நீவேணுணா சண்டைக்கு வாடா.! சண்டைக்கு வாடா.! சீனாவை சீண்டும் அமெரிக்கா.!
அமெரிக்காவோ தனது போர் கப்பலை ஹாங்காங் நிறுத்தி சீனாவை பதிலுக்கு நீ வேணுணா சண்டைக்கு வாடா, சண்டைக்கு வாடா என்ன பார்க்கிற என்று வடிவேல் பணியில் சண்டைக்கு இழுத்துள்ளது.
அமெரிக்காவும் சீனாவுக்கும் மறைமுகமாக பல்வேறு போட்டிகளும், சச்சரவுகளும் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. இரு நாடுகளும் அணு ஆயுதம், வர்த்தகம் உள்ளிட்டவைகளில் பலம் வாய்ந்த நாடாகவே கருத்தப்படுகின்றது.

சீனாவுக்கும் அமெரிக்காவும் சண்டை இட்டுக் கொள்ளும் நிலை தொடர்வதால், பதற்றம் ஏற்பட்டுள்ளது. மேலும் அமெரிக்காவோ தனது போர் கப்பலை ஹாங்காங் நிறுத்தி சீனாவை பதிலுக்கு நீ வேணுணா சண்டைக்கு வாடா, சண்டைக்கு வாடா என்ன பார்க்கிற என்று வடிவேல் பணியில் சண்டைக்கு இழுத்துள்ளது.

அமெரிக்கா:
ராணுவத்திற்காக அதிக பட்ஜெட்களை ஒதுக்கி பட்டியலில் முதல் நாடுகள் இடத்தில் அமெரிக்கா இருக்கின்றது. ராணுவ பட்ஜெட் 37.77 லட்சம் கோடி ரூபாய் ஆகும். பல்வேறு அணு ஆயுதங்கள் மற்றும் நவீன தொழில் நுட்பகங்களையும் தன் வசம் வைத்துள்ளது அமெரிக்கா முப்படைகளிலும் சிறந்து விளக்கின்றது.

சீனா:
ராணுவத்திற்கு அதிக பட்ஜெட்கள் ஒதுக்கும் நாடுகள் பட்டியலில் சீனா இரண்டாம் இடம் பிடித்துள்ளது. அந்த நாட்டின் ராணுவ பட்ஜெட் 9.48 லட்சம் கோடி ரூபாய். இந்த நாடும் தனது சொந்த தயாரிப்பில் அணு ஆயுதங்கள், போர் கப்பல்கள், முப்படைகள் என இதுவும் சிறந்து விளங்கின்றது.

அமெரிக்காவின் வர்த்தகம்:
ராணுவ பலம் இருப்பதாலும் செல்வந்த நாடாக இருப்பதாலும் அமெரிக்கா பல்வேறு நாடுகளையும் தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. பல்வேறு நாடுகளுடன் தொடர்ந்து கச்சா எண்ணெய், அணு ஆயுதம், தொழில் நுட்பம் உள்ளிட்ட பல்வேறு வர்த்தகங்களிலும் ஈடுபட்டு வருகின்றது.

சீனா வர்த்தகம்:
சீனாவும் ராணுவ பலம் இருப்பதால், பல்வேறு நாடுகளையும் தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. மேலும் கச்சா எண்ணெய், அணு ஆயுதம், தொழில் நுட்பம் உள்ளிட்டவைகளை பல்வேறு நாடுகளும் விற்பனை செய்து வருகின்றது.

அமெரிக்காவை வீழ்த்த பிளான்:
உலக நாடுகளையும் தனது கட்டுப்பாட்டிற்கு கொண்டு வர வர்த்த ரீதியாகவும், தொழில் நுட்ப ரீதியாகவும் சீனா வளர்ந்துள்ளது. மேலும், சர்வதேச நாடுகளையும் பாலம் கட்டி அதன் மூலம் வர்த்தகம் துவங்கும் திட்டத்தை சீனா முன் வைத்துள்ளது.

அமெரிக்கா எதிர்க்கும் நாட்டு சீனா ஆதரவு:
அமெரிக்கா எந்த நாட்டுக்கு தனது ஆதரவை அளிக்கின்றோ அந்த நாட்டிற்கு எதிரியாக இருக்கின்ற நாட்டிற்கு சீனா தனது முழு ஒழுத்துழைப்பையும் கொண்டு வருகின்றது. அந்த நாட்டுடன் தனது வர்த்த ரீதியாக உறவை சீனா எடுத்துக் கொள்ளும்.

டாம் அண்டு ஜெர்லி:
டாம் அண்டு ஜெர்லி போல பல்வேறு முறை சீனாவும் அமெரிக்காவும் வர்த்தகத்தில் மோதிக் கொள்கின்றன. இது இப்போது மட்டும் நடக்கும் நிகழ்வு கிடையாது.

போர் பதற்றம்:
சீனாவுடனான கருத்து வேறுபாட்டைத் தொடர்ந்து அமெரிக்க விமானந்தாக்கி போர்க்கப்பல் ஹாங்காங் வந்துள்ளது பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.

மோதலுக்கு காரணம்:
கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக தென் சீனக் கடலில் அமெரிக்க கப்பல் ஒன்றை, சீனாவின் கப்பல் மோதுவது போல் சென்று அச்சுறுத்தியது. இதனைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே மோதல் போக்கு அதிகரித்துள்ளது.

போர் கப்பலை நிறுத்திய அமெரிக்கா:
இரு நாடுகளும் ஏற்றுமதி இறக்குமதி பொருட்களுக்கு வரிவிதிப்பை அதிகப்படுத்தி உள்ளன. இந்நிலையில் அமெரிக்க விமானம் தாங்கிக் கப்பலான ரொனால்ட் ரீகன் என்ற போர்க்கப்பல் ஹாங்காங் அருகே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

வடிவேலு பாணியில் அமெரிக்கா:
பசும் பொன் படத்தில் நடிகர்வேலு நீவேணுணா சண்டைக்கு வாடா, என்ன பாக்குற வந்து பாருடா என்ற பாணியில் தற்போது சீனாவை அமெரிக்கா பதிலுக்கு போர் கப்பலை நிறுத்தி சீண்ட துவங்கியுள்ளது.


Click it and Unblock the Notifications