உலககோப்பை கால்பந்து போட்டி முடிந்தது, அதுக்காக இப்படியா பண்ணுவீங்க? Jio சினிமாவுக்கு வந்த பரிதாபநிலை.!
2022 உலகக் கோப்பையை லியோனல் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்டினா அணி வென்று சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. குறிப்பாக 1986-ம் ஆண்டில் மரடோனா தலைமையில் அர்ஜெண்டினா அணி மகுடம் சூடியது. தற்போது அவரது வழியில் மெஸ்சியும் 'மேஜிக்' நிகழ்த்தியுள்ளார் என்றுதான் கூறவேண்டும்.
அதேபோல் இந்த உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் அரபு நாடான கத்தாரில் கடந்த மாதம் 20-ந்தேதி கோலாகலமாகத் தொடங்கியது. இந்த போட்டிகளை லட்சக்கணக்கான கால்பந்து ரசிகர்கள் கத்தார் சென்று பார்த்ததை போன்று உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான ரசிகர்கள் டிவி மற்றும் டிஜிட்டல் தளங்களில் பார்த்து ரசித்தனர்.

குறிப்பாக இந்தியாவில் ஜியோ சினிமா தளத்தில் இந்த கால்பந்து ஒளிபரப்பு செய்யப்பட்டது. எனவே அதிக மக்கள் இந்த போட்டிகள் ஆரம்பித்ததும் ஜியோ சினிமா டவுண்ட்லோடு செய்து பார்த்தனர். அதேபோல் டிவி பார்வையாளர்களை விட அதிக பார்வையாளர்கள் டிஜிட்டல் தளத்தில் இந்த கால்பந்து போட்டிகளைப் பார்த்துள்ளனர்.
ஏற்கனவே வெளிவந்த BARC தகவலின்படி, முதல் 48 போட்டிகளில் ஜியோ சினிமாவின் ரீச் 42.2 மில்லியன் தாண்டியுள்ளது. குறிப்பாக இந்த இறுதிப் போட்டியின் பார்வையாளர்களையும் சேர்த்து இந்த எண்ணிக்கை இன்னும் கூடுதலாக வந்திருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜியோ சினிமா 4கே தரத்தில் போட்டிகளை ஒளிபரப்பு செய்தது.
கடந்த நவம்பர் மாதம் அதிகம் தரவிறக்கம் செய்யப்பட்ட பொழுதுபோக்கு செயலிகளில் ஜியோ சினிமா ஆப் முதல் இடத்தை பிடித்துள்ளது. ஆனாலும் நேற்று 2022 உலகக் கோப்பையை லியோனல் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்டினா அணி வென்று சாம்பியன் பட்டத்தை வென்றவுடன் சிலர் இந்த செயலியை நீக்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். தற்போது சிலர் ட்விட்டர் தளத்தில் இந்த ஜியோ சினிமா செயலிக்கு நன்றி எனக் கூறி அன்இன்ஸ்டால் செய்யும் படங்களை பகிர்ந்துள்ளனர். அதேபோல் ஜியோ சினிமா ஆப் குறித்து பலர் கிண்டலாக கலாய்த்து படங்களை வெளியிட்டுள்ளனர்.
இருந்தபோதிலும் சிலர் "அற்புதமான ஸ்ட்ரீமிங்கிற்காக" ஜியோ சினிமா பயன்பாட்டிற்கு நன்றி என்று தெரிவித்துள்ளனர். ஆரம்பத்தில் ஜியோ சினிமாவில் போட்டிகளைக் காண இருந்த இந்திய ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அதாவது இதற்குக் காரணம் என்னவென்றால் ஜியோ சினிமா சரியாக இயங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உலகக் கோப்பை தொடக்க விழா மட்டுமின்றி கத்தார்-ஈக்வடார் இடையேயான தொடக்க ஆட்டமும் இந்த ஜியோ சினிமா செயலியில் சரியாக பார்க்க முடியவில்லை என்று மக்கள் கூறினர். அதன்பின்பு செயலியை அப்டேட் செய்து கொள்ளும்படி ஜியோ சினிமா ட்விட் செய்தது. பின்னர் இந்த செயலியை அப்டேட் செய்து மக்கள் பயன்படுத்தத் துவங்கினர்.
தற்போது பல்வேறு மக்கள் இந்த செயலியை தங்களது போன்களிலும் இருந்து நீக்கி வருகின்றனர் என்றும், சிலர் இந்த செயலியை அப்படியே வைத்துக் கொள்ள ஆர்வம் காட்டுகின்றனர் என்றும் freepressjournal தளம் தகவல் தெரிவித்துள்ளது. ஆனாலும் ஜியோ நிறுவனம் இதுபோன்ற போட்டிகளை ஒளிபரப்பு செய்து மிகப் பெரிய சாதனையைப் படைத்துள்ளது என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக ஜியோ நிறுவனம் இதுபோன்ற பல்வேறு புதிய முயற்சிகளைச் செயல்படுத்த உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜியோ நிறுவனம் அடுத்த வருடம் 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக கூகுள் நிறுவனத்துடன் இணைந்து குவால்காம் ஸ்னாப்டிராகன் சிப்செட் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடன் 5ஜி போனை அறிமுகம் செய்ய உள்ளது ஜியோ நிறுவனம்.


Click it and Unblock the Notifications








