை 50 எம்பி கேமரா, ஸ்னாப்டிராகன் 778ஜி+ வசதியோடு மோட்டோரோலா எட்ஜ் 30 அறிமுகம்: ஆனா விலை மட்டும் இதுதான்!இரட்டை 50 எம்பி கேமரா, ஸ்னாப்டிராகன் 778ஜி+ வசதியோடு மோட்டோரோலா எட்ஜ் 30 அறிமுகம்: ஆனா விலை மட்டும் இதுதான்!

அமேசான், பிளிப்கார்ட்

மேலும் பண்டிகைக் காலத்தில் அமேசான், பிளிப்கார்ட் தளத்தில் தான் மக்கள் அதிகம் பொருட்களை வாங்குகின்றனர். குறிப்பாக இந்த இரண்டு முன்னணி தளங்களும் போட்டிப்போட்டுக் கொண்டு தொடர்ந்து பல சலுகைகள் வழங்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
Usually they will pack soap instead of Laptop but This time a customer get e waste along with stone: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X