Home
News

உஷார்.. பெட்ரோல் பங்க்கில் Google Pay யூஸ் பண்றீங்களா? QR Code-ல் இதை கவனிச்சா பணம் அனுப்பாதீங்க!

இந்தியர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான யுபிஐ (UPI) ஆப்களில் ஒன்றான கூகுள் பே (Google Pay) ஆப்பை பயன்படுத்துபவர்களில் நீங்களும் ஒருவர் என்றால்.. குறிப்பாக பெட்ரோல் பங்க்கில் பணம் செலுத்த பெரும்பாலும் நீங்கள் கூகுள் பே ஆப்பை தான் பயன்படுத்துகிறீர்கள் என்றால்.. பணம் செலுத்தும் முன், நீங்கள் ஸ்கேன் செய்யும் க்யூஆர் கோட்-ஐ கவனமாக சரிபார்க்கவும்.

ஏனென்றால் மிசோரம் மாநிலம் அய்ஸ்வால் நகரில் உள்ள ஒரு பெட்ரோல் பம்பில் க்யூஆர் கோட் ஒட்டியிருந்த ஸ்டிக்கருக்கு பதிலாக தனது சொந்த ஸ்டிக்கரை ஒட்டி பணம் திருடிய 23 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். பிடிஐ-யின் அறிக்கையின்படி, குற்றம் சாட்டப்பட்டவர் தனது சொந்த ஜிபே க்யூஆர் கோட்-ஐ பிரிண்ட் செய்து இந்த ஏமாற்று வேலையை செய்துள்ளார்; பின்னர் பெட்ரோல் பம்ப் மேலாளரின் புகாரை தொடர்ந்து கைது செய்யப்பட்டுள்ளார்.

உஷார்.. பெட்ரோல் பங்க்கில் Google Pay யூஸ் பண்றீங்களா?

குற்றம் சாட்டப்பட்டவர் மூன்று கூகுள் பே பரிவர்த்தனைகள் மூலம் ரூ.2,315 திருடி உள்ளார். அதில் பணம் பெற்றவர்களில் ஒருவருக்கு ரூ.890-ஐ திருப்பிக் கொடுத்ததாகவும், மீதமுள்ள ரூ.1,425-ஐ செலவு செய்து விட்டதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் திருப்பிக்கொடுக்கப்பட்ட ரூ.890 ஆனது குறிப்பிட்ட வாடிக்கையாளர் பணம் யாருக்கு சென்றுள்ளது என்பதை கவனததன் விளைவாக நடந்து இருக்கலாம்.

எனவே அடுத்தமுறை, பெட்ரோல் பங்க்கில் கூகுள் பே அல்லது வேறு எந்த யுபிஐ ஆப் வழியாக பணம் செலுத்தினாலும், நீங்கள் ஸ்கேன் செய்யும் க்யூஆர் கோட் ஆனது குறிப்பிட்ட பெட்ரோல் பங்க்கின் பெயரை சுட்டிக்காட்டுகிறதா அல்லது நீங்கள் ஸ்கேன் செய்யும் க்யூஆர் கோட் ஸ்டிக்கரில் குறிப்பிடப்பட்டுள்ள பெயரை காட்டுகிறத என்பதை கவனமாக சரிபார்க்கவும் .

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் யுபிஐ பயன்பாட்டிற்க்குள் ஏற்படும் குளறுபடிகளை மற்றும் ஏமாற்று வேலைகளை தடுக்க ஒவ்வொரு மாதமும் யுபிஐ சேவையில் பல புதிய மாற்றங்கள் அறிமுகம் செய்யப்படுகின்றன மற்றும் கடுமையான விதிகள் அமல்ப்படுத்தப்படுகின்றன. நினைவூட்டும் வண்ணம் கடந்த நவ.1 முதல் யுபிஐ லைட் சேவையில் 3 முக்கியமான மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன.

இந்த யுபிஐ புதிய விதிகளின் கீழ். யுபிஐ லைட் சேவைக்கான பரிவர்த்தனை வரம்பு ரூ.500 இல் இருந்து ரூ.1000 ஆகவும், யுபிஐ லைட் வாலட்டுக்கான வரம்பு ரூ.2000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. கூடவே யுபிஐ லைட் வாலட்டுக்கான ஆட்டோ டாப்-அப் வசதியும் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த புதிய வசதியின்கீழ், யுபிஐ லைட் வாலட்டின் பேலன்ஸ் ஆனது குறிப்பிட்ட வரம்பிற்கு கீழே செல்லும் போது அது தானாகவே டாப்-அப் ஆகிக்கொள்ளும் திறன் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும்.

யுபிஐ சேவையானது ஏடிஎம் செண்டர்களுக்கும் ஆப்பு வைத்துள்ளது. பரவலாகி வரும் யுபிஐ சேவையின் விளைவாக, அதிக பணப்புழக்கம் இருக்கும் போதிலும் கூட, இந்தியாவில் உள்ள வங்கிகள் தத்தம் ஏடிஎம்-களின் எண்ணிக்கையை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து வருவதாகவும் கூறப்படுகிறது. ஆர்பிஐ தரவுகளின்படி இந்தியாவில் ஏடிஎம்-களின் எண்ணிக்கை கடந்த செப்டம்பர் 2023 இல் 219,000 இல் இருந்து, இந்த 2024 செப்டம்பரில் 215,000 ஆக குறைந்துள்ளது.

இதன்விளைவாக இந்தியாவானது, கூடிய விரைவில் க்ளோபல் மாடலை (Global mode) பின்பற்ற வேண்டியிருக்கும் என்றும் வல்லுநர்கள் கணித்துள்ளனர். க்ளோபல் மாடல் என்றால், ஒரு கிளைக்கு 2 ஏடிஎம்கள், ஒரு ஆன்-சைட் மற்றும் ஒரு ஆஃப்-சைட் ஏடிஎம்களை கொண்டிருப்பதாகும். இப்படி செய்வதன் மூலம் வங்கிகளால் பிஸிக்கல் மற்றும் டிஜிட்டல் உள்கட்டமைப்பை சமநிலையில் வைத்திருக்க முடியும்.

புதிய மாற்றங்கள், விதிகள் மற்றும் கட்டுப்பாடுகள் எல்லாம் ஒருபக்கம் இருக்க ஜென்வைஸ் ஆனது வயதானோர்களுக்காகவே சிறப்பாக வடிவமைக்கப்பட்ட யுபிஐ பேமெண்ட்டை அறிமுகப்படுத்தி உள்ளது. சீனியர் சிட்டிசன்களுக்கான ஆப்-பேஸ்டு கிளப் ஆன ஜென்வைஸ், ஆக்சிஸ் வங்கியுடன் கூட்டு சேர்ந்து ஜென்வைஸ் யுபிஐ (GenWise UPI) சேவையை அறிமுகம் செய்துள்ளது.

இது வயதானவர்கள் பயன்படுத்தும்படியான மிகவும் எளிமையான யூஸர் இன்டர்பேஸையும் (Simple User Interface), ஜியோ-ஃபென்சிங் (Geo-fencing), பயோமெட்ரிக் அங்கீகாரம் (Biometric authentication) மற்றும் ஆடியோ அடிப்படையிலான நேவிகேஷன் (Audio-based navigation) போன்ற பாதுகாப்பு அம்சங்களையும் கொண்டுள்ளதாக ஜென்வைஸ் கூறுகிறது!

Best Mobiles in India

English summary
Using Google Pay in Petrol Bunk Carefully Check QR Code Before Paying the Money Here is Why
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X