Home
News

UPI யூஸ் பண்றீங்களா? உங்க போனில் Google Pay மட்டும் தான் இருக்கா.. PhonePe-வும் இருந்தா தப்பிச்சீங்க.. இல்லனா?

யுபிஐ (UPI) வழியாக பணம் அனுப்புவதற்காக உங்கள் ஸ்மார்ட்போனில் கூகுள் பே (Google Pay) ஆப் மட்டும் தான் இருக்கிறது என்றால்.. நீங்கள் கூகுள் பே ஆப்பை மட்டுமே பயன்படுத்துகிறீர்கள் என்றால் என்பிசிஐ (NPCI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய தேசிய கொடுப்பனவு கழகத்தின் (National Payments Corporation of Indi) சமீபத்திய அறிக்கை உங்களுடைய யுபிஐ பயன்பாட்டில் சில மாற்றங்களை கொண்டுவரலாம்.

கடந்த ஜூன் மாதத்தில் இந்தியாவின் யுபிஐ நெட்வொர்க் ஆனது ரூ.24.04 லட்சம் கோடி மதிப்புள்ள 18.4 பில்லியன் பரிவர்த்தனைகளை கண்டதாக என்பிசிஐ தரவுகள் தெரிவிக்கின்றன. இது முந்தைய மாதத்தை விட சற்று குறைவு தான். ஆனால் அது இங்கே "மேட்டர்" இல்லை! எந்த யுபிஐ ஆப் டாப்பில் உள்ளது என்பது தான் இங்கே மேட்டர்!

UPI யூஸ் பண்றீங்களா.. உங்க போனில் Google Pay மட்டும் தான் இருக்கா?

போன்பே ஆப் (PhonePe App) தான் 8.55 பில்லியன் பரிவர்த்தனைகளுடன் முன்னணியில் உள்ளது. இதன் கீழ் நடந்த மொத்தபணப்பரிவர்த்தனை மதிப்பு ரூ.11.99 லட்சம் கோடி ஆகும். இது மொத்த யுபிஐ அளவில் 46.5% மற்றும் மதிப்பில் கிட்டத்தட்ட 50% ஆகும்.

மறுகையில் உள்ள கூகுள் பே ஆப் (Google Pay App) ஆனது 6.54 பில்லியன் பரிவர்த்தனைகளை சந்தித்துள்ளது. இதன் கீழ் நடந்த மொத்தபணப்பரிவர்த்தனை மதிப்பு ரூ.8.41 லட்சம் கோடி ஆகும். இது மொத்த யுபிஐ அளவில் 35.6.% ஆகும் மற்றும் மதிப்பில் கிட்டத்தட்ட 35% ஆகும். அதாவது மக்கள் மத்தியில் கூகுள் பே ஆப்பின் பயன்பாடு குறைந்துகொண்டே வருகிறது.

இதற்கு - கூகுள் பே ஆப்பில் சரியான கேஷ்பேக் ஆபர் (Cashback Offer) இல்லாதது உட்பட பல காரணங்கள் இருக்கலாம். இந்த இடத்தில் தான் டாப் பிளேஸில் இருக்கும் போன்பே ஆப்பை இன்ஸ்டால் செய்வது குறித்து அல்லது ஒவ்வொரு முறையும் கேஷ்பேக் கொடுக்கும் சூப்பர் மணி (Super Money) போன்ற வளர்ந்து வரும் ஆப்களை இன்ஸ்டால் செய்து.. இப்போதே பழக்கப்படுத்திக்கொள்வது நல்லது.

ஒருகாலத்தில் யுபிஐ சேவையில் "ஜாம்பவான்" ஆக இருந்த பேடிஎம் ஆப்பை (Paytm App) பொறுத்தவரை ரூ.1.34 லட்சம் கோடி மதிப்புள்ள 1.27 பில்லியன் பரிவர்த்தனைகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்நிறுவனம் மொத்த யுபிஐ அளவில் 6.9% மற்றும் மதிப்பில் 5.6% கொண்டுள்ளது. வளர்ந்து வரும் நிறுவனங்களில், சூப்பர் மணி (super.money) ஆனது பரிவர்த்தனை அளவின் அடிப்படையில் கிரெட்டை (CRED) விட முன்னணியில் உள்ளது

புதிய தளங்களான நவி (Navi) மற்றும் பாம்ஆப் பை ட்ரியோ (FamApp by Trio) ஆகியவைகள் முறையே 406 மில்லியன் மற்றும் 113 மில்லியன் பரிவர்த்தனைகளை செய்துள்ளன. நவி ஆப் ஆனது ரூ.21,815 கோடி மதிப்பை பதிவு செய்துள்ள மறுகையில் பாம்ஆப் ஆனது ரூ.1,440 கோடி மதிப்பை பதிவு செய்துள்ளது.

அமேசான் பே (Amazon Pay) மற்றும் பீம் ஆப் (BHIM App) ஆகியவைகள் முறையே 93 மில்லியன் மற்றும் 73 மில்லியன் வாடிக்கையாளர்களால் தொடங்கப்பட்ட பரிவர்த்தனைகளை பதிவு செய்துள்ளன. இவற்றின் மதிப்பு முறையே ரூ.9,942 கோடி மற்றும் ரூ.11,726 கோடி ஆகும். இந்திய அரசாங்கத்தின் பீம் ஆப் ஆனது 17 மாத இடைவெளிக்கு பிறகு டாப் 10 யுபிஐ ஆப்களின் பட்டியலில் மீண்டும் நுழைந்தது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

ஆக்ஸிஸ் பேங்க் ஆப்ஸ் (Axis Bank Apps) போன்ற தனியார் வங்கியின் யுபிஐ ஆப்கள் குறைந்தபட்ச அளவையே (24 மில்லியன்) பதிவு செய்துள்ளன. ஆனால் ரூ.5,231 கோடி பரிவர்த்தனைகளை செய்துள்ளன. இந்தியாவை தவிர, பூட்டான், நேபாளம், மொரிஷியஸ், இலங்கை, சிங்கப்பூர், பிரான்ஸ், ஓமன் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸிலும் கூட தற்போது யுபிஐ சேவை செயல்பட்டு வருகிறது.

ஊடக அறிக்கைகளின்படி, கத்தார், தாய்லாந்து, மலேசியா மற்றும் பிற தென்கிழக்கு ஆசிய நாடுகள் உட்பட பல நாடுகளில் யுபிஐ சேவையை விரிவுபடுத்த என்பிசிஐ திட்டமிட்டு உள்ளது. இதற்கிடையில், இங்கிலாந்து, ஓமன் மற்றும் மாலத்தீவுகள் யுபிஐ சேவையில் ஆர்வம் காட்டி உள்ளன மற்றும் ஆரம்ப கட்ட ஒருங்கிணைப்பை தொடங்கியுள்ளன. நமீபியாவும் 2025 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் யுபிஐ சேவைகளை வெளியிட உள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Using Only Google Pay For UPI Transactions NPCI New Data Makes You To Install PhonePe or Super Money
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X