ஹுவாய் மீது மீண்டும் சமுட்டி அடியாக வர்த்தக தடை விதிப்பு.! அமெரிக்காவின் அட்டகாசம்.!
ஹூவாய் நிறுவனத்தின் மீது மீண்டும் சமுட்டியால் அடிப்பதை போல அமெரிக்கா வர்த்த தடையை அறிவித்துள்ளது. தற்போது அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் நடக்கும் வர்த்த போரால் வணிகர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்ட
ஹூவாய் நிறுவனத்தின் மீது மீண்டும் சமுட்டியால் அடிப்பதை போல அமெரிக்கா வர்த்த தடையை அறிவித்துள்ளது.
தற்போது அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் நடக்கும் வர்த்த போரால் வணிகர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

யார் பெரியவர் என்று முனைப்பு காட்டும் வேலையில் சீனா மீதும் ஹூவாய் நிறுவனத்தின் மீதும் அடுத்தது நடவடிக்கையில் அமெரிக்கா அரசு ஈடுபட்டுள்ளது.

வர்த்தக போர்:
அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே வர்த்தக போர் நடந்து வருகின்றது. இதனால் சீனாவின் உற்பத்தி பொருட்களுக்கும், அமெரிக்காவின் உற்பத்தி பொருட்களுகம் இரு நாடுகளும் மாறிமாறி வரியை அதிகரிப்பு செய்து கொண்டன.
இதை தொடர்ந்து அமெரிக்கா சீனாவின் பொருட்களுக்கு 25 % வரிவதிப்பை அதிகரிப்பு செய்தது.

உளவு பார்ப்பதாக குற்றச்சாட்டு :
ஹூவாய் நிறுவனம் தங்கள் நாட்டு ராணுவ ரகசியங்களை செல்போன் கருவிகள், செல்போன்கள் மூலம் உளவு பார்ப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டி சீனா தொலை தொடர்பு நிறுவனங்கள் மீது அவசர நிலை பிரகடம் செய்தார் அதிபர் டிரம்ப்.
இதனால் சுமார் ஹூவாய் நிறுவனத்தை சார்ந்த 79 நிறுவனங்கள் மீது தடை விதிக்கப்பட்டுள்ளது.

அரசின் உத்தரவு வேண்டும்:
இந்த நிறுவனங்கள் வர்த்தகத்தில் ஈடுபட வேண்டும் என்ற அமெரிக்கா அரசின் சிறப்பு அனுமதியை பெற வேண்டும் என்று அமெரிக்கர்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
இதனால் அமெரிக்கா மற்றும் சீனா இருநாட்டிலும் வர்த்தகத்தில் பெரும் தேக்கநிலை நிலவுகின்றது. இதனால் மக்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கோர்ட்டில் வழக்கு தொடர்ந்த முடிவு:
சீன நிறுவனமான ஹூவாய்யின் தொழில்நுட்ப சாதனங்கள் மூலம் அமெரிக்காவை சீனா உளவு பார்ப்பதாக கூறி அந்நிறுவனத்தின் மீது அமெரிக்க அரசு வர்த்தக தடை விதித்துள்ளது. இதனை எதிர்த்து ஹூவாய் நிறுவனம் அமெரிக்க அரசு மீது வழக்கு தொடர்ந்தது.

ஹூவாய் நிறுவனம் ஒப்புதல்:
இந்நிலையில், உளவு பார்க்கமாட்டோம் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் அமெரிக்க அரசுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட தயார் என ஹூவாய் நிறுவனம் தெரிவித்துள்ளது.
எனினும் அமெரிக்க அரசு வருங்காலத்திலும் தங்களுடனான வர்த்தகத்தை தொடங்க தயாராக இல்லாத நிலையில், இந்த ஒப்பந்தத்திற்கு வாய்புள்ளதா என்பது தெரியவில்லை என்றும் ஹுவாய் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications