Home
News

இந்த 5 பேங்க் அக்கவுண்ட் உடனும் உங்க UPI அக்கவுண்ட் லிங்க் ஆகி இருக்கா.. அப்போ நீங்க தான் வின்னர்!I

பெட்டிக்கடை, மளிகை கடை தொடங்கி பள்ளி கட்டணம், மருத்துவமனை பில்கள் வரையிலாக.. கிட்டத்தட்ட யாருமே ரொக்கமாக பணம் செலுத்துவது இல்லை. கூகுள் பே (Google Pay), போன்பே (PhonePe), பேடிஎம் (Paytm) போன்ற யுபிஐ ஆப்கள் (UPI Apps) வழியாகவே பெரும்பாலான பேமண்ட்கள் நடக்கிறது.

அப்படியாக நீங்களும் ரொக்கமாக பணத்தை கையிருப்பில் வைத்து பல மாதங்கள் ஆகிறது என்று கூறுபவராக இருந்தால்.. கீழ்வரும் 5 தனியார் வங்கிகளில் உங்களுக்கு அக்கவுண்ட் இருந்து, அந்த அக்கவுண்ட்டை உங்களுடைய யுபிஐ அக்கவுண்ட் உடன் லிங்க் செய்து வைத்து இருந்தால்.. கடந்த செப்டம்பர் மாதம் - நீங்க தான் டாப்பு!

இந்த 5 பேங்க் அக்கவுண்ட் உடனும் உங்க UPI லிங்க் ஆகி இருக்கா?

அதாவது கடந்த செப்டம்பர் 2025 இல் யுபிஐ பரிவர்த்தனைகளில் ஆதிக்கம் செலுத்திய டாப் 5 தனியார் வங்கிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அந்த வங்கிகளின் கீழ் தான் நீங்கள் யுபிஐ பேமண்ட்களை செய்கிறீர்கள் என்றால்.. கீழ்வரும் 5 பிரைவேட் பேங்க்குகளும் டாப் 5 இடங்களுக்கு வர நீங்கள் தான் காரணம்:

5. ஏர்டெல் பேமென்ட்ஸ் பேங்க் லிமிடெட் (Airtel Payments Bank Ltd): இது 2025 செப்டம்பர் மாதத்தில் யுபிஐ பரிவர்த்தனை பட்டியலில் 626.60 மில்லியனுடன் 5வது இடத்தில் இருக்கும் தனியார் துறை வங்கியாகும். அங்கீகரிக்கப்பட்ட சதவீதம் 84.66% மற்றும் தொழில்நுட்ப ரீதியாக 0.23% சரிவு. கடந்த 2025 ஆகஸ்ட் மாதத்தில் இந்த வங்கியின் மொத்த பரிவர்த்தனைகளின் அளவு 637.23 மில்லியனாக இருந்ததும் இங்கே குறிப்பிடத்தக்கது.

4. ஐசிஐசிஐ பேங்க் லிமிடெட் (ICICI Bank Ltd): இது கடந்த செப்டம்பர் மாதத்தில் யுபிஐ பரிவர்த்தனை பட்டியலில் 4வது இடத்தில் உள்ள தனியார் துறை வங்கியாகும், மொத்த அளவு 730.11 மில்லியன் ஆகும். ஒரு நாளைக்கு அதிகபட்சம் 20 பரிவர்த்தனைகளுடன் கூடிய ஸ்டாண்டர்ட் பரிவர்த்தனைகளுக்கு ரூ. 1 லட்சம் என்கிற டெய்லி லிமிட்டை வழங்குகிறது.

3. ஆக்சிஸ் வங்கி லிமிடெட் (Axis Bank Ltd): கடந்த செப்டம்பர் மாதத்தில் யுபிஐ பரிவர்த்தனை பட்டியலில் 902.48 மில்லியன் மொத்த அளவுடன் 3வது இடத்தில் உள்ள தனியார் துறை வங்கி இதுவாகும். இது புதிதாக இணைந்தவர்களுக்கு 72 மணி நேரத்திற்கு ரூ.5000 என்கிற வரம்பை கொண்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இந்த வங்கியின் மொத்த பரிவர்த்தனைகளின் அளவு 902.87 மில்லியன் ஆகும்.

2. கோடக் மஹிந்திரா பேங்க் (Kotak Mahindra Bank): இது கடந்த செப்டம்பர் மாதத்தில் யுபிஐ பரிவர்த்தனை பட்டியலில் 965.85 மில்லியன் மொத்த அளவுடன் இரண்டாவது இடத்தில் உள்ள தனியார் துறை வங்கியாக உள்ளது. 92.30% அங்கீகரிக்கப்பட்ட சதவீதம் மற்றும் 0.10% தொழில்நுட்ப சரிவை மட்டுமே கண்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இதன் மொத்த பரிவர்த்தனைகளின் அளவு 978.17 மில்லியன் ஆகும்.

1. எச்டிஎப்சி பேங்க் லிமிடெட் (HDFC BANK Ltd): இது 2205 செப்டம்பர் மாதத்தில் யுபிஐ பரிவர்த்தனைகளில் முன்னணி தனியார் துறை வங்கியாக இது உள்ளது. இதன் மொத்த அளவு 1,536.13 மில்லியன் ஆகும். இந்த வங்கியின் அங்கீகரிக்கப்பட்ட சதவீதம் 95.06 மற்றும் தொழில்நுட்ப சரிவு வெறும் 0.01% மட்டுமே ஆகும்

இந்த வங்கியும் ஒரு நாளைக்கு அதிகபட்சம் 20 பரிவர்த்தனைகளுடன் கூடிய நிலையான யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு ரூ.1 லட்சம் என்கிற தினசரி வரம்பை கொண்டுள்ளது. புதிதாக இணைந்தவர்களுக்கு 72 மணி நேரத்திற்கு ரூ.5000 என்கிற வரம்பையும் கொண்டுள்ளது. 2025 ஆகஸ்ட் மாதத்தில், எச்டிஎப்சி பேங்க் லிமிடெட்-ன் மொத்த பரிவர்த்தனைகளின் அளவு 1,581.09 மில்லியன் ஆகும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Using UPI Via These 5 Private Banks Then You Are The Topper Among Others
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X