பிப். 2025 இல் இதான் மினிமம் ரீசார்ஜ்.. ஜியோ, ஏர்டெல், வோடபோன், பிஎஸ்என்எல் SIM கார்டு இருக்கா?
ரிலையன்ஸ் ஜியோ (Jio), பார்தி ஏர்டெல் (Airtel), வோடபோன் ஐடியா (Vodafone Idea) மற்றும் பிஎஸ்என்எல் (BSNL) ஆகிய 4 டெலிகாம் ஆப்ரேட்டர்களுமே, கடந்த 7 - 8 மாதங்களில் தங்களுடைய கட்டண அமைப்பில் (Tariff Structure) ஏராளமான மாற்றங்களை செய்து உள்ளன.
அப்படியாக இந்த 2025 பிப்ரவரியில் (ஜியோ, ஏர்டெல், விஐ மற்றும் பிஎஸ்என்எல்) பயனர்கள் தங்கள் சிம் கார்டுகளை ஆக்டிவ் ஆக வைத்திருக்க குறைந்தது எவ்வளவு மதிப்பிலான திட்டங்களை ரீசார்ஜ் (Minimum Recharge For Keeping SIM Card Active) செய்ய வேண்டும்? அதாவது எந்தெந்த சிம் கார்டுக்கு எது மினிமம் ரீசார்ஜ்? அவைகளில் எந்த நிறுவனம் இருப்பதிலேயே மலிவான மினிமம் ரீசார்ஜை கொண்டுள்ளது? இதோ விவரங்கள்:

பிப்ரவரி 2025 இல் ரிலையன்ஸ் ஜியோ சேவையின் கீழ் கிடைக்கும் மினிமம் ரீசார்ஜ் (Jio Minimum Recharge): இப்போதைக்கு ரிலையன்ஸ் ஜியோ சேவையின் கீழ் கிடைக்கும் மினிமம் வேலிடிட்டி ரீசார்ஜ் ரூ.189 திட்டம் தான். இந்த திட்டம் 28 நாட்கள் என்கிற சர்வீஸ் சேவை வேலிடிட்டியுடன் (28 Days Service Validity) வருகிறது.
நன்மைகளை பொறுத்தவரை, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், 300 இலவச எஸ்எம்எஸ்கள் மற்றும் மொத்தம் 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. கூடுதல் நன்மைகளை பொறுத்தவரை இது ஜியோ (JioTV), பிரீமியம் அல்லாத ஜியோ சினிமா (JioCinema) மற்றும் ஜியோ க்ளவுட் (Jio Cloud) ஆகியவற்றிற்கான அணுகல்களையும் கொண்டு வருகிறது.
பிப்ரவரி 2025 இல் ஏர்டெல் பார்தி சேவையின் கீழ் கிடைக்கும் மினிமம் ரீசார்ஜ் (Airtel Minimum Recharge): இப்போதைக்கு பார்தி ஏர்டெல் சேவையின் கீழ் கிடைக்கும் மினிமம் வேலிடிட்டி ரீசார்ஜ் ரூ.199 திட்டம் தான். இந்த திட்டம் 28 நாட்கள் என்கிற சர்வீஸ் வேலிடிட்டியுடன் (28 Days Service Validity) வருகிறது. நன்மைகளை பொறுத்தவரை, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், தினமும் 100 இலவச எஸ்எம்எஸ்கள் மற்றும் மொத்தம் 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது
பிப்ரவரி 2025 இல் வோடபோன் ஐடியா சேவையின் கீழ் கிடைக்கும் மினிமம் ரீசார்ஜ் (Vodafone Minimum Recharge): இப்போதைக்கு வோடபோன் ஐடியா சேவையின் 2 மினிமம் வேலிடிட்டி ரீசார்ஜ் திட்டங்கள் அணுக கிடைக்கின்றன: ரூ.99 மற்றும் ரூ.155. வோடாபோன் ஐடியாவின் ரூ.99 திட்டமானது 15 நாட்கள் என்கிற சர்வீஸ் வேலிடிட்டியுடன் (15 Days Service Validity) வருகிறது.
நன்மைகளை பொறுத்தவரை, 200எம்பி டேட்டா. ரூ.99 க்கு டால்க் டைம்-ஐ வழங்குகிறது. இதில் இலவச எஸ்எம்எஸ்கள் எதுவும் கிடையாது எவ்வாறாயினும், பயனர்கள் போர்ட் அவுட் எஸ்எம்எஸ்களை 1900 க்கு அனுப்பலாம், இதன்கீழ் எஸ்எம்எஸ்களுக்கான நிலையான கட்டணங்கள் வசூலிக்கப்படும் என்பதை மறக்க வேண்டாம்.
பிப்ரவரி 2025 இல் பிஎஸ்என்எல் சேவையின் கீழ் கிடைக்கும் மினிமம் ரீசார்ஜ் (BSNL Minimum Recharge): இப்போதைக்கு பிஎஸ்என்எல் சேவையின் 2 மினிமம் வேலிடிட்டி ரீசார்ஜ் திட்டங்கள் அணுக கிடைக்கின்றன: ரூ.59 மற்றும் ரூ.99. பிஎஸ்என்எல்-ன் ரூ.59 திட்டமானது 7 நாட்கள் என்கிற சர்வீஸ் வேலிடிட்டியுடன் (7 Days Service Validity) உடன் வருகிறது. மறுகையில் உள்ள ரூ.99 திட்டமானது 17 நாட்கள் என்கிற சர்வீஸ் வேலிடிட்டியுடன் (17 Days Service Validity) உடன் வருகிறது
நன்மைகளை பொறுத்தவரை, ரூ.59 திட்டம் ஆனது டெய்லி 1ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்களை வழங்கும். ஆனால் ரூ.99 திட்டமானது அன்லிமிடெட் வாய்ஸ் கால்களை (Unlimited Voice Calls) மட்டுமே வழங்குகிறது. இதன்கீழ் எந்த விதமான டேட்டா நன்மையும் கிடையாது; எஸ்எம்எஸ் நன்மையும் கிடையாது.


Click it and Unblock the Notifications








