மக்கள் நலன் காக்கும் தொழில்நுட்பம்..!!

By Meganathan
|

'தொழில்நுட்பம்' மக்கள் நலனில் என்றும் அக்கறை காட்டி வருவதற்கு மற்றும் ஓர் சாட்சி தான் இவை. இன்று வெளியாகும் பல கருவிகள் மற்றும் செயலிகளுக்கு பின் பல ஆராய்ச்சியாளர்களின் உழைப்பு மற்றும் அதீத நம்பிக்கை ஒளிந்திருக்கின்றது என்பதை யாரும் மறுக்க முடியாது.

உங்களை சூப்பர் ஹூரோவாக்கும் கருவிகள்

அந்த வகையில் மக்களால் செய்ய முடியாத பலவற்றை செய்து முடிக்கும் தொழில்நுட்பம் நாள்தோறும் வெளியாகி வருவதோடு, மாற்று திறனாளிகளுக்காகவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட கருவிகள் மற்றும் செயலிகளை தான் இங்கு பட்டியலிட்டுள்ளோம்..

டாட்

டாட்

உலகின் முதல் ப்ரெய்ல்லீ ஸ்மார்ட் வாட்ச் என்ற பெருமையை பெற்றிருக்கின்றது டாட். கண் பார்வையற்றவர்களுக்கு பக்க பலமாக இருக்கும் இந்த ஸ்மார்ட்வாட்ச் அவர்களுக்கு பல வகையில் உதவியாகவும் இருக்கின்றது.

டால்கிட்

டால்கிட்

பேசுவதில் சிரமம் இருப்பவர்களுக்கு மொழி மற்றும் வார்த்தைகளை கொண்டு மற்றவர்களுடன் தொடர்பு கொள்ள வடிவமைக்கப்பட்டிருக்கும் பிரத்யேக செயலி தான் டால்கிட். இந்த செயலி பல மொழிகளை சப்போர்ட் செய்யும்.

சீசேம் போன்

சீசேம் போன்

இந்த ஸ்மார்ட்போனினை கையில் எடுக்காமலே பயன்படுத்த முடியும். அசைவுகளின் மூலம் இயங்கும் படி இந்த ஸ்மார்ட்போன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

யுஎன்ஐ

யுஎன்ஐ

காது கேளாதவர்களுக்காக கண்டறியப்பட்ட கருவி தான் யுஎன்ஐ, இந்த கருவி கை மற்றும் செய்கைகளை கேமரா மற்றும் சென்சார்களை கொண்டு வார்த்தைகளாக மாற்றும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கருவியில் பொருத்தப்பட்டிருக்கும் விசேஷ வாய்ஸ் ரிகஃனீஷன் மென்பொருள் குரலை வார்த்தைகளாக மாற்றவும் செய்யும்.

ஃபிங்கர் ரீடர்

ஃபிங்கர் ரீடர்

இந்த கருவியை இரு விதங்களில் பயன்படுத்த முடியும். பார்வையற்றவர்களுக்கு புத்தகம் அல்லது மின்னணு கருவிகளில் இருக்கும் எழுத்துக்களை வார்த்தைகளாக சொல்வது மற்றும் மொழி அறியாதவர்களுக்கு மொழி மாற்று கருவியாகவும் பயன்படுகின்றது.

பீ மை ஐஸ்

பீ மை ஐஸ்

பார்வையற்றவர்களுக்கு பயன் தரும் அளவு வடிவமைக்கப்பட்டிருக்கும் செயலி தான் பீ மை ஐஸ் (By My Eyes). இந்த செயலியானது உலகம் முழுவதிலும் இருக்கும் பார்வையற்றவர்களுக்கு உதவுவோருடன் இணைக்கும்.

ஏஎக்ஸ்எஸ் மேப்

ஏஎக்ஸ்எஸ் மேப்

நடக்க முடியாமல் இருப்பவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் வடிவில் இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த செயலி சக்கர இருக்கை கொண்ட பொது இடங்களுக்கு வழி காட்டும்.

டிரான்ஸ்சென்ஸ்

டிரான்ஸ்சென்ஸ்

இந்த செயலி மற்றவர்கள் பேசும் பேச்சை வார்த்தைகளாக மாற்றும் திறன் கொண்டது. மேலும் இந்த செயலி ஒவ்வொருத்தரின் பேச்சுகளையும் வெவ்வேறு நிறங்களில் தனிமைப்படுத்தும் திறன் கொண்டது குறிப்பிடத்தக்கது.

அசிஸ்ட் மீ

அசிஸ்ட் மீ

மாற்று திறனாளிகளுக்கு தக்க நேரத்தில் உதவி பெறும் விதமாக இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த செயலி மாற்று திறனாளிகளையும் அவர்களுக்கு உதவ தயாராக இருப்போரையும் இணைக்கும்.

லிஃப்ட்வேர்

லிஃப்ட்வேர்

அதிகமாக கை நடுங்கவோர் இந்த கரண்டியை பயன்படுத்தி உணவை எடுத்து கொள்ளலாம். கை நடுக்கம் அதிகம் இருப்போர் இந்த கரண்டியை கொண்டு உணவினை சிந்தாமல் எடுத்து கொள்ள முடியும்.

 முகநூல்

முகநூல்

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம்.

Best Mobiles in India

Read more about:
English summary
Assistive Tech for People With Disabilities. Read More in Tamil.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X