Home
News

பிக்சல் 6 மற்றும் பிக்சல் 6 ப்ரோ மாடல்களில் இப்படி ஒரு பிரச்சனையா?

சமீபத்தில் அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்ட பிக்சல் 6 மற்றும் பிக்சல் 6 ப்ரோ மாடல்களில் ஸ்கிரீன் மினுமினுப்பு மற்றும் எதிர்பாராத பச்சை நிற விளைவு உள்ளிட்ட சிக்கல்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக பயனர்கள் ஆன்லைனில் தகவல் தெரிவித்துள்ளனர். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல்கள் தனித்துவமான அமசங்களுடன் வெளிவந்தது. ஆனாலும் தற்போது இந்த சாதனங்களின் டிஸ்பிளேக்களில் சில பிரச்சனைகள் வருவதாக பயனர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

பிக்சல் 6 சீரிஸ் அமெரிக்காவில்

அதேபோல் பிக்சல் 6 சீரிஸ் அமெரிக்காவில் விற்பனைக்கு வந்த ஒரு சில நாட்களில் இந்த சிக்கல்கள் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளன. மேலும் இந்த சிக்கல் தொடர்பாக ஒருவர் வீடியோவை வெளியிட்டதாக கூறப்படுகிறது. அதேபோல் இந்த சிக்கல்கள் தரமற்ற மென்பொருளால்ஏற்பட்டதா அல்லது சில வன்பொருள் சிக்கல்களால் ஏற்பட்டதா என்பது தெளிவாகத் தெரியவில்லை. இருந்தபோதிலும் இந்த பிரச்சனை விரைவில் சரி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இப்போது இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களின் அம்சங்களை சற்று விரிவாகப்பார்ப்போம்.

பிக்சல் 6 அம்சங்கள்

பிக்சல் 6 அம்சங்கள்

பிக்சல் 6 ஸ்மார்ட்போன் 6.4-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் ஒஎல்இடி டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது. மேலும் 1,080x2,4000 பிக்சல் தீர்மானம், 20:9 என்ற திரைவிகிதம், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் உள்ளிட்ட பல அம்சங்களை கொண்டுள்ளது இந்த பிக்சல் 6 ஸ்மார்ட்போன்.

 6 ஸ்மார்ட்போனின் பின்

இந்த பிக்சல் 6 ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி பிரைமரி சென்சார் + 12எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ்( f/1.85) என மொத்தம் இரண்டு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி செல்பீ கேமராவைக் கொண்டுள்ளது பிக்சல் 6 ஸ்மார்ட்போன். இதுதவிர பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். எனவே அருமையான புகைப்படங்களை எடுக்க முடியும்.

மாடலில் 4614 எம்ஏஎச் பேட்டரி, 30

இந்த பிக்சல் 6 மாடலில் 4614 எம்ஏஎச் பேட்டரி, 30 வாட் wired பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, 21 வாட் wireless பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உள்ளன. எனவே விரைவாக சார்ஜ் செய்ய முடியும். பின்பு 5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை 6 இ, ப்ளூடூத் வி 5.2, ஜிபிஎஸ்/ ஏ-ஜிபிஎஸ்இ என்எப்சி மற்றும் யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது பிக்சல் 6 மாடல். அதேபோல் பல அசத்தலான சென்சார் வசதியைக் கொண்டுள்ளது இந்த பிக்சல் 6 மாடல்.

பிக்சல் 6 ப்ரோ

பிக்சல் 6 ப்ரோ

பிக்சல் 6 ப்ரோ மாடலில் 6.7-இன்ச் QHD+ LTPO OLED டிஸ்பிளே, 1,440x3,120 பிக்சல் தீர்மானம், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 19:5:9 என்ற திரைவிகிதம், கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு வசதி போன்ற பல அம்சங்களை கொண்டுள்ளது. பின்பு இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி டெலிபோட்டோ லென்ஸ் + 50எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 12எம்பி அல்ட்ரா வைடு கேமரா என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதேபோல் 11.1எம்பி செல்பீ கேமராவைக் கொண்டுள்ளது இந்த பிக்சல் 6 ப்ரோ ஸ்மார்ட்போன்.

 5003 எம்ஏஎச் பேட்டரி

குறிப்பாக இந்த பிக்சல் 6 ப்ரோ மாடலில் 5003 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 30 வாட் wired பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, 23 வாட் wireless பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, 5ஜி, 4 ஜி எல்டிஇ, வைஃபை 6இ, ப்ளூடூத் வி5.2, ஜிபிஎஸ்/ ஏ-ஜிபிஎஸ்,என்எப்சி மற்றும் யுஎஸ்பி டைப்-சி போர்ட்
போன்ற பல அம்சங்கள் உள்ளன.

News Source: gadgets.ndtv.com

Best Mobiles in India

English summary
Users complain of screen problems with the Pixel 6 and Pixel 6 Pro models: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X