Home
News

இவனை எங்கேயாச்சும் பார்த்தீங்கனா.. உங்களுக்கு ரூ. 85 கோடி பரிசு.. யார் இந்த கண்ணாடி போட்ட பையன்?

பார்ப்பதற்கே அப்பாவி போல காட்சியளிக்கும் இவர் தான் குவான் தியான்ஃபெங்கு (Guan Tianfeng). கண்ணாடி போட்டு, வழிச்சு சீவி மிகவும் நல்ல பிள்ளை போன்ற தோற்றத்தில் இருக்கும் இவர் ஒரு அதிபயங்கரமான ஹேக்கர்ராம். இவரை தான் அமெரிக்கா இப்போது உலகம் முழுக்க வலைவீசி தேடி வருகிறது. இவரை பற்றிய ஒரு தகவல் கொடுத்தால் போதும், அந்த நபருக்கு 1 கோடி அமெரிக்கன் டாலர் பரிசும், பாதுகாப்பும் வழங்கப்படும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. யார் இந்த குவான் தியான்ஃபெங்? அப்படி என்ன செய்தார்? இதோ விபரம்.

இந்த புகைப்படத்தில் தெரியும் நபர் ஒரு சீன ஹேக்கராவார் (China hacker). ஆம், இவர் ஒரு சீனாக்காரர் தான். இவரின் பெயர் குவான் தியான்ஃபெங் (Guan Tianfeng). செங்டுவை தளமாகக் கொண்ட சிச்சுவான் சைலன்ஸ் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி (Sichuan Silence Information Technology Co. LTD) என்ற நிறுவனத்தில் இவர் பணிபுரிந்து வந்திருக்கிறார். இவருடன் இன்னும் பல ஊழியர்கள் இந்த நிறுவனத்தில் பணிபுரிந்து வந்திருக்கின்றனர்.

இவனை எங்கேயாச்சும் பார்த்தீங்கனா.. உங்களுக்கு ரூ. 85 கோடி பரிசு..

இவனை எங்கேயாச்சும் பார்த்தீங்கனா.. உங்களுக்கு ரூ. 85 கோடி பரிசு:

கடந்த 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அமெரிக்காவே அச்சமடையும் அளவிலான ஒரு மிகப்பெரிய சைபர் தாக்குதலை (massive Cyber attack) குவான் தியான்ஃபெங் நடத்தியுள்ளார். இந்த சைபர் தாக்குதலில் வான் தியான்ஃபெங் குடன், சிச்சுவான் சைலன்ஸ் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி கோ லிமிடெட் மற்றும் அதன் கீழ் இயங்கி வந்த அணைத்து ஊழியர்களுக்கும் ஒரு பங்கிருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

கடந்த 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நடத்தப்பட்ட சைபர் தாக்குதலின் போது, உலகளவில் பல ஆயிரம் நிறுவனங்களால் பயன்படுத்தப்பட்டு வந்த 81,000-திற்கும் மேற்பட்ட பாதுகாப்பு ஃபயர்வால்களை (Security firewall) தகர்த்தி, அந்த நிறுவனங்களின் தகவலை திருடி (data theft), வரலாற்றில் மிகப்பெரிய சைபர் திருட்டை (histories biggest cyber attack) நபராக இந்த கண்ணாடி போட்ட பையன் குவான் தியான்ஃபெங் பார்க்கப்படுகிறார்.

யார் இந்த கண்ணாடி போட்ட பையன்? அமெரிக்காகவே தேடும் அளவிற்கு அப்படி என்ன செய்தான்?

இந்த மோசமான சைபர் தாக்குதலை நடத்த குவான் தியான்ஃபெங் மற்றும் அவர் வேலை பார்த்துவந்த நிறுவனம் ஒரு தனிப்பட்ட ஃபையர்வால் தாக்குதல் சாப்ட்வேரை (Firewall attack software) உருவாக்கி பயன்படுத்தியுள்ளதாக, அமெரிக்கா கருவூலத்துறை (United States Treasury Department) தகவல் தெரிவித்துள்ளது. இந்த சைபர் தாக்குதல் மூலம் ஏராளமான பொதுமக்களின் மக்களின் உயிர் ஆபத்தில் இருப்பதாகவும் அமெரிக்கா அரசு தெரிவித்துள்ளது.

இந்த சைபர் தாக்குதல் மூலம் 81,000 ஃபையர்வால்களை தகர்த்தியது மட்டுமல்லாமல், அதன் பின்னணியில் இயங்கி வந்த பல ஆயிரம் கணினிகளையும் (computers) அதனுடன் தொடர்புடைய நபர்களின் தனி விபரங்களையும் (personal data) சீன ஹேக்கர்கள் திருடியுள்ளனர். சில கணினிகளை இவர்கள் முடக்கம் செய்ததோடு, கணினியையும் அதனுள் இருக்கும் தகவல்களை மீண்டும் ஒப்படைக்க பெரும் தொகை கேட்டு பேரம் பேசியதும் தற்போது அம்பலமாகியுள்ளது.

ரூ.85 கோடி பரிசு மட்டுமில்லை பாதுகாப்பும் வழங்கப்படுமா?

இவர்கள் சைபர் தாக்குதல் நடத்திய நிறுவனங்களில் பல எரிசக்தி நிறுவனங்களும் அடங்கியுள்ளது என்பதனால், அமெரிக்கா அரசு இந்த தாக்குதலை மோசமான மற்றும் ஆபத்தான தாக்குதல் என்று சுட்டிக்காட்டியுள்ளது. இந்த சைபர் தாக்குதலுடன் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான கண்ணாடி போட்ட பையன் குவான் தியான்ஃபெங் அல்லது அவர் தொடர்புடைய நிறுவனம் அல்லது அந்த கும்பலுடன் தொடர்புடைய யார் பற்றிய தகவல் வழங்கினாலும், 1 கோடி அமெரிக்கன் டாலர் பரிசாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 கோடி டாலர் (1 crore USD dollar) என்றால் இந்திய மதிப்பில் சுமார் ரூ.85 கோடிக்கும் அதிகமாகும். உலகத்தில் இவர்கள் எங்கிருந்தாலும், அவர்களை பற்றிய தகவலை வழங்கும் நபர்களுக்கு நிச்சயமாக 1 கோடி அமெரிக்கன் டாலர் பரிசாக வழங்கப்படுவதோடு, தகவல் கொடுத்த நபர் பாதுகாப்பான இடத்திற்கு அமரிக்க அரசால் இடம் மாற்றம் செய்யப்பட்டு பாதுகாப்பான சூழலில் வைக்கப்படுவார்கள் என்று அமெரிக்க அரசு உறுதிபட தெரிவித்துள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
US wanted This China Hacker Guan Tianfeng Information Reward Is 1 Crore USD Dollar 85 Crore Rupee
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X