இந்திய மாணவி: ஸ்மார்ட்போன் மூலம் ஏடிஎம்-ல் பணம் எடுக்கும் செயலி உருவாக்கினார்.!
டிஜிட்டல் பணத்தை நிஜ பணமாக மாற்ற இந்த செயலி கண்டிப்பாக உதவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, அதன்பின்பு வங்கி சார்ந்த பல்வேறு பயன்களும் இவற்றுள் இடம்பெற்றுள்ளத எனத் தெரிவிக்கப்பட்டள்ளது.
ஸ்மார்ட்போன் மூலம் ஏடிஎம்-ல் பணம் எடுக்கும் அசத்தலான புதிய செயலியை உருவாக்கியுள்ளார் அமெரிக்காவில் வசிக்கும் இந்திய மாணவி. மேலும் அந்த மாணவிக்கு பல்வேறு பாரட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. அமெரிக்காவின் கார்னெல் பல்கலைக்கழகத்தை சேர்ந்த இந்திய மாணவி ஸ்பிரிகா பண்டாரி மற்றும் சில மாணவர்களும் சேர்ந்து ஸ்மார்ட்போன் மூலம் ஏடிஎம்-ல் பணம் எடுக்கும் செயலி உருவாக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மாணவி ஸ்பிரிகா பண்டாரி தெரிவித்தது என்னவென்றால் பல்வேறு ஏழை எளிய மக்கள் தங்களது வருவாயினை மிக எளிமையாகவும், நம்பகத்தன்மையுடனும் பணத்தை டிஜிட்டலாகவும், பின்பு இதேபோன்று டிஜிட்டலில் இருந்து பணமாகவோ மாற்ற இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.
ஸ்மார்ட்போன் மூலம் ஏடிஎம்-ல் பணம் எடுக்கும் செயலிக்கு 'பாக்கெட் சேஞ்ச்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. மேலும் இந்த செயலி பல்வேறு மக்களுக்கு உதவும் எனத் தகவல் தெரிவித்தார்.

மிலண்டா கேட்ஸ் மற்றும் பில் அறக்கட்டளை சார்பில் உருவாக்கப்பட்டள்ள இந்த புதிய செயலி பண பரிமாற்றத்தை டிஜிட்டல் முறையில் மேற்கொள்கிறது, மேலும் வளர்ந்து வரும் நாடுகளில் தினசரி குறைந்த பட்ச வருவாய் ஈட்டும் மக்களுக்கு கண்டிப்பாக இந்த செயலி உதவும் எனத் தெரிவிக்கப்பட்டள்ளது.

'பாக்கெட் சேஞ்ச்' செயலி ஆறுமாத காலத்தில் உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த செயலியில் பணத்தின் புகைப்படங்களுக்கு கூகுள் விஷன் பயன்படுத்தப்பட்டதாக மாணவி பண்டாரி தகவல் தெரிவித்துள்ளார்.
டிஜிட்டல் பணத்தை நிஜ பணமாக மாற்ற இந்த செயலி கண்டிப்பாக உதவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, அதன்பின்பு வங்கி சார்ந்த பல்வேறு பயன்களும் இவற்றுள் இடம்பெற்றுள்ளத எனத் தெரிவிக்கப்பட்டள்ளது.

'பாக்கெட் சேஞ்ச்' செயலி பொறுத்தவரை சிறந்த பாதுகாப்பு அம்சம் மற்றும் சட்ட சிக்கல்கள் உள்ளடக்கியது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த செயலி அனைத்து இடங்களிலும் பயன்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
