பாக். மற்றும் சீனாவை 'உசுப்பேற்றும்' அமெரிக்க தின்க் டேன்க்..!

|

நட்பு ரீதியாக கைகுலுக்கி கொண்டாலும் பிற உலக நாடுகள் அனைத்துமே ஒன்றை ஒன்று மிஞ்சவே நினைக்கிறது, முக்கியமாக 'அண்டை நாடுகள்'..!

அதுவும் இந்தியா போன்ற ஒரு நாட்டின் அண்டை நாடுகளான பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகளைப்பற்றி சொல்லவே வேண்டாம்.

சீனா மற்றும் பாகிஸ்தான் :

சீனா மற்றும் பாகிஸ்தான் :

அப்படியாக, சீனா மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளிடம் இருந்து இந்தியா சந்திக்கும் அச்சுறுத்தலும், கோபமூட்டும் செயலும் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே தான் போகிறது என்பது தான் நிதர்சனம்.

ஆயுத அணுகல் :

ஆயுத அணுகல் :

அதனை மனதில் கொண்டு இந்தியாவிற்கு அதிநவீன ஆயுத அணுகல் சார்ந்த விடயத்தில் அமெரிக்கா சற்று அதிகப் படியான இடம் அளிப்பது தான் நியாயம் என்று கருத்து தெரிவித்துள்ளார் அமெரிக்க தின்க் டேன்கை சேர்ந்த வல்லுநர் ஒருவர்.

ஆராய்ச்சி :

ஆராய்ச்சி :

மதியுரையகம் (Think Tank) என்பது எனப்படுவது குறிப்பிட்ட விடயங்கள் நோக்கி ஆராய்ச்சி செய்யும் நிறுவனம் அல்லது நிறுவனப்படுத்தப்படாத குழு ஆகும்.

பாதிப்பு :

பாதிப்பு :

மேலும் சீனா, இந்தியா போன்ற நாடுகளுக்கு இடையே நடக்கும் மோதல் ஆனது அமெரிக்க நலனுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

சந்தேகங்கள் :

சந்தேகங்கள் :

சீனா மற்றும் இந்தியா இடையே பெரிய அளவிலான மோதல்கள் சாத்தியமில்லை என்றாலும் கூட, தொடர்ந்து சந்தேகங்கள் மற்றும் எல்லை தகராறு போன்றவைகள் மோசமான விளைவுகளை ஏற்படுத்த முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

வீழ்ச்சி :

வீழ்ச்சி :

எல்லை மோதல் நிகழ்ந்தால் டஜன் கணக்கான உயிர் இழப்பு ஏற்படும், உலக சந்தையில் திடீர் வீழ்ச்சி ஏற்படும், பொருளாதார வளர்ச்சி பாதிக்கும், சீனா-இந்தியா கூட்டுறவு பாதிக்கும் என்றும் அவர் கருத்து கூறியுள்ளார்.

எல்லை பிரச்சனை :

எல்லை பிரச்சனை :

முக்கியமாக இந்திய பாகிஸ்தான் எல்லை பிரச்சனையானது பிராந்தியத்தில் ஒரு சாத்தியமான ஸ்பில்ஓவர் (Spillover) போன்ற பொருளாதார விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

தீவிரவாதம் :

தீவிரவாதம் :

லஷ்கர்-ஏ-தொய்பா போன்ற தீவிரவாத இயக்கங்களை பாகிஸ்தான் கட்டுப்படுத்த தவறுவதால் அந்த வேலையை இந்தியா செய்கிறது.

இந்திய பாதுகாப்பு துறை :

இந்திய பாதுகாப்பு துறை :

இது போன்ற ஒடுக்குதல் காரியங்களுக்கு இந்திய பாதுகாப்பு துறைக்கு அதிகப்படியான அதிநவீன ஆயுதங்கள் தேவைப்படுகின்றன.

ஆயுத முறைகள் :

ஆயுத முறைகள் :

அதனால் அமெரிக்க கொள்கை வகுப்பாளர்கள் எதிர் விளைவை தூண்டும் சீனா மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளுக்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில் உயர் தொழில்நுட்ப ஆயுத முறைகள் சார்ந்த அணுகலில் இந்தியாவிற்கு சற்று அதிக இடம் அளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Best Mobiles in India

English summary
US should expand India's access to high-tech weapons. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X