உயிரோடு புதைக்கப்பட்ட யூடியூபர்.. 52 மில்லியன் பேர் பார்த்த வீடியோ.. இறுதியில் என்ன ஆச்சு தெரியுமா?

|

நாம் உயிரோடு இருக்கும் போதே, நம்மை யாராச்சும் சவப்பெட்டிக்குள் போக சொன்னால் போவோமா? அதுவும் நீங்கள் சவப்பெட்டிக்குள் சென்றதும் நாங்கள் உங்களைப் புதைத்து வைக்க போகிறோம் என்று சொன்னால் அதை செய்வோமா? மாட்டோம் அல்லவா.. ஆனால், அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு பிரபல யூடியூப் பயனர், தனது யூடியூப் சேனலில் உள்ள ரசிகர்கள் ஆசைப்பட்டனர் என்பதற்காகத் தன்னை தானே சவப்பெட்டிக்குள் அடைத்து, உயிருடன் புதைக்கப்பட்டுள்ளார். இதை அவரின் ரசிகர்கள் நேரலையாகப் பார்த்துள்ளனர்.

என்னப்பா விபரீதம் இது ?

என்னப்பா விபரீதம் இது ?

இது என்னப்பா விபரீதம் என்று நீங்கள் நினைக்கலாம், ஆனால் உண்மையில் இதைச் செய்து காட்டி, சுமார் 50 மணி நேரத்திற்கும் மேலாக இந்த நபர் சவப்பெட்டிக்குள் உயிருடன் இருந்திருக்கிறார். இறுதியாக இவர் சொன்ன வார்த்தைகள் இப்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அமெரிக்காவைச் சேர்ந்த யூடியூபர் மிஸ்டர் பீஸ்ட் அக்கா ஜிம்மி டொனால்ட்சன் என்பவர் தான் இந்த விபரீத செயலை செய்திருக்கிறார். யூடியூப் சேனலின் பெயரை வைரல் ஆக்கவும், தன்னை அனைவரும் கவனிக்க வேண்டும் என்று இவர் இப்படி ஒரு முயற்சியை எடுத்துள்ளார்.

படங்களில் பார்க்கும் ஸ்டண்ட் இல்லை

படங்களில் பார்க்கும் ஸ்டண்ட் இல்லை

பார்வையாளர்களை எப்போதும் ஈடுபாட்டுடன் வைத்துக்கொள்வது என்பது சமூக ஊடகங்களில் ஒரு முக்கிய பணியாக மாறிவிட்டது. இது ஒவ்வொரு நாளும் யூடியூபர்கள் செய்தாக வேண்டிய போக்காக மாறிவிட்டது. எல்லோரும் வெவ்வேறு வழியில் தங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் நேரத்தில், இந்த பையன் ஒட்டுமொத்த அட்டவணையையும் திருப்பியுள்ளான். நிச்சயமாக இது படங்களில் பார்க்கும் ஒரு ஸ்டண்ட் இல்லை, உண்மையில் விபரீதத்துடன் விளையாடிய நபரின் உண்மை பதிவு.

அடேங்கப்பா...இனி ATM கார்டு இல்லாமல் நொடியில் பணம் எடுக்கலாம்.. வந்தது புதிய வசதி.!அடேங்கப்பா...இனி ATM கார்டு இல்லாமல் நொடியில் பணம் எடுக்கலாம்.. வந்தது புதிய வசதி.!

50 மணிநேர வீடியோ

50 மணிநேர வீடியோ

இது விபரீத முயற்சியை அவர் 12 நிமிட நீள வீடியோவில் பதிவு செய்துள்ளார். இது அவரது சவப்பெட்டியின் உள்ளே வைக்கப்பட்டுள்ள கேமராவால் பதிவு செய்யப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட அவர் சுமார் 50 மணிநேரங்களுக்கும் மேலாகச் சவப்பெட்டிக்குள் உயிருடன் இருந்திருக்கிறார். இதை 12 நிமிட வீடியோவாக அவர் யூடியூப்பில் பதிவிட்டுள்ளார். 50 மணிநேரத்தில் அவர் எதிர்கொண்ட நம்ப முடியாத சிக்கல்களை இந்த வீடியோ காட்டுகிறது. இது சமூக ஊடகங்களில் புதிய விவாதங்களைத் தூண்டியுள்ளது.

சவப்பெட்டிக்குள் அவர் மட்டும் தான் புதைக்கப்படவில்லை

சவப்பெட்டிக்குள் அவர் மட்டும் தான் புதைக்கப்பட்டிருக்கிறார் என்று நினைத்துக்கொண்டிருந்த போது, அவருக்கே தெரியாமல் அவருடன் மற்றொரு உயிர் புதைக்கப்பட்டிருப்பது தெரியவந்து அவர் அதிர்ந்துபோனார். ஆம், அவருடன் சவப்பெட்டிக்குள் உயிருடன் ஒரு ஈ மாட்டிக்கொண்டது. அதை அவர் அடுத்த 50 மணி நேரத்திற்கு தனது செல்லப்பிராணியாக வைத்து கேளிக்கை செய்துள்ளார். அவர் சவப்பெட்டியில் இருந்தபோது தனது சிறுநீரைப் பாட்டிலில் கழித்துச் சேகரித்து வைத்துள்ளார்.

செவ்வாய் கிரகத்தில் இப்படியொரு பிரச்னையா? இன்சைட் ரோவர் அனுப்பிய முக்கியத் தகவல்.!செவ்வாய் கிரகத்தில் இப்படியொரு பிரச்னையா? இன்சைட் ரோவர் அனுப்பிய முக்கியத் தகவல்.!

இறுதியில் சொன்னது இது தான்

இறுதியில் சொன்னது இது தான்

50 மணி நேரம் சவப்பெட்டிக்குள் இருந்துகொண்டே அவர் செய்யும் சில காரியங்கள் ​அவரது விடாமுயற்சியைப் பாராட்டச் செய்துள்ளது.இந்த விபரீத முயற்சியை அவர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் எடுத்துக்கொண்டதாகத் தெரிவித்துள்ளார். ஒரு மருத்துவக் குழு மூடப்பட்ட சவப்பெட்டிக்கு வெளியில் இருந்தது என்றும் அவர் கூறியுள்ளார். சவப்பெட்டியில் இருந்து வெளியே வந்த அவர் "இது பெரிய முட்டாள்தனம், எனக்கு ஒரு தலைவலிக்கிறது, பட்டினி கிடந்தது தவறு, என் முதுகு வலிக்கிறது, நான் மோசமாக உணர ஆரம்பிக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

Best Mobiles in India

English summary
US Youtuber buried alive in a coffin went viral on the internet : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X