இறந்த சிலந்திக்கு உயிர் கொடுத்த விஞ்ஞானிகள்: Robots ஆக மாற்றி அசத்தல்- எப்படி சாத்தியம்?

|

இறந்த சிலந்திகளை அமெரிக்க விஞ்ஞானிகள் ரோபோக்களாக மாற்றி இருக்கின்றனர். இதையடுத்து இறந்த சிலந்திகளை வைத்து அதன் உடல் எடையை விட 130% அதிகமாகவும் அல்லது அதற்கும் அதிகமான எடையுள்ள பொருட்களை தூக்க வைக்கும் சோதனையில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

ரோபோவான நெக்ரோபோடிக் சிலந்திகள்

ரோபோவான நெக்ரோபோடிக் சிலந்திகள்

இறந்த சிலந்திகளை ரோபோக்களாக மாற்றுவது எப்படி என்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த ரோபோக்களுக்கு "நெக்ரோபோடிக் சிலந்திகள்" என பெயரிடப்பட்டிருக்கிறது. இந்த முயற்சியில் இறந்த சிலந்திகளின் உடல்கள் இயந்திரம் போன்று செயல்படுகிறது.

உடல் எடையை விட அதிகம் உள்ள பொருட்கள்

உடல் எடையை விட அதிகம் உள்ள பொருட்கள்

90ஸ் கிட்ஸ் முதல் 2கே கிட்ஸ் வரை அனைவரிடமும் பிரபலமடைந்த திரைப்படம் ஸ்பைடர் மேன். இந்த திரைப்படம் பார்க்காதவர்கள் மிகவும் சொர்ப்பம்.

இந்த திரைப்படத்தின் மூலம் தான் சிலந்திக்கு இவ்வளவு பவர் இருக்கிறது என்பதை பலரும் அறிந்திருப்போம். இந்த திரைப்படத்தில் ஒரு வெள்ளைக்கார மேடம் "சிலந்தி அதன் உடல் எடையை விட பல மடங்கு அதிகம் உள்ள பொருட்களை தூக்கும் தன்மை கொண்டது" என கூறுவார்.

அது தற்போது நிரூபனமாக்கப்பட்டுள்ளது. அதுவும் சாதாரணமாக இல்லை இறந்த சிலந்திகளை வைத்து இது சாத்தியமாக்கப்பட்டிருக்கிறது.

இறந்த சிலந்திகள் எப்படி ரோபோவாக மாற்றப்பட்டது?

இறந்த சிலந்திகள் எப்படி ரோபோவாக மாற்றப்பட்டது?

அமெரிக்காவின் ரைஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், அறிவியல் இதழ் ஒன்றில் இந்த பரிசோதனை குறித்த அறிக்கையை வெளியிட்டனர். இதில் இறந்த சிலந்திகள் எப்படி ரோபோவாக மாற்றப்பட்டது, இதை எப்படி அதிக எடை தூக்கப் பயன்படுத்தப்படுகிறது என்பதை விளக்கி இருக்கின்றனர்.

உடல்களுக்குள் செலுத்தப்படும் காற்று

இறந்த சிலந்திகளின் உடல்களுக்குள் காற்றை செலுத்தி இந்த செயல்பாடு நடத்தப்படுகிறது. இறந்த சிலந்தியின் உடலுக்குள் காற்றை செலுத்தி சிலந்தியின் கால்கள் செயல்பட வைத்து பொருளை தூக்க வைக்கப்படுகிறது.

அதேபோல் இதுகுறித்த வெளியான தகவல்படி, இந்த கண்டுபிடிப்பு மூலம் பூச்சிகளை பிடிக்கவும், மைக்ரோ எலெக்ட்ரானிக்ஸ் சிப்களை துல்லியமாக பொருத்தவும் முடியும் என கூறப்பட்டுள்ளது.

சிலந்தியின் இயற்கைக் குணம்

சயின்ஸ் அலர்ட் தகவலின்படி, ஆராய்ச்சியாளர்கள் இந்த உருவாக்கத்திற்கு "நெக்ரோபாட்டிக்ஸ்" என பெயரிட்டுள்ளனர்.

ரைஸ் பல்கலைக்கழக பொறியியல் பேராசிரியர் டேனியல் பிரஸ்டன் வெளியிட்ட செய்திகுறிப்பில், சிறிய அளவிலான சிலந்தியின் இயற்கைக் குணமே அதன் உடல் எடையை விட அதிக எடைக் கொண்ட பொருட்களை தூக்கும் தன்மை ஆகும்.

சிலந்திக்கு இருக்கும் தனித்துவ குணம்

சிலந்திக்கு இருக்கும் தனித்துவ குணம்

சிலந்திகளானது பிற பாலூட்டிகளை விட மாற்றான குணம் மற்றும் வடிவமைப்பைக் கொண்டிருக்கிறது.

ஹைட்ராலிக்ஸ் தொழில்நுட்பம் போன்று சிலந்திகள் தனது எட்டு கால்களையும் பயன்படுத்துகிறது.

ஹைட்ராலிக்ஸ் போன்று எப்படி செயல்படுகிறது என தெரியுமா?.

சிலந்தியின் தலைக்கு அருகில் ஒரு அறை இருக்கிறது. இது சுருங்கி விரிந்து கால் மூட்டுகளுக்கு ரத்தம் அனுப்பப்படுகிறது. சிலந்தி தனது கால்களை பயன்படுத்துவதற்கு ஏற்ப ரத்த ஓட்டங்கள் செலுத்தப்படும். அதாவது ஹைட்ராலிக் பிரஸர் பயன்முறை போன்று இது செயல்படுகிறது.

பிரதானமாக பயன்படும் ஹைட்ராலிக் முறை

பிரதானமாக பயன்படும் ஹைட்ராலிக் முறை

சிலந்தி இறந்த பிறகும் இதே ஹைட்ராலிக் முறையை பயன்படுத்தி தான் அதை ரோபோவாக ஆராயச்சியாளர்கள் செயல்பட வைத்துள்ளனர்.

சிலந்தியின் மூளைக்கு அருகில் உள்ள புரோசோமா அறைக்குள் ஒரு ஊசியை ஆராய்ச்சியாளர்கள் செருகினர். பின் சூப்பர் பசையை பயன்படுத்தி ஊசியை அந்த இடத்திலேயே நிலை நிறுத்த செய்தனர்.

இதன்பிறகு, சிரிஞ்ச் வழியாக காற்று செலுத்தப்பட்டது. இதன்மூலம் ஒரு நொடிக்கும் குறைவான நேரத்தில் முழு செயல்பாடுகளையும் விஞ்ஞானிகள் நிறைவு செய்தனர்.

ரத்தத்தின் அழுத்தம் போன்று காற்றின் அழுத்தம்

ரத்தத்தின் அழுத்தம் போன்று காற்றின் அழுத்தம்

அதாவது சிலந்தியின் மூளைக்கு அருகில் உள்ள அறையில் ஆராய்ச்சியாளர்கள் காற்றை செலுத்தி ஹைட்ராலிக் முறையில் இதை செயல்பட வைத்தனர். உயிருடன் இருக்கும் போது ரத்தத்தின் அழுத்தம் மூலம் செயல்படும் சிலந்தி, இறந்த பிறகு ஆராய்ச்சியாளர்கள் செலுத்தும் காற்று மூலம் செயல்படுகிறது.

வெற்றிகரமாக நடத்தப்பட்ட சோதனை

வெற்றிகரமாக நடத்தப்பட்ட சோதனை

இறந்த சிலந்தியை வைத்து பொருட்களை தூக்கவும் இடமாற்றம் செய்யவும் பயன்படுத்துகின்றனர். பல்வேறு பொருட்களின் மூலம் சிலந்திகள் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது.

சிலந்திகள் பொதுவாக தன் உடல் எடையை விட 130%க்கும் அதிகமான எடையுள்ள பொருட்களை தூக்கும், சில சமயங்களில் அதற்கும் அதிகமாக தூக்க முடியும் என சோதனை மூலம் தெரியவந்திருக்கிறது.

சிறிய அளவான சிலந்திதான் பெஸ்ட்

சிறிய அளவான சிலந்திதான் பெஸ்ட்

ஒரு சர்க்யூட் போர்டில் இருக்கும் சிப்பை இந்த இறந்த சிலந்திகள் மூலம் ரிமூவ் செய்யவும் பொருத்தவும் முடியும் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சோதனையில் கூடுதலாக ஒரு தகவலும் கிடைத்திருக்கிறது. சிறிய சிலந்திகள் அவற்றின் அளவுடன் ஒப்பிடுகையில் அதிக எடை கொண்ட பொருட்களை சுமக்கிறது. ஆனால் பெரிய அளவு சிலந்திகளால் அதன் உடல் எடை அளவிலான பொருட்களை கூட தூக்கமுடிவதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனிதனால் உருவாக்கப்படும் ரோபோக்கள்

மனிதனால் உருவாக்கப்படும் ரோபோக்கள்

தொழில்நுட்ப வளர்ச்சி என்பது கற்பனைக்கும் அப்பாற்பட்டு வளர்ந்து வருகிறது என்றே கூறலாம். செயற்கை நுண்ணறிவில் தொடங்கி சிறிய விஷயங்கள் வரை அனைத்திலும் தொழில்நுட்பங்களின் பங்குகள் இருக்கிறது.

தொழில்நுட்பங்களின் பிரதான வளர்ச்சியாக ரோபோடிக்ஸ் துறை இருக்கிறது. மனிதனுக்கு தேவையான பணிகளை செய்ய உயிருள்ள மனிதனை விட வேகமும், திறனும் நிறைந்த ஒரு உயிரற்ற மின்னணு கருவி தான் ரோபோ.

மனிதனால் உருவாக்கப்படும் இந்த ரோபோ எந்தெந்த வேலைகளை செய்ய வேண்டும் என்பதை அதனை உருவாக்கும் மனிதன்தான் முடிவு செய்கிறான்.

அதிகரித்து வரும் ரோபோக்களின் தேவை

அதிகரித்து வரும் ரோபோக்களின் தேவை

சில இடங்களில் இயந்திரங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவுகளுக்கான தேவை அதிகரித்து வருகிறது. இதையடுத்து இந்த தேவைகளை பூர்த்தி செய்ய ரோபோக்களும் புதிதாக வடிவமைக்கப்பட்டு வருகின்றன.

அவ்வாறு உருவாக்கப்படும் ரோபோக்கள் செயற்கை நுண்ணறிவு, இயந்திர கற்றல் போன்ற தொழில்நுட்பங்களுடன் மேம்படுத்தப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

ரோபோக்கள் மனிதனும் இணைந்து செயலாற்றும் காலம் வெகு தொலைவில் இல்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

image and Videos: Rice University

Best Mobiles in India

English summary
US Scientists Turned dead spiders in to robots: lift more than 130% wieght

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X