ஆன்டிராய்டு கருவியில் இன்டர்நெட் இல்லாமல் கூகுள் மேப்ஸ்களை பயன்படுத்தலாம்
ஸ்மார்ட்போனில் ஆன்டிராய்டு பயன்படுத்தினாலும் சரி, ஐஓஎஸ் பயன்படுத்தினாலும் சரி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் மேப்ஸ்களை பயன்படுத்த முடியும் என்று உங்களுக்கு தெரியுமா.
கீழ் வரும் ஸ்லைடர்களில் இன்டர்நெட் இல்லாமல் கூகுள் மேப்ஸ்களை பயன்படுத்த என்ன செய்ய வேண்டும் என்பதை பாருங்கள்..

அப்டேட்
ஐஓஎஸ் மற்றும் ஆன்டிராய்டு இயங்குதளங்களை பயன்படுத்துபவர்கள் கூகுள் மேப்ஸ்களின் 8வது வெர்ஷனை இன்ஸ்டால் செய்ய வேண்டும்.

ஆஃப்லைன் மேப்ஸ்
முதலில் கூகுள் அக்கவுன்ட்டில் சைன் இன் செய்ய வேண்டும்.

சர்ச் பார்
சர்ச் பாரில் "OK Maps" என டைப் செய்ய வேண்டும், இவ்வாறு டைப் செய்த பின் "Save this map?" என திரையில் தகவல் தெரியும், அடுத்து 'Save' என்ற பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்.

தேடல்
இங்கு உங்களுக்கு தேட வேண்டிய முகவரியை குறிப்பிட்டு சேவ் செய்ய வேண்டும்.

இடம்
தேட வேண்டிய முகவரியை பதிவு செய்த பின் சேவ் பட்டனை க்ளிக் செய்ய வேண்டும். இங்கு அந்த இடத்தின் பெயரை குறிப்பிட்டு சேவ் செய்து கொள்ளலாம்.

ஆஃப்லைன்
ஆஃப்லைன் மேப்ஸ் இயக்குவது சற்று சுலபமான விஷயம் தான், மேப்ஸ் பகுதியில் இருக்கும் 'person' ஐகானை க்ளிக் செய்ய வேண்டும், க்ளிக் செய்த பின் நீங்கள் சேவ் செய்து வைத்த மேப்ஸ்களில் உங்களுக்கு தேட வேண்டியவற்றை தேர்ந்தெடுக்க வேண்டும்.

அளவு
ஆஃப்லைன் மோடில் சிறிய கோளாறு என்னெவென்றால் அதிக தூரம் இருக்கும் இடங்களை சேவ் செய்யும் போது ஃபைல் பெரிதாக இருப்பதை காரணம் காட்டி சேவ் செய்ய இயலாது.


Click it and Unblock the Notifications