உஷார், ஆபத்தான வைரஸ்- பிங்க் வாட்ஸ்அப் என பரவும் லிங்குகள்: மொத்த தகவல்களை திருடும் ஹேக்கர்கள்- இதை பண்ணாதிங்க

|

பிங்க் வாட்ஸ்அப் என்பது வாட்ஸ்அப் குழுக்கள் மூலம் பரவும் புதிய வைரஸ் ஆகும். பாதிக்கப்பட்ட அனைவரின் ஸ்மார்ட்போன்களிலும் பிங்க் நிற வாட்ஸ்அப் பதிவிறக்கம் செய்து இருப்பது உறுதியளிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல் பல வாட்ஸ்அப் பயனர்கள் பிங்க் வாட்ஸ்அப் செய்தியை தங்களது வாட்ஸ்அப் பக்கத்தில் பார்த்து பகிர்ந்ததாக தெரிவிக்கின்றனர்.

ஆபத்தான பிங்க் வாட்ஸ்அப்

ஆபத்தான பிங்க் வாட்ஸ்அப்

பச்சை நிற வாட்ஸ்அப் லோகோவிற்கு பதிலாக இந்த லோகோ பிங்க் நிறத்தில் காணப்படுகிறது. இதை கிளிக் செய்தவுடன் சாதனத்தின் முழுமையான அணுகல் ஹேக்கர்கள் பெற்றுவிடுவார்கள் என கூறப்படுகிறது. புதிய கணினி வைரஸ் சாதனங்களின் முழுமையான தரவு இழப்பை பயனர்களிடையே உறுதி செய்கிறது. பிங்க் வாட்ஸ்அப் எனவும் மாற்றுவித சேட்டிங் பயன்பாடு எனவும் இந்த தகவல் பரவுகிறது.

தொடரும் ஹேக்கர்களின் மோசடி செயல்

தொடரும் ஹேக்கர்களின் மோசடி செயல்

இதுபோன்ற மோசடி செயல்களுக்கு வாட்ஸ் அப் பயன்படுத்துவது என்பது இது முதல்முறை அல்ல. இருப்பினும் இந்த பிங்க் வாட்ஸ் அப் லிங்க் என்ற புதிய தீம்பொருள் பாதிக்கப்பட்டவர்களின் கட்டுப்பாட்டையும் அதில் இருக்கும் முழு தரவையும் ஈர்த்துவிடுகிறது. இந்த தீம்பொருள் ஆனது சமீபத்தில் ஒரு இணைய பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்களால் டுவிட்டரில் கண்டுபிடிக்கப்பட்டு பகிரப்பட்டது. இந்த புதிய தீம்பொருள் வைரஸ் ஆனது மொபைலில் நிலைநிறுத்தப்பட்டு சானத்தின் முழுத்தகவல்களையும் ஹேக்கர்கள் பெறச்செய்யும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

பதிவிறக்கம் செய்வதற்கான லிங்க் தொடரவோ பகிரவோ வேண்டாம்

பதிவிறக்கம் செய்வதற்கான லிங்க் தொடரவோ பகிரவோ வேண்டாம்

பிங்க் வாட்ஸ்அப் என்ற பெயரிலோ அல்லது வாட்ஸ்அப் மாற்று சேட்டிங் ஆப் என்ற பெயரிலோ ஆப்களை பதிவிறக்கம் செய்வதற்கான லிங்க் பெற்றால் அதை பயன்படுத்த மற்றும் பகிர வேண்டாம். இதன்மூலம் தங்கள் தகவல் ஹேக் செய்யப்படும் என காவல்துறையினர் தரப்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது. பல்வேறு வாட்ஸ் அப் குழுக்களில் கடந்த சில தினங்களாக பிங்க் வாட்ஸ்அப் குறித்த தகவல்கள் வாட்ஸ்அப் க்ரூப் மற்றும் தனியாக பகிரப்பட்டு வருகிறது.

நூதனமான வைரஸின் தாக்கம்

நூதனமான வைரஸின் தாக்கம்

இந்த லிங்கை ஒபன் செய்து இன்ஸ்டால் செய்தால் சாதனத்தில் நூதனமான வைரஸின் தாக்கம் ஏற்படும். இந்த வைரஸ் மூலம் சாதனத்தில் இருக்கும் அனைத்து டேட்டாக்களும் திருடப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

நூதன வைரஸ் மூலம் திருடப்படும்

நூதன வைரஸ் மூலம் திருடப்படும்

அதேபோல் இந்த தகவலை நம்பி இதை கிளிக் செய்து பதிவிறக்கி இன்ஸ்டால் செய்தவர்கள் கணக்குகள் அனைத்தும் நூதன வைரஸ் மூலம் திருடப்பட்டுவிட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி இந்த லிங்கை தொட்டாலே பதிவிறக்கம் செய்யப்பட்டு உடனடியாக அவர்களது தகவல்கள் திருடப்பட்டு விடுவதாக எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதை பயனர்கள் ஒருபோதும் பயன்படுத்த வேண்டாம் என மிகுந்த எச்சரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Users information is Hacked through a link that spreads as Pink WhatsApp!

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X