அலெர்ட்! மொபைல் போன்களுக்கான புதிய சட்டத்தை அறிவித்த இந்திய அரசு! இப்போ நீங்க என்ன செய்ய வேண்டும்?

|

பரந்த அளவிலான ஆலோசனைகளை நடத்திய பின்னர், இந்திய அரசாங்கம் அனைத்து மொபைல் போன்களுக்குமான ஒரு புதிய சார்ஜர் கொள்கையை (New Charger Policy) கொண்டு வர முடிவு செய்துள்ளது.

அதென்ன கொள்கை? இதன் பின்னால் உள்ள காரணம் என்ன? "விரைவில்" நடைமுறைக்கு வரும் இந்த புதிய சார்ஜர் கொள்கையை நாமெல்லாம் ஏற்றுக்கொண்ட பின்னர் என்ன நடக்கும்? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்!

கூடிய விரைவில் இந்தியாவும்!

கூடிய விரைவில் இந்தியாவும்!

ஐரோப்பிய ஒன்றியத்தை போலவே, கூடிய விரைவில் இந்தியாவும் காமன் சார்ஜர் பாலிசிக்கு (Common charger policy), அதாவது பொதுவான சார்ஜர் கொள்கைக்கு மாற உள்ளது!

அறியாதோர்களுக்கு, ஸ்மார்ட்போன்கள், லேப்டாப்கள் மற்றும் டேப்லெட்டுகள் என கிட்டத்தட்ட அனைத்து டிவைஸ்களிலுமே ஒரே சார்ஜிங் போர்ட்டை (Same Charging Port) பயன்படுத்த வேண்டும் என்பதே 'காமன் சார்ஜர் பாலிசி' ஆகும்.

சத்தம் இல்லாம தூக்கிட்டாங்க! இனிமேல் இந்த Jio பிளானும் கிடைக்காது; முக்கிய நன்மை ஒன்றும் கிடைக்காது!சத்தம் இல்லாம தூக்கிட்டாங்க! இனிமேல் இந்த Jio பிளானும் கிடைக்காது; முக்கிய நன்மை ஒன்றும் கிடைக்காது!

இதனால் என்ன நன்மை?

இதனால் என்ன நன்மை?

"அனைத்து" கேஜெட்களிலும் ஒரே சார்ஜிங் போர்ட்-ஐ பயன்படுத்தும் இந்த உலகளாவிய சார்ஜர் கொள்கையின் மூலம், நுகர்வோர்கள் ஒவ்வொரு முறையும் புதிய டிவைஸை வாங்கும் போது வெவ்வேறு சார்ஜர்களை வாங்க வேண்டிய / பயன்படுத்த வேண்டிய அவசியம் இருக்காது!

அதுமட்டுமின்றி, இந்த நடவடிக்கையால் நாட்டில் ஆண்டுக்கு ஆண்டு உற்பத்தியாகும் மின்னணுக் கழிவுகளின் அளவும் குறையும்!

இந்த கொள்கை ஃபீச்சர் போன்களுக்கும் பொருந்துமா?

இந்த கொள்கை ஃபீச்சர் போன்களுக்கும் பொருந்துமா?

இந்திய அரசாங்கம் கொண்டு வரும் இந்த புதிய சார்ஜர் கொள்கையின் கீழ், ஸ்மார்ட்போன்கள், லேப்டாப்கள் மற்றும் டேப்லெட்டுகள் உள்ளிட்ட ஸ்மார்ட் டிவைஸ்களுக்கு மட்டுமே பொருந்தும்.

இருப்பினும் மிகவும் மலிவான விலைப்பிரிவில் வாங்க கிடைக்கும் ஃபீச்சர் போன்களில் இந்த புதிய சார்ஜர் கொள்கை கொண்டுவரப்பட வேண்டுமா என்பதை பற்றி இந்தியா அரசாங்கம் இன்னும் முடிவு செய்யவில்லை!

இனிமேல் டபுள் கேம் ஆடலாம்.. சைக்கிள் கேப்ல WhatsApp செட்டிங்ஸ்-க்குள் புகுந்த புதிய Mode!இனிமேல் டபுள் கேம் ஆடலாம்.. சைக்கிள் கேப்ல WhatsApp செட்டிங்ஸ்-க்குள் புகுந்த புதிய Mode!

இப்போது நீங்க என்ன செய்ய வேண்டும்?

இப்போது நீங்க என்ன செய்ய வேண்டும்?

நாம் இங்கே பேசும் காமன் சார்ஜர் (Common Charger) என்பது டைப்-சி போர்ட் சார்ஜரே (Type-C Port Charger) ஆகும். அதாவது ஸ்மார்ட்போனாக இருந்தாலும் சரி, டேப்லெட் ஆக இருந்தாலும் சரி, லேப்டாப் ஆக இருந்தாலும் சரி.. அது டைப்-சி போர்ட்டை கொண்டிருக்கும் ஒரு டிவைஸ் ஆக மாற போகிறது என்று அர்த்தம்!

முன்னரே குறிப்பிட்டபடி, இந்த புதிய சார்ஜர் கொள்கையின் பின்னால் உள்ள முக்கிய குறிக்கோள் - இந்தியா உருவாக்கும் மின்-கழிவுகளின் அளவைக் குறைப்பதே ஆகும்!

ஆக நீங்கள் இப்போது செய்ய வேண்டியதெல்லாம், உங்கள் பழைய போன்களுக்கான பழைய சார்ஜர்களை பத்திரமாக வைத்து கொள்ள வேண்டும்; அவ்வளவு தான்! இல்லையேல் தனியாக பணம் கொடுத்தே புதிய சார்ஜர்களை வாங்க வேண்டி இருக்கும்!

ஆப்பிளுக்கு பெரிய தலைவலி!

ஆப்பிளுக்கு பெரிய தலைவலி!

இந்தியாவின் எலக்ட்ரானிக் வேஸ்ட் மேனேஜ்மென்ட்டின் ASSOCHAM-EY அறிக்கையின்படி, நம் நாடு 5 மில்லியன் டன் மின்-கழிவுகளை உருவாக்குகிறது. அதாவது சீனா மற்றும் அமெரிக்காவை தொடர்ந்து இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது.

இப்படியாக, காமன் சார்ஜர் கொள்கை ஆனது மொத்த நாட்டிற்கும் ஒரு நல்ல நடவடிக்கையாக இருந்தாலும் கூட, ஆப்பிள் நிறுவனத்திற்கு இதுவொரு பெரிய தலைவலியாக இருக்க போகிறது. ஏனென்றால் ஆப்பிள் நிறுவனம் அதன் டிவைஸ்களில் லைட்னிங் கேபிளையே பயன்படுத்துகிறது.

இனிமேல் அப்படி செய்ய முடியாது; மற்ற ஸ்மார்ட்போன் நிறுவனங்களை போலவே ஆப்பிளும் கட்டாயம்அதன் ஐபோன்களில் டைப் சி ஆதரவை சேர்க்க வேண்டி இருக்கும்!

Best Mobiles in India

English summary
USB Type C charger is mandatory Indian govt to implement common charger policy for all smartphones

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X