அமெரிக்காவை அலறவிடும் மனிதர்....

|

அமெரிக்காவின் கோர முகத்தை வெளிசத்துக்கு கொண்டு வருபவர்களை ஒட, ஒட துரத்துவது தான் அமெரிக்காவின் ஸ்டைல்.

தற்போது அமெரிக்காவையே அலைய வைத்திருக்கும் நபர் ஸ்னோடன்.

அமெரிக்கா தனி மனித விஷயங்களை கூட சோஷியல் மீடியா மூலம் கண்காணிக்கிறது என கூறி பெரும் பரபரப்பைக் கிளப்பியவர் விஸில் ப்ளோயர் எனப்படும் ஸ்னோடன்.

Click Here For New Smartphones, Tablets Gallery

அமெரிக்காவை அலறவிடும் மனிதர்....

இவர் ஒரு ஒப்பந்தக்கார அமெரிக்க உளவுத் துறை பணியாளர். இந்நிலையில் இவரை என் எஸ் ஏ குற்றவாளி என அறிவித்து அமெரிக்கா அவர் பாஸ்போர்ட்டை முடக்கியது.

மேலும் இவரின் பாஸ்போர்ட்டை கேன்சல் செய்து இவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்துள்ளது அமெரிக்கா.

இது மட்டும் இல்லாமல் இவரை எந்த நாட்டிலும் தஞ்சம் புக அனுமதி அளிக்க கூடாது / அகதி / மற்றும் அரசாங்கங்கள் இவருக்கு அந்த நாட்டின் வழியே செல்ல அனுமதிக்க கூடாது எனறெல்லாம் கூறினாலும் இந்த முறை பல உலக நாடுகள் அமெரிக்காவின் வேண்டுகோளை மதிக்கவில்லை.

இதற்கிடையில் ஸ்னோடன் ஹாங்காங்கில் இருந்து நேராக மாஸ்கோ வந்திறங்கி செர்மாட்டேவோ என்னும் விமானத்தளத்தின் டிரான்ஸிட் எனப்படும் இடத்தில் 3 நாட்களாய் தங்கியிருக்கிறார்.

இதை உணர்ந்த அமெரிக்கா ரஷியாவுக்கு பிரஷர் கொடுக்க ரஷிய அதிபர் புடின் அவரை கைது செய்து அமெரிக்காவுக்கு அனுப்ப முடியாது என திட்டவட்டமாக கூறிவிட்டார்.

அதே சமயம் இவரின் பாஸ்போர்ட் கேன்சல் செய்யபட்டிருக்கும் போது அவர் எப்படி விமானத்தில் அனுமதிக்கபட்டார் என அமெரிக்கா கேட்டதற்க்கு இவர் ஈக்குவேடர் அகதி பெர்மிட்டில் தான் இங்கு வந்திறங்கியுள்ளார் என ர்ஷிய அரசாங்கம் கூறியிருக்கிறது.

அது மட்டுமல்ல இவர் ஈக்குவேடர் நாட்டில் அகதியாக குடியேறுவார் என எதிர்பார்க்க படுகிறது. இதனால் ஏற்கனவே ஈக்குவேடர் அதிபர் ரஷியாவில் வேறு ஒரு பணிக்காக இந்த வாரம் வர இருப்பதால் அது வரை இவர் நோ மேன் ஐலான்ட் எனப்படும் டிரான்ஸிட் ஏரியாவில் இருப்பதால் இவருக்கு எந்த ஒரு சட்டதிட்டமும் செல்லாது.

இதை டெர்மினல் என்ற படத்தில் டாம் ஹேன்க்ஸ் எப்ப்டி நியூ யார்க் ஜே எஃப் கே விமானத்தளத்தில் பல நாட்களக இருந்திருந்தாரோ அதே முறையில் தான் இவரும் இப்போது ர்ஷியாவில் இருந்தார்.

இவர் எந்த ஒரு விமானத்தில் ஏறினாலும் அமெரிக்கா அதை தடுத்து இவரை நாடு கடத்த முடியும் என்பதால் ஈக்குவேடர் அதிபர் செல்லும் விமானத்தில் இவர் பறந்தால் ப்ரோட்டாகால் படி இவரை ஒன்றும் செய்ய இயலாது.

இதற்கிடையில் இவர் எவ்வளவு சீக்கிரம் செல்லுகிறாரோ அவ்வளவு நல்லது என ர்ஷிய அதிபர் புட்டின் இதற்க்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் ரஷியா பல தகவல்களை அவரிடமிருந்து பெற்றிருக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் சிலர் இவர் இங்கு இல்லவே இல்லை என சொல்கின்றனர் ஆனால் பலர் அவர் மாஸ்கோ ஏர்போர்ட்டில் இருப்ப்தை பார்த்திருக்கின்றனர்.

இதன்மூலம் மீண்டும் அமெரிக்கா ரஷியா மோத்க்கொள்ளும் எனத் தெரிகிறது.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X