கூகுள் சர்ச் இப்படி யூஸ் பண்ணுங்க

By Keerthi
|

இன்று உலகளவில் அதிகம் பயன்படுத்தும் சர்ச் என்ஜின் எது என்று கேட்டால் நாம் எளிதில் சொல்லி விடுவோம் கூகுள் தான்னு.

ஆனால், கூகுள் தேடல் இஞ்சினில் நாளுக்கு நாள் ஏதாவது சிறப்பு வசதிகள் தரப்படுகின்றன. மக்களுக்கு முதன் முதலில் பிரபலமான தன் தேடல் சாதனத்தின் நற்பெயரை கூகுள் தக்க வைக்க ஏதேனும் வசதிகளைத் தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறது.

கூகுள் 64.6% பேரிடமும், அடுத்த இடத்தில் உள்ள யாஹூ 19.3% பேரிடமும் உள்ளது என்றாலும், கூகுள் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை. இதுவரை வந்த கூகுள் கூடுதல் வசதிகள் நாம் மனதில் வைத்துப் பயன்படுத்தக் கூடிய சில கூறுகளை இங்கு காணலாம்.

வழக்கமான தேடுதல் விடைகளுடன், கூகுள் அப்போதைய நேரத்தைக் கூறும் திறன் கொண்டது. நாம் இருக்கும் இடத்தின் நேரம் மட்டுமல்ல; உலகின் எந்த ஊரின் நேரத்தையும் காட்டும்.

கூகுள் தேடல் விண்டோவினை, கால்குலேட்டர் விண்டோவாகவும் பயன்படுத்தலாம். சயின்டிபிக் கால்குலேட்டராகப் பயன்படுத்தக்கூடிய வகையில் இது தரப்படுத்தப்பட்டுள்ளது. 94/36*(sqrt 34)^3 என்று கொடுத்தாலும் சரியான விடை கிடைக்கும். சில கணக்கிடும் அடையாளங்களுக்குச் சொற்களையும் தரலாம். எடுத்துக்காட்டாக 96 divided by 36 times (sqrt34)^3 என்றும் தரலாம்.

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

#1

#1

சில அலகுகளுக்கிடையே மாற்றங்களையும் இதில் கண்டறியலாம். mm to inch, Fahrenheit to Celsius எனக் கொடுத்து யூனிட் மாற்றத்தையும் அறியலாம்.ஒரு சிலர் அலுத்துக் கொள்ளலாம். நாம் எதனைக் கொடுத்தாலும், சரியாக அதனை மட்டும் கொடுக்காமல், சார்ந்த அனைத்தையும் தருகிறதே என்று பலர் இது குறித்து சொல்வதைக் கேட்கலாம். நம் தேடல்களைக் குறிப்பிட்ட ஒன்றின் அடிப்படையில் மட்டும் கிடைக்கும்படி தேடலை அமைக்கலாம். அவற்றில் சில:

#2

#2

+ கொடுத்தால் சில குறிப்பிட்ட சொற்களைக் குறிப்பாகத் தேடும்படி அமைக்கலாம். எ.கா.--netbook

#3

#3


+11.6 +ion- (மைனஸ் அடையாளம்) கொடுத்தால் குறிப்பிடும் சொற்களைத் தவிர்த்து தேடுக என்று பொருள். எ.கா. - gaming keyboard logitech

#4

#4

இதனை கம்ப்யூட்டர் சார்ந்த சொற்களுடன் குறிப்பிடுவார்கள். அதாவது தெரியாத சொற்களுக்கான அடையாளம். traditional * food என்று கொடுத்தால் (*) இந்த அடையாளம் உள்ள இடத்தில் வேறு எந்த சொல்லையும் சேர்த்து தேடிக் கொடு என்று பொருள்.

#5

#5

~ இந்த அடையாளம் கொடுத்தால் அடுத்துள்ள சொல் வழக்கமாக எந்த சொற்களுடன் ஜோடியாகப் பயன் படுத்தப்படுமோ அவை எல்லாவற்றையும் தேடி எடுத்துக்கொடு என்று கட்டளை அமைக்கிறோம். எ.கா. first computer build ~help எனக் கொடுத்தால் அது அனைத்து வகையான ஹெல்ப் வகைகளும் பட்டியலிடப்படும்.

#6

#6

குறிப்பிட்ட எண் வரிசை தொடர்ச்சி யாக வேண்டுமா? எடுத்துக் காட்டாக விலை ரேஞ்ச், தேதி ஆகியவற்றைக் குறிப்பிடலாம். எ.கா. - halo pc $0..$15

ஏதேனும் ஒரு சொல், முதல் எழுத்துக்கள் அடங்கிய சுருக்குச் சொல் போன்றவற்றின் சிறப்பு விளக்கம் பெற ஞீஞுஞூடிணஞு என்ற சொல்லைக் கொடுத்துப் பின் பொருள் தேடும் சொல்லைக் கொடுக் கலாம். எடுத்துக்காட்டாக define algorithm / define WHO என்று கொடுக்கலாம்.

#7

#7

குறிப்பிட்ட பைல் வகைகளை மட்டும் தேடிக் கொடுக்கும்படி filetype: என்ற சொல் கொண்டு தேடலை அமைக்கலாம். எடுத்துக்காட்டாக filetype: pdf எனத் தரலாம்.

ஓர் இணைய தளத்தினைத் தேடக் கட்டளை கொடுக்கையில் அதே பொருளில் உள்ள மற்ற தளங்களைக் காட்டும்படியும் தேடலை அமைக்கலாம். எடுத்துக்காட்டாக related:sciencetv.com என அமைக்கலாம்.

#8

#8

site: என்ற சொல் கொடுத்து குறிப்பிட்ட தளத்தில் மட்டும் ஒன்றைத் தேடும்படி அமைக்கலாம். எடுத்துக்காட்டாக mango site:vegetables.com எனக் கொடுத்து அந்த தளத்தில் மட்டும் இந்த சொல் எங்கு உள்ளது எனத் தேடலாம்.

மேலே கொடுக்கப்பட்டுள்ள ஆப்பரேட்டர் அடையாளங்களை இøணைத்தும் கொடுத்துத் தேடலாம். எடுத்துக்காட்டாக +microsoft +yahoo ~talks "Matthew DeCarlo" site:techspot.com எனக் கொடுக்கலாம்.

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X