Home
News

வேட்டு வைக்கும் ஓசி வை-பை..!!

By Meganathan

இன்றைய ஸ்மார்ட்போன் பயனாளிகள் இண்டர்நெட் இல்லாமல் ஒரு நொடியும் இருப்பதில்லை. இன்றைய இளைஞர்கள் வெளியில் எங்கு சென்றாலும் அவர்கள் கேட்கும் முதல் கேள்வியாக இருப்பது வைஃபை பாஸ்வேர்டு தான் என்றே கூறலாம்.

அவ்வாறு வை-பை மூலம் இண்டர்நெட் பயன்படுத்துவோரா நீங்கள், உங்களை எச்சரிக்கை செய்யும் தொகுப்பு தான் இது. பொது இடங்களில் வை-பை பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மை மற்றும் தீமை குறித்த விரிவான தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்.

ஆன்லைன் பேங்கிங்

ஆன்லைன் பேங்கிங்

பொதுவாக வங்கி சார்ந்த பணிகளை பொது வை-பை மூலம் பயன்படுத்தினால் உங்களது எவ்வித தகவல்களுக்கும் பாதுகாப்பே கிடையாது. பொது வை-பை என்க்ரிப்ட் செய்யப்படாததே இதற்கு முக்கிய காரணம்.

இண்டர்நெட்

இண்டர்நெட்

ஆன்லைன் சார்ந்த வங்கி மற்றும் முக்கிய பணிகளை மொபைல் டேட்டா அல்லது சொந்த இண்டர்நெட் மூலம் பயன்படுத்துவது உங்களுக்கு நல்லது.

வேகம்

வேகம்

நீங்கள் ஒப்பு கொள்ளவில்லை என்றாலும் இது தான் உண்மை. பொது வை-பை கனெக்ஷன்களை விட உங்களது மொபைல் டேட்டா அதிக வேகமானது என கண்டறியப்பட்டுள்ளது.

பாதுகாப்பு

பாதுகாப்பு

ஒரு வேளை உங்களது கருவியில் போதுமான பாதுகாப்பு இல்லை எனில் உங்களது தகவல்கள் திருட்ப்படுவதோடு அதுவே உங்களுக்கு ஆபத்தாகவும் அமைந்து விடும்.

அப்டேட்

அப்டேட்

கருவியில் பாதுகாப்பு சார்ந்த பிரச்சனைகளை தவிர்க்க மென்பொருள் அப்டேட்களை தவறாமல் செய்வது நல்லது.

பொது வை-பை

பொது வை-பை

அதிகப்படியாக பொது வை-பை பயன்படுத்தும் போது கவனமாக இருப்பது நல்லது. தொடர்ச்சியாக பொது வை-பை பயன்படுத்துவோர் ஆன்லைன் ஷாப்பிங் மற்றும் வங்கி சார்ந்த சேவைகளை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. இவ்வாறு செய்யும் போது உங்களது தகவல்களோடு பணமும் பறிபோக அதிக வாய்ப்புகள் இருக்கின்றது.

மென்பொருள்

மென்பொருள்

பொது வை-பை மூலம் மென்பொருள்களை இன்ஸ்டால் செய்வது மால்வேர் சார்ந்த தாக்குதல்களுக்கு வழி செய்யும். இவ்வாறான மால்வேர்கள் உங்களது கருவிக்கு பேராபத்தாக அமையும். இதனால் பொது வை-பை கொண்டு மென்பொருள்களை இன்ஸ்டால் செய்வது, மென்பொருள் அப்டேட் போன்றவைகளை மேற்கொள்வது கருவியை பாழாக்கி விடும்.

https://tamil.gizbot.com/news/hidden-iphone-feature-could-save-your-life-one-day-010516.html

https://tamil.gizbot.com/news/hidden-iphone-feature-could-save-your-life-one-day-010516.html

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

Best Mobiles in India

English summary
Using Public Wi-fi may cost you more than data packs. Read here in Tamil how does it costs more than your mobile data packs.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X