ரேடாரில் சிக்காத ஒலியை விட 17 மடங்கு அதிவேக ஹைப்பர்சோனிக் ஏவுகணை தயார் - டிரம்ப் பெருமிதம்!

|

அமெரிக்காவின் ராணுவம் உலகின் தலைசிறந்த ஏவுகணைகளைத் தனது பட்டியலில் சேர்த்து வருகிறது. அந்த வரிசையில் சமீபத்தில் ஒலியின் வேகத்தை விட 17 மடங்கு அதிக வேகத்துடன் செயல்படும் ஏவுகணையை உருவாக்கி வருகிறது என்று அறிவித்திருந்தது. தற்பொழுது அந்த ஏவுகணையை வெற்றிகரமாகத் தயார் செய்துவிட்டது என்று பெருமிதம் கொண்டுள்ளது.

ஒலியைக் காட்டிலும் வேகம்

உலகில் அதிக வேகத்துடன் பயணிக்கும் ஒரு பொருளாக ஒலி மட்டுமே இருந்து வந்தது. இனி அப்படிக் கூறமுடியாது, ஒலியைக் காட்டிலும் மணிக்கு சுமார் 1,225 கி.மீ வேகத்தில் பயணிக்கும் ஏவுகணையை அமெரிக்கா உருவாகியுள்ளது. இந்த ஏவுகணையின் வேகம் ஒலியை விட சுமார் 17 மடங்கு அதிக வேகத்துடன் பயணிக்கக்கூடியது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

17 மடங்கு அதிக வேகம்

இந்த ஏவுகணையை அமெரிக்கா உருவாக்கத் துவங்கிய பொழுது ஹைபர்சானிக் ஏவுகணை தயாரிப்பில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளதாக அதன் அதிபர் டிரம்ப் தெரிவித்திருந்தார். தற்போது இந்த ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளுக்கு 'சூப்பர் டூப்பர்' ஏவுகணை என்று பெயரிடப்பட்டுள்ளது. ஒலியை விட 17 மடங்கு அதிக வேகத்துடன் செயல்படும் ஹைப்பர்சோனிக் சூப்பர் டூப்பர் ஏவுகணை ரெடி எனக்கூறி டிரம்ப் பெருமிதம் அடைந்துள்ளார்.

Airtel பயனரா நீங்க, அப்போ உஷார்! 12 லட்சம் வாடிக்கையாளர்கள் சத்தமில்லாமல் அப்ஸ்காண்ட்!Airtel பயனரா நீங்க, அப்போ உஷார்! 12 லட்சம் வாடிக்கையாளர்கள் சத்தமில்லாமல் அப்ஸ்காண்ட்!

பசிபிக் பெருங்கடல்

பசிபிக் பெருங்கடல் பகுதியில் இந்த அதிநவீன ஹைபர்சானிக் ஏவுகணையின் சோதனை வெற்றிகரமாக முடிந்தது என்று அமெரிக்கா ராணுவம் தெரிவித்துள்ளது. அதேபோல், இந்த ஆண்டின் இறுதிக்குள் மற்றொரு ஹைப்பர்சோனிக் க்ரூஸ் ஏவுகணையையும் சோதனை செய்யவுள்ளது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.இது போன்ற சக்திவாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை வடகொரியா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் ஏற்கனவே இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

40 ஹைப்பர்சோனிக் ஏவுகணை

இந்த அதிவேக ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளுக்கு நிகரான ஏவுகணை என்று எந்த ஏவுகணையும் இன்னும் உருவாக்கப்படவில்லை என்று டிரம்ப் பெருமிதமாகக் கூறியுள்ளார். இந்த புதிய ஏவுகணையில் தொடர்ந்து சில மேம்பாடுகளை அமெரிக்கா செய்யவுள்ளது என்றும் கூறியுள்ளது. அடுத்து வரவிருக்கும் 2025 ஆம் ஆண்டிற்குள் சுமார் 40 ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளின் சோதனைகளைப் பசிபிக் பெருங்கடல் பகுதியில் மேற்கொள்ளவுள்ளது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

Best Mobiles in India

Read more about:
English summary
US Successfully Tests Hypersonic Missile In Pacific Ocean : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X