கடும் எரிச்சலில் அமெரிக்கா, சீனாவிற்கு ஆபத்து..!

|

சூப்பர் பவர் நாடுகளான அமெரிக்கா மற்றும் சீனாவிற்கு இடையே பதட்டமான சூழ்நிலை ஒன்று உருவாகி கொண்டிருக்கிறது. முதல் முறையாக, சீன பிரதமர் சீ சின்பிங் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்ற அதே வாரத்தில் அமெரிக்காவின் பாதுகாப்பு துறை ஆலோசகர் தங்களை ஹாக் செய்வதை நிறுத்திக் கொள்ளுமாறு சீனாவை எச்சரித்துள்ளார்.

<strong>கடும் எரிச்சலில் அமெரிக்கா, சீனாவிற்கு ஆபத்து..! </strong>கடும் எரிச்சலில் அமெரிக்கா, சீனாவிற்கு ஆபத்து..!

சீன அரசாங்கம் அமெரிக்காவின் கம்பெனி விடயங்களையும், ரகசியங்களையும் ஹாக் செய்து கொண்டு இருப்பதாக குற்றாச்சாட்டு எழுந்துள்ளது, அதை தொடர்ந்து இரு நாட்டு உறவிலும் பதட்டமான சூழ்நிலை உருவாகி உள்ளது.

குற்றச்சாட்டு :

குற்றச்சாட்டு :

சீன அரசாங்கம் அமெரிக்கா மீது 'சைபர்எஸ்பியானேஜ்' (cyberespionage) நடத்திக் கொண்டிருக்கிறது என்று குற்றச்சாட்டு ஒன்று எழுந்துள்ளது.

கைப்பற்றுதல் :

கைப்பற்றுதல் :

அதாவது சைபர்எஸ்பியானேஜ் என்றால் கம்யூட்டர் நெட்‌வார்க்களை பயன்படுத்தி பிறநாட்டு ரகசியங்களையும், பாதுகாக்கப்பட்ட தகவல்களையும் சட்டத்திற்குப் புறம்பான முறையில் கைப்பற்றிக் கொள்ளுதல் ஆகும்..!

எச்சரிக்கை :

எச்சரிக்கை :

இதை கண்டிப்பாக மற்றும் உடனடியாக நிறுத்திக் கொள்ளுமாறு சீனாவை எச்சரித்து உள்ளார் அமெரிக்காவின் பாதுகாப்பு துறை ஆலோசகரான சூஸன் ரைஸ்.

எரிச்சல் :

எரிச்சல் :

மேலும் இது சாதாரணமான விடயம் இல்லை மிகவும் எரிச்சலான ஒன்று என்றும் அவர் குறிப்பிட்டு உள்ளார்.

பாதிப்பு :

பாதிப்பு :

இது போன்ற சைபர்எஸ்பியானேஜ், அமெரிக்க நாட்டின் பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பில் பாதிப்பு ஏற்படுத்தும், இதனால் அமெரிக்க - சீன உறவில் விரிசல் விழும் அபாயம் கூட உண்டு என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

சர்ச்சை :

சர்ச்சை :

சீன பிரதமர் அமெரிக்க பயணத்தில் ஈடுபடும் அதே வாரத்தில், அமெரிக்க பாதுகாப்பு துறை ஆலோசகர் இப்படி கருத்துகள் கூறியுள்ளது சர்ச்சையை கிளப்பி உள்ளது.

பொருளாதாரம் :

பொருளாதாரம் :

'சைபர்எஸ்பியானேஜ்' திருட்டு ஆனது தனிப்பட்ட நபர் மற்றும் பெரு நிறுவங்களின் பொருளாதாரம் சார்ந்த விடயங்களை குறி வைத்து செயல் படுகிறது என்றும் அமெரிக்கா, சீனா மீது குற்றம் சுமற்றி உள்ளது...!

மறுப்பு :

மறுப்பு :

சீன பிரதமர் சீ சின்பிங், வால் ஸ்ட்ரீட் ஜர்னல் (Wall street Journal) பத்திரிக்கைக்கு அளித்த பேட்டி ஒன்றில் இந்த 'சைபர்எஸ்பியானேஜ்' குற்றச்சாட்டை முழுமையாக மறுத்துள்ளார்.

இல்லை :

இல்லை :

மேலும் சீனா இது போன்ற சைபர் குற்றங்களை செய்வது இல்லை மற்றும் சீன கம்பெனிகள் 'ஹாக்' குற்றங்களை செய்ய அனுமதிப்பதும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சைபர் தாக்குதல்கள் :

சைபர் தாக்குதல்கள் :

மேலும் பிற நாடுகளுக்கு எதிரான பொருளாதார ரகசியங்கள் திருட்டு மற்றும் சைபர் தாக்குதல்கள் மிகவும் கண்டிக்க த் தக்க குற்றங்கள் என்றும் அவர் கருத்து தெரிவுத்துள்ளார்.

கூட்டுறவு :

கூட்டுறவு :

சைபர் பாதுகாப்பு விடயத்தில் அமெரிக்கா மற்றும் சீனா பலமான கூட்டுறவில் தான் இருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனிப்படைகள் :

தனிப்படைகள் :

ஆனால் உண்மையில் சீன ராணுவத்தில் அமெரிக்காவை ஹாக் செய்வதற்கு என்றே தனிப்படைகள் இருக்கின்றது கூறி உள்ளார் பாதுகாப்பு அமைப்பான ஃபைர் ஐ-இன் (FireEye) தலைவர் கெவின் மாண்டியா..!

உறுதி :

உறுதி :

மேலும் அவர் "அது சீனா தான், அது சீனா தான் என்பது எங்களுக்கு தெரியும் என்று உறுதியாக கூறுகிறார்.

ஆதாரங்கள் :

ஆதாரங்கள் :

ஏனெனில் ஃபைர்ஐ (FireEye) நிறுவனம் ஹாக் செய்ய உதவிய நெட் விலாசங்கள், நெட் டொமைன்கள், சைபர் தாக்குதல் தொழில்நுட்ப முறைகள் ஆகியவைகளின் ஆதாரங்களை சேகரித்து வைத்துள்ளதாம்.

குறி :

குறி :

அது மட்டுமின்றி சைபர் தாக்குதல்கள் பொதுவாக நடத்தப்படுவது இல்லையாம், தெளிவாக குறி வைக்கப்பட்டு நடத்தப்படுகிறது என்றும் கெவின் மாண்டியா விளக்கம் அளித்துள்ளார்.

சந்திப்பு :

சந்திப்பு :

அடுத்த வாரம் நடக்கவுள்ள ஒபாமா மற்றும் சீ சின்பிங் சந்திப்பில் சைபர் குற்றங்கள் சார்ந்த விடயங்கள் பேசப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

கருத்து :

கருத்து :

மேலும் இது போன்ற 'சைபர்எஸ்பியானேஜ்' குற்றங்கள் ஒபாமா மற்றும் சீ சின்பிங் சந்திப்பை கூறி வைத்தே நடத்தப்படுகிறது என்றும் சிலர் கருத்துக்கள் கூறி உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

Best Mobiles in India

English summary
Checkout here about US tells China cyberespionage is more than an irritant. Read more about this in Tamil Gizbot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X