Home
News

Jio சிம் கார்டு இருக்கா? 1 வருஷத்துக்கு ரீசார்ஜ் செய்வதில் இருந்து விடுமுறை.. விலை உயர்வுல இருந்தும் எஸ்கேப்!

இந்தியாவில் உள்ள அனைத்து டெலிகாம் ஆப்ரேட்டர்களுமே.. குறிப்பாக ஏர்டெல் நிறுவனம்.. 2024 மக்களவை தேர்தல் எப்போது முடியும் என்று ஆவலுடன் காத்திருக்கின்றன. ஏனென்றால், தேர்தலுக்கு பிறகு டெலிகாம் துறையில் ரீசாஜ் கட்டண விலை உயர்வு (Recharge Tariff Hike) அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நினைவூட்டும் வண்ணம், 2024 மக்களவை தேர்தல் ஆனது வருகிற ஜூன் 1ஆம் தேதியன்று முடிவடைகிறது. ஆக வருகிற ஜூன் மாதத்தின் முதல் வாரத்திலேயே ரீசார்ஜ் கட்டண விலை உயர்வு (Recharge Price Hike) அறிவிக்கப்பபடும் சூழ்நிலை உருவாகியுள்ளது. குறிப்பாக ஏர்டெல் (Airtel) நிறுவனமானது "வெளிப்படையாகவே" இதைப்பற்றி பேசிவிட்டது.

Jio சிம் இருக்கா? 1 வருஷத்துக்கு ரீசார்ஜ் செய்வதில் இருந்து விடுமுறை!

ஆனால் முகேஷ் அம்பானி (Mukesh Ambani) தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனமானது ரீசார்ஜ் கட்டண விலை உயர்வை பற்றி எதுவும் பேசாமல்.. பயனர்களின் டேட்டா நுகர்வை அதிகரிக்க (Increasing Data Consumption) திட்டமிட்டுள்ளதாக மட்டுமே குறிப்பிட்டுள்ளது. ஆக ஜூன் முதல் வாரத்தில் சரியாக என்ன நடக்கும் என்று கூறவே முடியாது. இப்போதைக்கு நம்மால் ஆனது எல்லாம்.. ஒரு நல்ல லாங்-வேலிடிட்டி திட்டத்தை (Long Validity Plan) பார்த்து ரீசார்ஜ் செய்வது மட்டுமே!

ஜியோவின் கீழ் 1 வருடம் அல்லது 365 நாட்கள் வேலிடிட்டியை (1 Year or 365 Days Validity) வழங்கும் பல திட்டங்கள் உள்ளன. அதில் 1 வருட அமேசான் ப்ரைம் வீடியோ சந்தவுடன் (Amazon Prime Video Subscription) மொத்தம் 750 ஜிபி டேட்டாவை வழங்கும் ஒரு திட்டத்தை பற்றித்தான் நாம் இங்கே விரிவாக பார்க்க உள்ளோம். அது ஜியோவின் ப்ரீபெய்ட் திட்டமான ரூ.3227 ரீசார்ஜ் (Jio Rs 3227 Plan) ஆகும்.

ஜியோவின் ரூ.3227 திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்கள் 365 நாட்கள் என்கிற வேலிடிட்டியை பெறுவார்கள். அதாவது, இந்த திட்டத்தை ஒருமுறை ரீசார்ஜ் செய்தால், உங்களுக்கு முழு ஆண்டு "ரீசார்ஜ் செய்வதில் இருந்து" விடுமுறை கிடைக்கும். டேட்டா நன்மையை பொறுத்தவரை, இந்த திட்டத்தின் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 2ஜிபி டேட்டா வழங்கப்படும்; அதாவது செல்லுபடியாகும் மொத்தம் காலத்திற்கும் மொத்தம் 730 ஜிபி டேட்டா கிடைக்கும்.

இந்த திட்டத்தின் இன்னொரு சிறப்பு என்னவென்றால், இந்த திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்களுக்கு 1 வருடத்திற்கு அமேசான் ப்ரைம் வீடியோ சந்தாவும் வழங்கப்படும். இருப்பினும், இந்த ப்ரைம் வீடியோ சந்தாவானது மொபைல் எடிஷனாக (Mobile Edition) வழங்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இது தவிர, ஜியோ சினிமா (Jio Cinema), ஜியோ கிளவுட் (Jio Cloud), ஜியோ டிவி (Jio TV) ஆகியவற்றுக்கான அணுகலும் வழங்கப்படும். இதுதவிர்த்து அன்லிமிடட் வாய்ஸ் கால்கள் மற்றும் இலவச எஸ்எம்எஸ்களும் கூட கிடைக்கும். ஒருவேளை உங்களுக்கு ரூ.3227-க்கு மாற்றாக வேறு சில திட்டங்களை ரீசார்ஜ் செய்ய விரும்பினால்.. உங்களுக்கு 2 விருப்பங்கள் உள்ளன.

அதாவது 1 வருடம் அல்லது 365 நாட்கள் என்கிற வேலிடிட்டியை வழங்கும் மெங்கும் இரண்டு திட்டங்கள் ஜியோ நிறுவனத்திடம் உள்ளன. அந்த திட்டங்களின் விலை ரூ.2999 மற்றும் ரூ.3333 ஆகும். ஜியோவின் ரூ.2999 திட்டத்தின்கீழ் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 2.5 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் 1 வருடம் ஆகும். இது அன்லிமிடெட் வாய்ஸ் கால்களுடன் சேர்த்து ஜியோ டிவி, ஜியோ சினிமா மற்றும் ஜியோ கிளவுட் ஆகியவற்றுக்கான அணுகல்களையும் வழங்குகிறது.

மறுகையில் உள்ள ஜியோவின் ரூ.333 திட்டத்தின்கீழ் வாடிக்கையாளர்களுக்கு 365 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது. நன்மைகளை பொறுத்தவரை, இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ஒவ்வொரு நாளும் 2.5 ஜிபி டேட்டா கிடைக்கும். மேலும் ரூ.3333-ஐ போலவே இதுவும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்களுடன் சேர்த்து ஜியோ டிவி, ஜியோ சினிமா மற்றும் ஜியோ கிளவுட் ஆகியவற்றுக்கான அணுகல்களையும் வழங்குகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Using Jio SIM Check Out These 1 Year Validity Plan to Escape From Tariff Price Hike Coming June 2024
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X