Just In
- 4 hrs ago
பார்வை இழந்தவர்களுக்கான புது சூப்பர் Smartwatch.! இந்தியாவில் உருவான அசத்தல் கண்டுபிடிப்பு.!
- 8 hrs ago
போட்டோ எடுத்தா? 1-இன்ச் சோனி கேமராவுடன் அறிமுகமான Vivo X90 Pro! விலை தெரியுமா?
- 8 hrs ago
இப்படியொரு டேப்லெட் மாடலுக்காக தான் வெயிட்டிங்: நல்ல செய்தி சொன்ன ஒன்பிளஸ்.!
- 10 hrs ago
அப்போ ஒன்னு சொல்றிங்க, இப்போ ஒன்னு சொல்றிங்க! காதல்னா என்ன சார்? வசமா சிக்கிய Netflix!
Don't Miss
- News
நானும் பொது குழு உறுப்பினர்.. அதிமுக வேட்பாளருக்கான சுற்றறிக்கை கிடைக்கவில்லை- மைத்ரேயன் ஆதங்கம்
- Movies
எங்களை நேசிக்கும் உறவுகளுக்காகவும்.. ரவீந்தர் -மகாலட்சுமி கோயில் விசிட்!
- Lifestyle
உங்க காலில் இந்த பிரச்சினை இருந்தால் உங்கள் தைராய்டு சுரப்பியில் சிக்கல் இருக்குனு அர்த்தமாம்... ஜாக்கிரதை!
- Sports
இந்திய அணியை பலப்படுத்தனும்..இதுக்காக ஸ்பெஷல் பயிற்சி தருகிறோம்..குறை குறித்து பேசிய ராகுல் டிராவிட்
- Finance
அதானி குழுமம் - ஹிண்டன்பர்க் விவகாரம்.. முக்கியக் கூட்டாளி டோட்டல் எனர்ஜிஸ் அறிக்கை..!
- Travel
இனி திருப்பதியில் உண்டியல் பணம் கணக்கிடும் போது கண்ணாடி சுவர்கள் வழியே நீங்களும் பார்க்கலாம்!
- Automobiles
ஹீரோ ஸுமால இத்தன மாடலுக்கு பாதிப்பா! டிவிஎஸ் ஜுபிடர், ஹோண்டா ஆக்டிவா, டியோனு எல்லாத்துக்குமே ஆப்புதான்...
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
சபாஷ் சரியான அறிவிப்பு: இனி USB Type-C போர்ட் மட்டும் தான்! இந்தியாவில் எப்போது அமலுக்கு வருகிறது?
இதுவரை ஸ்மார்ட்போன்கள், கேமராக்கள், டேப்லெட் போன்ற பல சாதனங்களுக்கு தனித்தனி சார்ஜர் தான் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் இனிமேல் இந்த சார்ஜர் பிரச்சனை இருக்காது. அதாவது போன்கள், டேப்லெட் மற்றும் கேமரா எனப் பல சாதனங்களுக்கு யூஎஸ்பி டைப்-C சார்ஜிங் போர்ட்டைப் பயன்படுத்த வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் சமீபத்தில் வலியுறுத்தி இருந்தது.

யூஎஸ்பி டைப்-C சார்ஜிங் போர்ட்
இந்நிலையில் வரும் 2025-ம் ஆண்டு மார்ச் முதல் யூஎஸ்பி டைப்-C சார்ஜிங் போர்ட் பயன்படுத்துவதைக் கட்டாயமாக்க இந்திய அரசாங்கமும் திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த திட்டம் மிகவும் பயனுள்ள வகையில் தான் இருக்கும்.

இந்தியாவில் கட்டாயமாக்க வேண்டும்..
குறிப்பாக இந்தியத் தர நிர்ணய பணியகம் (Bureau of Indian Standards) யூஎஸ்பி டைப்-C போர்ட்டை இந்தியாவில் கட்டாயமாக்க வேண்டும் என வலியுறுத்தி வந்த நிலையில், தற்போது மின்னணு சாதனங்களுக்கு பொதுவாகப் பயன்படுத்தக்கூடிய சார்ஜரை உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.

ரோஹித் குமார் சிங்
சமீபத்தில் யூனியன் நுகர்வோர் விவகாரத்துறை செயலாளர் ரோஹித் குமார் சிங் கூறியது என்னவென்றால், மின்னணு கழிவுகளைக் குறைக்கும் விதமாகவும், மக்கள் பல சார்ஜர்களை வாங்குவதைத் தவிர்க்கவும்தான் இதுபோன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன எனத் தெரிவித்தார்.

கான்பூர் ஐஐடி
இதுதவிர ஸ்மார்ட்வாட்ச் மற்றும் புளூடூத் பயன்படுத்தும் மின்னணு சாதனங்களுக்கும் ஒரே சார்ஜிங் போர்ட்டை உருவாக்குவது குறித்து இந்தியத் தொழில்நுட்ப நிறுவனமான கான்பூர் ஐஐடி-யில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக இந்த ஆய்வுகளின் அறிக்கையை சமர்ப்பித்தவுடன் தொழில்துறையுடன் சேர்ந்து முடிவு எடுக்கப்படும்.

மிஷன் லைஃப்..
மேலும் கடந்த மாதம் நடைபெற்ற ஒரு மீட்டிங்களில் ஒரே மாதிரியான சார்ஜிங் போர்ட்டின் சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்ய ஒரு துணைக் குழுவை உருவாக்க நுபர்வோர் விவகார அமைச்சகம் முடிவு செய்தது. பின்பு சுற்றுச்சூழலைப் பாதுகாக்கப் பிரதமர் நரேந்திர மோடி மிஷன் லைஃப் என்ற திட்டத்தை அண்மையில் தொடங்கி வைத்திருந்தார்.

கழிவுகளைக் கட்டுப்படுத்த முடியும்
தற்போது இந்த திட்டத்தின் ஒரு பகுதியாகத்தான் யூஎஸ்பி டைப்-C சார்ஜிங் போர்ட் பயன்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த யூஎஸ்பி டைப்-C சார்ஜிங் போர்ட் மட்டும் பயன்படுத்துவது மூலம் தேவையற்ற மின்னணு கழிவுகளைக் கட்டுப்படுத்த முடியும். பின்பு மக்களுக்கும் சிரமமின்றி ஒரே மாதிரியான சார்ஜர்களை பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

அகற்றக்கூடிய வகையில் இருக்க வேண்டும்..
அதேபோல் ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தப்படும் பேட்டரி அகற்றக்கூடிய வகையில் இருக்க வேண்டும் என்ற புதிய விதிமுறை ஐரோப்பாவில் கொண்டு வருவதற்கு முயற்சிகள் நடந்து வருகிறது. அதாவது போன்களில் பேட்டரியானது அதனுள்ளயே இன்பில்டாக உள்ளது. எனவே பேட்டரியில் பிரச்சனை அல்லது பேட்டரி ஆயுள் குறைந்தால் மொத்தமாக ஸ்மார்ட்போனையே மாற்ற வேண்டிய நிலைமை உள்ளது.

புதிய விதிமுறை?
இந்நிலையில் ஸ்மார்ட்போனுக்கு வழங்கப்படும் பேட்டரி ஆனது அகற்றி, மாற்றும் வகையில் இருக்க வேண்டும் எனவும், ஒரு வேளை பேட்டரி ஆயுள் குறைந்துவிட்டால், பேட்டரியை மட்டும் தனியாக மாற்றும் வகையில் வழிவகை செய்ய வேண்டும் என்று ஐரோப்பாவில் சர்ச்சைகள் எழுந்துள்ளன. குறிப்பாக ஸ்மார்ட்போனுக்கு வழங்கப்படும் பேட்டரி மறுசுழற்சி செய்யும் வகையில் இருக்க வேண்டு என வலியுறுத்தப்பட்டுள்ளது. பின்பு பேட்டரிக்கான இந்த புதிய விதிமுறை ஐரோப்பா நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது. விரைவில் இது அமல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470